Posts

Showing posts from 2015

என்ன தவம் செய்தனை ? (வெர்சன் 2.0)

Image
துகிலியல் தொழில்நுட்பம் , (அட அதான் டெக்‌ஸ்டைல் டெக்னாலஜி) படிக்கையிலிருந்ததைவிட , அதை வைத்துக்கொண்டு வேலைக்கு போய் லோல் பட்ட அவஸ்தைகள் அதிகம். தூக்கமில்லா இரவுகள்,......தூங்க இயலா இரவுகள்.....இப்படி. என்னைவிட நுட்ப அறிவு இல்லாதவன் எனக்கு மேனே ஜராகி என்னை இழித்தபோதும், கொஞ்சம் கூட 'ஜவுளி' பற்றி தெரியாதவன் என் மீது களங்கம் அடித்தபோதும், நிஜமாகவே வாய்விட்டு அழுதிருக்கிறேன். ஆனாலும் இத்துறையின் ஏற்ற இறக்கங்கள் என்னைப் பாதித்த போதும் என் குடும்ப துறையான ஜவுளித்துறையை விட்டு நான் விலகவே இல்லை. கடந்த 27 வருடங்களாக எனது (காசு வாங்காத) சேவையும் இத்துறையில் இருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நீங்கலாக இந்த வருடத்தின் கடேசி பயிற்சியாக எனக்கு அமைந்தது 'தி சென்னை சில்க்சின்' ஜவுளித்துறை வல்லுனர்களுக்கு ஜவுளி பறிய தொழில்னுட்ப மேம்பாட்டு வகுப்பு. அதன் 'மேனேஜிங் டைரக்டர்' உங்களுக்கு அது தெரியுமா, இது பற்றி விளக்க முடியுமா என்றெல்லாம் 'சக்கை'யாக கேள்வி கேட்டு மடக்க, எனக்கு தெரியும் , முடியும் என்று சொல்வதை தவிர என்னிடம் வேறு பதில் இல்லை. அதுவே எனது பெருமிதமாக ஆனது. …

தொங்கும் மொபைல்கள்.....

ஹேங்க் ஆகுதா உங்க ஆண்ட்ராயிட்?
1.பலவித பயன்பாடுகள் (apps) வேண்டாம். அதிக ஆப்சுதான் நமக்கு ஆப்பே... 2. நாம் போனில் பயன்படுத்தும் ஆப்ஸ்க்கு என்று தனியாக கேச் (cache) உருவாகும். இந்த கேச் நிரம்பி வழிந்தால், போன் உங்களிடன் வழியும்...ஹி.ஹி.. 3. போனில் அடிக்கடி செயல் இழக்கும் பிரச்சனை தோன்றினால் அப்பப்ப அப்டேட் செய்யுங்க... வேற வழி....? 4.நீங்கள் உங்கள் போனில் நெட்டை பயன்படுகின்றீர்கள் என்றால் அதில் அதிக டேப்ஸை திறக்க வேண்டாம்.
அப்படி செய்தால் உங்கள் போனுக்கு 'நெட்டை' எடுக்கப்படும்...முடிஞ்சுது..... 5. மெமொரிகளை கார்டுக்கு அனுப்புங்க.... 6. ஆடிக்கிட்டிருக்கும் அனிமேஷன் வால்பேப்பர் இருந்தா, சுண்ணாம்பு அடிச்சிருங்க... 7. அப்பப்ப டாஸ்க் மேனேஜர் (உங்கள் மனைவியை சொல்லவில்லை) பார்த்து, பேக்கிரவுண்ட் செய்லிகளை மட்டுப்படுத்துங்க.... 8. முடிஞ்ச அளவுக்கு 'ரேம்' காலியா இருக்கட்டும்....அது காலியா இருக்கற வரை நீங்க ஜாலியா இருக்கலாம்...

கவர்மெண்டு கண்டிஷனும், கமலஹாசன் கமெண்ட்டும்....

கமல்ஹாசன் சொன்னாலும் சொன்னார், ‘கவர்மெண்ட் சரியில்லை’ என. குனிதல் மற்றும் கும்பிடு போன்ற வேலைகளை விட்டுவிட்டு அதற்கு பதில் சொல்லியிருக்கிறார் அமைச்சர் ஓ.பி.  இவர்தான் பொதுப்பணித்துறை அமைச்சர் என்பது பின்குறிப்பு.......அதுவும் நான்கு நாட்களுக்குப்பிறகு “ நீவிர் பெரிய நடிகர் என்பதால் கேட்டுக்கொண்டு சும்மாயிருக்க முடியாது” என ஏன் லேட்டாக எச்சரிக்கை பதில் விடுத்தார் என்பது சூரியனுக்கே வெளிச்சம். “சரி சும்மா இல்லாம என்னா பண்றதா உத்தேசம்?” என கமலாசன் நற்பணி இயக்கத்தினர் கேட்டால் அடுத்த ஆபரேசன் பற்றி பதில் எப்போது சொல்வார் என தெரியவில்லை.
ஆனால் பாருங்கள் கருப்பையா சொன்ன 40% கமிசனுக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. அப்படியானால் அதை ஏற்றுக்கொள்ளுகிறார் என அர்த்தமா எனத் தெரியவில்லை.
சரி..... முதல் கட்ட மழை வெள்ளம் வந்து வற்றியபோது கூட எந்த அமைச்சரும் வரவில்லை.முதல்வரும் கட்டங்கடேசியில் வேனில் இருந்தபடியே (கோவன் கோவமாய் சொன்னமாதிரி – கார் கூட நனையாமல்) வேடிக்கை பார்த்தார் என்றால் கவர்மெண்ட் கரெக்டாக இயங்குகிறது எனக் கொள்ளலாமா?
இரண்டாம் கட்டமாக பெருமழை வந்தபிறகும், தன்னார்வ தொண்டர்கள், அமைப்புகள் களம் இற…

வரம்

Image
நீ பிறந்ததோ ராமேஸ்வரம் ! உன்னை பெற்றதே இந்த தேசம் பெற்ற வரம் !!
மசூதிகளின் மகனாய் நீ தவழ்ந்திருந்தாலும் விபூதிகளின் மீது உனக்கு விமர்சனமில்லை !
அத்தனை மதங்களும் உனக்கு சமம் – எனவே தான் ‘மொகல் கார்டனில்’ எப்போதும் உன்முகம் !
எம்.ஜி.ஆர். போன இடத்துக்கு பின்னொரு நாள் நம்பியாரை அனுப்பினோம் ; அவர் அவரின் ரசிகன் என்பதால் ! MSV போன இடத்துக்கு எப்போதோ  SLV அனுப்பிவிட்டாய் – அது நீ இசை ரசிகன் என்பதாலா?
‘மக்கு நீ’ என மறுதலிக்கப்பட்டவர்களும் உன் அக்கினி சிறகுகளால் ஆறுதல் பெற்றார்.
APJ  என்கிற உன் பெயரை சாதாரண சாக்பீசால் எழுதுகிற சிறார்களும் ஆபீசு போகலாம் என்கிற கனவுகளை நீ கொடுத்தாய் – இல்லை நீ படைத்தாய் !!
பாவங்களை கழுவிய உன் மண்ணில்தான் சாபங்களின் சக்தியை புரிந்து கொண்டோம். இந்திய சுதந்திரம் பெற்று தந்ததால் அன்று – அவர் – மகாத்மா ! டெக்னிகல் சுதந்திரம் பெற்றுதந்ததால் இன்று நீ மகாத்மா!

உண்மையே சொல்லி தந்த மெய்ஞான மகாத்மாவும் உண்மை அறிவியலை சொல்லித்தந்த விஞ்ஞான மகாத்மாவும் இருக்கிற கூட்டு கலவையால் புன்னகை தேசமாய் புறப்படப் போகிற புதிய இந்தியாவின் 20-20 மேட்ச் இனிமேதான் இருக்கிறது.

டோக்கன்

தோடும் தொங்கட்டானும்
தேர்தல் கால இலவசங்கள்.

மாடும், மடிகணிணியும்
மனு நீதி பேசும் வாசகங்கள்.

ஆடும், அவசரகால லோனும்
அமானுஷ்ய சாகசங்கள்.

புத்தகப்பை,
மத்தியான முட்டை,
மிதிவண்டி எல்லாமே
தேர்தலை நோக்கிய புத்த'கயா'க்கள்.

நீதிக்கும்,
நேர்மைக்குமாய் போராடவில்லை.
தேவையை தேடியும் போராட்டமில்லை.

எளிய எங்களின் போராட்டமெல்லாம்
அந்த
இலவசத்துக்கான டோக்கனை
எப்படியாவது பெற்றிடத்தான் !

பயந்துட்டியா கொமாரு ?

Image
தினக்கணக்கில் தீவனம் தேடும் தியாகிகளாய்தான்  இன்னும் திரிகிறோம் கொமாரு.
ஜனக்கணக்கில் நாங்கள் ‘ஜக்காரியா’ பக்கம். ஊர்ப்பிள்ளைகளுக்கு ஊட்டிவிடும் உத்தமத்தனம்தான் எங்களின் பக்க பலம்.
இனக்கணக்கை எழுதிமுடிக்காத திராவிடமே எங்களின் இன்னுமொரு குறை கொமாரு.
மனக்கணக்கில் கோட்டைவிட்டு பணக்கணக்கை மாத்திட்டையா கொமாரு?
பயக்கணக்கை பார்க்காமல் கொஞ்சம் சுயக்கணக்கையும் பாரு கொமாரு.
மொத்தத்தில் மறுபடியும் கூட்டிக்கழிச்சுப்பாரு கொமாரு. கணக்கு தப்பா வரும்.
கடைசியில் சரியா போகும் !.

என்னை அறிந்தால் -2

Image
“திடீரென்று கடவுள் தோன்றினால் , அவரிடம் ஒரு வரம் என்ன கேட்பீர்கள்?” என்று கேட்டேன். 
கேள்வி விதிமுறைகளுக்கு உட்பட்டது. அது “ பதிலை ‘டக்’குனு சொல்லனும்” .
‘இதுவா உங்க டக்கு?” என்கிற அளவுக்கு நிறைய பேர் தடுமாறித்தான் போனார்கள். என்னதான் கேட்பது கடவுளிடம் ?

ஒரு இளைய விற்பனையாளர் சொன்ன பதில் யோசிக்க வைத்திருக்கலாம் - கடவுளை. “ என்னை நல்லா வச்சுக்க...............அது போதும்”


நம்மை நன்றாக வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும், கடவுளுக்கே கன்ப்யூசன் கற்றுக்கொடுக்க நம்மவர்களால் மட்டுமே முடியும்.
‘என்னை நன்றாக இறைவன் படைத்தான், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு’ என்று தனது பெரும்பாலான உரையை தொடங்குவார் திரு.சுகிசிவம் அவர்கள்.
அந்த......’நன்றாக’ ............த்தான் இங்கே சந்தேகமே!
ஒரு நேர்முகத்தில் கேள்வி, கலந்துகொண்டவரின் மன நிலையை அறியகேட்கப்பட்ட மனோதத்துவக்கேள்வி  : “தினக்கூலி,வாரச்சம்பளம், மாதச்சம்பளம்...இதில் எது உங்களுக்கு வேண்டும்?”
நம்மவரின் பதில் : “தினக்கூலியை தினமும் கொடுத்திடுங்க, வாரச்சம்பளத்தை வாராவாரம் கொடுத்திடுங்க, மாசச்சம்பளத்தை மாசாமாசம் வாங்கிக்கறேன் “
இங்கே ‘கக்கக்க போ’ என கனகச்சிதமா…

சிக்கு புக்கு, சிக்கு புக்கு ரயிலே...!

Image
ரயில் பயணம் என்பது நிஜமாலும் ஒரு ஜாலியான பயணம்தான். அது எனக்கு வாய்த்தது 90 களில்.
திருப்பூரில் ரெண்டு வருடம் வேலை பார்த்தபின்பு, குடும்பத்தில் அடித்த ஒரு சுனாமி என்னை தினசரி ஈரோடு டூ திருப்பூர்  நாடா ட்ரிப் அடிக்க வைத்தது.
அம்மாவை தனியாக வார, மாதக்கணக்கில் விடமுடியாது என்பதால் அதிரடியாக அப்படி ஒரு முடிவினை எடுக்க வேண்டியாகிவிட்டது.
காலை 6.10 கோயம்புத்தூர் பாசஞ்சருக்கு வீட்டிலிருந்து 5.45 க்கே கிளம்பனும் – மதியத்துக்கான சாப்பாட்டுடன்.
அம்மா அசராமல் செய்து கொடுத்துவிட்டாலும், சைக்கிளை மிதித்து, மிதித்து ரெயில்வே ஸ்டேசன் போய்ச்சேர டைம் ஆகிவிடும்.
ட்ரெயினில்தான் ரணகளமே !
ஆறுமணிக்கே வந்துவிடும் சில நண்பர்கள் (ரெயில்வே காலனியிலேயே வீடு) அதிகாலையிலேயே சீட்டுகட்டு போட ஆரம்பித்து விடுவார்கள்.
இங்கே மாங்கு மாங்குன்னு வியர்த்து விறுவிறுக்க ரயில் ஏறும்போது நாக்கு தள்ளும். 
அப்போ பார்த்துதான் மாதாந்திர ரெனிவல் செய்யாதது ஞாபகம் வந்து தொலைக்கும். 
இளங்கோ அல்லது சங்கர் எப்படியும் சீட் போட்டுவைத்திருப்பார்கள் எனும் நம்பிக்கையில் தாமதமாக வரலாம். நம்ம சீட் காலியாக இருக்கும்.
சமயத்தில் கடைசி பெட்டி தெரியும். அடுத…

என்னை அறிந்தால்.....(ஒரு இன்ஸ்டிங்க்ட் தொடர்)

Image
‘அது,இது,எது’ என எது  நாம் பற்றி பேசினாலும் (நீங்கள் விஜய் டி..வி.யை மறந்து விடக்கடவது)   அது எப்போதும் பொது.
ஆனால்,தன்னைப்பற்றி மட்டுமே பேசுவது சுயநலச்சூது.
கொஞ்சம் என்னை பற்றியும், கொஞ்சம் உங்களைப்பற்றியும் பேசுவதுதானே  இருவருக்கும் நியாயபோதை தரும் மது?
பேசுவோமா?
அடிபட்டு ஆஸ்பத்திரி மீண்ட கதாநாயகம் முதல், வாழ்வியல் துன்பங்களில் அடிபடாது 
பரம்பொருளை வேண்ட கிளம்பிய பரமசாதுக்கள் வரை, கேட்டுக்கிளம்பிய கேள்வி இதுதானே?
“நான் யார், இப்ப எங்கிருக்கேன்?” 
இந்தக்கேள்விக்கு விடை தேடி ‘இன்டெர்ஸ்டெல்லர்’ பாணியில் ‘கருந்துளை’ (அதாங்க பிளாக் ஹோல்) வழியாக இன்னொரு கிரகம் நுழைய வேன்டியதில்லை. ஆனால், நம்முள் இருந்தும் இருக்காத ஒரு உள்துளைக்கிரகம் தேடவேண்டும்.
அதுதானே வள்ளலார் தொடங்கி, நமக்கு மாரல்சயின்ஸ் பாடம் சொன்ன வாத்தியார் வரை தேடிச்சலித்த விஷயம்?
ஆனால் இங்கே 916 கேரண்டியாய் ஒரு தகவல். இது சாமி சத்தியமாய் ஆன்மீகத்தேடல் அல்ல. அதற்கான சப்ளை இந்த குரூடாயில் பரம்பரைக்கு தாராளமாகவே கிடைக்கிறது. 
நமது இந்துக்கலாச்சாரத்தில் அல்லது இந்தியக்கலாச்சாரத்தில் ஆன்மீகச் சர்பத்துக்கு சாமியார்களின் சர்க்கரை போதுமானதாக இருந்…

பிசினஸ் சீக்ரட்ஸ்................வெளியே சொல்லலாம் !

Image
ஒரு  வழக்கமான பயிற்சிப்பட்டறையாய் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இதை டிசைன் செய்திருந்தோம், நானும் ராம மூர்த்தியும்.
நிறுவனங்களின் விஷன்,மிஷன் இதை சம்மந்தப்தப்பட்டவர்களே உருவாக்கும்படி சொல்லிக்கொடுத்தோம்.


தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் அதன் உணவு விடுதியில் சாப்பிட சென்ற போது டேபிளுக்கு வர தாமதமானது. தாமதமாய் கொண்டு வந்த சர்வர் அதற்கு மன்னிப்பும் கேட்டு, காரணம் சொல்லி (கொஞ்சம் கருகிவிட்டதால், மீண்டும் தயார் செய்த ) கொண்டு வந்த உணவுக்கு பில் வராது என்றும் அதை, தன் சம்பள்க்கணக்கில் கழித்துக்கொள்வதாயும் விளக்கமளித்தார்.

அடுத்த நாள் காலை, விடுதியின் மேனேஜர் , அவரை அழைத்து நேற்றைய இஅரவின் நிகழ்வுக்கு மன்னிப்பு கோரி , நிர்வாகம் அதற்காக காலை உணவை, தங்கள் பொறுப்பில் அளிக்குமென்றும், அதற்கு அவர் பணம் தரவேண்டாமென்றும் மன்னிப்பு கொரினார். இவருக்கோ ஆச்சாய்யம்., தான் ப்புகார் தராத ஒன்று. அது தவறு என்றாலும் முன்னமே சர்வர் மன்னிப்பு கேட்டும், பில் தராமலும், இன்று நிர்வாகம் மன்னிப்பு கேட்டு மீண்டும் இலவச உணவை அளிக்கும் சயல் ஆச்சர்யம் தந்தது. இப்போது அவருக்கு நிறுவனத்தலைமயை சந்திக்கும் ஆவல் பிறந்த்து. …