Posts

Showing posts from 2017

2017...tip of the iceberg....

இந்த வருடம் மேலும் ஒரு வருடமாக இல்லாமல்.... பல மாற்றங்களை எனக்குள் தந்திருக்கிறது...உணர்வுகளுடன் !
இந்த ஜனவரியில் Corporate Training தான். Fun & games, School Project எல்லாம் இல்லையென முடிவெடுத்தேன். தொடர்கிறது.
@Subhas Skill Academy யுடன் இணைந்து திருப்பூரில் Apparel Merchandising க்கான சிறப்பு பயிற்சி வகுப்பு உருவாக்கியது. வாரம் இரண்டு விதமான பேட்ச்.,..நடக்கிரது.
திருப்பூர் தொழில்னுட்ப பணியாளர்களுக்காக நண்பர் சுரெஷ்பாபு உருவாக்கிய

28 நாள் = ஒரு மாதம்

airtel owner, aircel owner, ரெண்டுபேருக்கும் நரகம்தான் என்று முடிவாச்சாம். இருந்தாலும் சில பிரீபெயிடு ஆஃபர் காரணமாக, ஒரு மாதம் மட்டும் சொர்க்கத்தில் தங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாம். சொர்க்கத்திலிருந்து 28 ஆம் நாள் இருவரும் வெளியேற்றப்பட்டனராம்.

அரசியல்வாதிகளுக்கு பயிற்சி

Image
பள்ளி,கல்லூரிகளில் பயிற்சி வகுப்பெடுப்பது ஒருவகை;
தொழில் நிறுவனங்கள், சில்லறைவிற்பனை நிறுவனக்ளுக்கு இன்னொரு வகை;
பெரிய கார்ப்பரேட்......................கொஞ்சம் மாறுபாடான வகையில் அவர்களுக்கு பயிற்சி தரவேண்டும்.ஆனால் கடந்த  ஜூலை 15, 16 தேதிகளில் எனக்கு முற்றிலும் புதிய அனுபவம்; ஒரு அரசியல் கட்சிக்கு.

அதுவும் தேர்தல் சாராத இயக்கமாய் ஆரம்பித்து, தேர்தல் அரசியலுக்குள் நுழைய எண்ணும் கட்சிக்கு.அதன்,  தலைவரே பெரிய பேச்சாளர். எழுத்தாளர் என்பது இங்கே பின்குறிப்பு. கொஞ்சம் 'கிடுகிடு' கவலை நெஞ்சுக்குள் எழுந்தாலும், "உங்களின் அரசியல் பார்வை, கவலை  மற்றும் அது சார்ந்த சிந்தனைகளை கவனித்தே , இப்பொறுப்பை அளிக்கிறோம்" என்றார்கள். இன்னும் பயமாகி விட்டது.

காரணம் எனது அரசியல் பதிவுகளில் இதே கட்சியை - அதன் தலைவரை ஏகத்துக்கு விமிரிசித்திருக்கிறேன்.
கர்மவீரர் அவர்களின் பிறந்த நாளில் இனிதே தொடங்கியது பயிற்சி. முதல் நாளே Dress Code - கல்ர் பேண்ட், வெள்ளை சட்டை. அடையாள அட்டையுடன் இருக்கை.எப்போதும் எனது பாணி , கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தான். அதை இங்கும் கைவிடவில்லை. கைபேசி ஒலித்தால் ரூ.250 தண்டம்…

கசங்காத காலண்டர்

Image
என் பள்ளித்தோழனை சமீபத்தில் சந்திக்கும் பாக்கியம் கிட்டியது. அவன் ஈரோட்டில் பிசியாக இருக்கும் ஒரு மத்திய அர்சுப்பணியாளன்(ர்).
“என்னடா பண்ணிட்டு இருக்கே? பார்த்து ஒரு 20 வருசமாவது இருக்காது” என்று என்னை கேட்டான். பத்தாம் வகுப்பில் தோழன்.
“ அதிகமா இருக்கும். டெக்ஸ்டைல் லேப் வச்சிருக்கேன்.....ஜேசியில பட்டயம் வாங்கின பயிற்சியாளரா இருக்கேன்..”
“அப்போல்லாம் நிறைய்ய எழுதுவியே..கவிதை,,கதைன்னு...?”
“இப்பவும்தான் எழுதறேன்.......எனக்கு ஒரு ப்ளாக் இருக்கு, முகனூல்லயும் ஆக்டிவா  இருக்கேன்..”
“ நீதான் படிக்கிற காலத்துலயே செம குறும்புக்காரனாச்சே..ஃபேஸ்புக் உனக்கு தீனி போடும்.... நான்லாம் முகனூல்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணதோட சரி. அப்புறம்....நீ சரியான சோசியல் ஆக்டிவிஸ்ட் ஆச்சே...அப்பவே? இப்ப எப்படி?
“இப்பவும்தான்.......ரோட்டரி கிளப்ல செயலரா இருக்கேன். மக்கள் சிந்தனை பேரவைல உறுப்பினர். தமிழக அரசோட பாலிடெக்னிக் சிலபஸ் கமிட்டி மெம்பர். ஈரோடு சிறுதொழில்கள் சங்க உறுப்பினர்...அதுல வர மாதாந்திர செய்திபத்திரிக்கைக்கு ஆலோசகர். கோயம்புத்தூர்ல இருந்து வெளிவரும் ‘வெற்றிமுழக்கம்’ பத்திரிக்கைல தொழில்முனைவோர்களுக்குன்னு ‘என்…

சகலகலா டாக்டர்....

Lady : மேஐகமின்டாக்டர் Dr : வந்துட்டீங்களேஉட்காருங்க! Lady : தேங்க்யூ! Dr : சொல்லுங்க! Lady : என்னது? Dr : என்னபிரச்னைன்னுசொல்லசொன்னேன்! Lady : ஓ! பையனுக்குஒடம்புசரியில்லை! Dr: பேர்என்னம்மா? மஞ்சுளா! Dr : என்னதுஆம்பளப்பிள்ளைக்குமஞ்சுளான்னுபேர்வெச்சிருக்கீங்க? Lady : டாக்டர்அதுஎன்பேரு! Dr : பையன்பேரசொல்லுங்கம்மா! Lady : குஞ்சு! Dr: மொத்தமேஅதுதான்பேரா? Lady : இல்லை. அதுநாங்கவீட்டுலகூப்பிடுறபேர்! Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்குஎன்ன? Lady : லூஸ்மோஷன்! Dr : எப்படிப்