Wednesday, February 20, 2013

வேலையை பாருங்க.....!


-விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ( எங்க?எப்போ? எப்பிடி?)

-வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.( எதுக்கு?)

-சில்லறை விற்பனை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது.( இது அரதப் பழசு)
-தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை மாதம் ரூ 10,000 ஆக உயர்த்த வேண்டும்.( கதையப் பார்ரா...)

-தொழிற்சாலைகளில் 12 மணி நேரம் வரை உயர்ந்து விட்ட வேலை நாளை 8 மணி நேர வேலை நாளாக மறுபடியும் மாற்ற வேண்டும்.( அதுவே சட்டமாயிடுச்சு)


-ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும்
( கேசு போட்டுகிட்டுத்தான இருகோம்னு சொல்வாங்க)
-அமைப்பு சாரா துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.( அமைப்பே சந்தேகமா போயிட்டு இருக்காம்)

-பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.( அமைச்சரை சந்திச்சு பேசுனீங்களா?)

-வங்கிகளை நிதிச் சந்தையில் செயல்பட அனுமதிக்கக் கூடாது.
தனியார் நிறுவனங்களை வங்கிகள் ஆரம்பிக்க அனுமதிக்கக் கூடாது.( சிதம்பரம் இப்ப நிதி துறைல இல்ல...)
-பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.( போங்கப்பா...போயி புள்ளங்கள படிக்க வையிங்க...)

என்ற கோரிக்கைகளுடன் இன்று வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது...தெரியுமா ஜனங்களே?

Tuesday, February 19, 2013

தூக்கு.............தூக்குங்க!தூக்கு கயிரு தொங்கிக் கொண்டிருக்கிறது ! நான்கு பேர் அதன் முன்னே......!

மனித உயிர், அதன் மகாத்மியம், மனிதனேயம்,மனித உரிமை....இன்னும் என்னவெல்லாமோ பேசி.............அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை என்றதும் குதி,குதி என்று குதித்தவர்கள், இப்போது மீசை மாதையனுக்கு அதே தண்டனை என்றால் ஒன்றும் பேசாமல் இருக்கிறார்களே?

இந்திய பாராளுமன்றத்தை தாக்கிய அப்சல் குருவை ஏன் மன்னிக்கக் கூடாது எனக் கேட்டவர்களே........

கண்மூடித்தனமாக மக்கள் கூட்டத்தைப் பார்த்து சுட்டு தன் வெறித்தனத்தை காட்டிய கசப்பை ஏன் மன்னிக்கக் கூடாது எனக் கேட்டவர்களே.......


இங்கே தமிழக போலீசாரால் அல்லோல கல்லோலப் படுத்தப்பட்ட ஏழைஜாதி நான்குபேர் உயிர் போகும் தருவாயில்...............

வார்த்தை வருமா உங்கள் வாயில்? 

Wednesday, February 06, 2013

காதலாகி ...கசிந்து !

எதுக்கு இந்த நேரத்தில்?

தெரியவில்லை, ஆனால் எழுதத் தோன்றுகிறது.

அவரை முதன் முதலில் சந்தித்த போது, "வாங்க வைப்ரண்ட் வேலுமணி" என்று எனக்கு புரியாத ஆங்கிலப் பதத்தில் வரவேற்றார்.பாராட்டுகிறார் என்று மட்டும் புரிந்தது.

"நீங்க ரொம்ப லேட்டு" என்றார் பொதுவாக - நான் எப்போது கால விரயம் செய்பவனல்ல.

பிற்காலத்தில் என்னிடம் பிடித்த / பிடிக்காத குணமான  என் 'நேரக் கொள்கை ' யே இருவருக்கும் பொதுவானதாக இருந்தது.

அவர் சொன்னது -ஜே.சி.ஐ. இயக்கத்திற்கு என்று- பிற்பாடு உணர்ந்தேன் 

ஒரு அறிமுக உரை எழுத எத்தனித்த போது,"சார் ( அவர் என்னிலும் இளையவர் என்றாலும் ,
இப்படியே அழைப்பது என் வாடிக்கையாகி விட்டது)  இதை இப்படி எழுதலாமா என கேட்டதற்கு
 "இங்க பாருங்க இந்திய பாரளுமன்றம் தராத சுதந்திரத்தை இந்த ஜே.சி.ஐ. அமைப்பு உங்களுக்கு தருது. நீங்க உங்க மனசில நினைசத்தை எழுத இதை விட  வேறு சரியான இடம் கிடையாது" என்றார். கேட்கணுமா?


நான் பேசியதையோ , எழுதியதையோ முறையே கேட்டாளும்,படித்தாலு யும் உடனே  அழைத்தோ , சம்மந்தப் பட்ட இடத்திலோ இருந்து கமெண்ட் கொடுப்பது அவர் பாணி .

அது ' நல்லாருந்திச்சி ' என்றோ , 'சூப்பர்' என்றோ  அளவீடுகளில் இராமல் , 'கேட்கணுமா?', என்றும், 'பட்டைய கெளப்பிட்டீங்க ' என்பது மாதிரியும் superlative அடைமொழியாய் இருக்கும் 

'பாக்கியராஜ் மாதிரி ' என்று அவரை என் நினைவகத்தில் சேமித்து வைத்திருக்கிறேன் .

 தன்னை தானே நக்கல் அடித்து பேர் வாங்கிக் கொள்வதில் புத்திசாலி மட்டுமல்ல.......சொல்லவந்ததை சிக்கலான காமெடிகளால் 
கொஞ்சம் காம நெடிகளொடு  கலந்து தருவதிலும். .....சந்தோஷம் என்றும் அவர் பேச்சில் .

ஒரு சமயம் நான் எனது 'அம்மா'  கவிதையின் தாக்கம் என்னுடன் இல்லாத எனது அப்பா வரை சென்றது பர்றி 
சற்றெ தழு தழு த்து பேச..." யோவ் என்னையா இது, உண்னை கல் நெஞ்சன்னு நினைசிருன்தேன், இப்படி கலஙறெ .என்ற போதுதான் என் பிம் பம அவர் மனதில் எப்படி இருக்கிறதென்பது புலப்பட்டது.

இயக்கத் தேர்தலில் அவர் பின்னடைவு கண்டபோது , அவருக்கே நான் எழுதிய கவிதை , படித்தவர்களியெல்லாம் அழ வைத்தது 
என்பதில் எனக்கு பெருமை ஏற் படவில்லை . மாறாக அதிலும் ஒரு கிரியேட்டிவிட்டியை கண்டு பாராட்டிய  கலைஞ்னை  எனக்கு அந்த சம்பவம் அறிமுகம் செய்தது.

தனக்கு பின் 'காமெடிப் பேச்சிற்கும் , எழுத்திற்கும் '  நான் சரியானவன்  என்பதை அவர் உணர்ந்ததை அவர் எனக்கு செய்த சிபாரிசுகளில்  
கொண்டேன் .

முகத்திலும், சிந்தனையிலும்  சிரிப்பை எத்தனை பேர்  சேர்ந்தாற்போல் வைத்துக் கொள்ள முடிகிறது ? ( எனக்கு முடியாதுப்பா ?)

அது சிலருக்கு மட்டுமே  வாய்க்கிறது .....!


ஆர் . எஸ். பி ர பு   அப்படி  ஒருவர்  மட்டுமல்ல ,   அவர்களில்  ஒருவர்  கூட !