Posts

நாம ஒண்ணு நினைச்சா....

சாயங்காலம்.

வெட்டவெளி பாரின் ஒரு இருட்டு மூலையில் தனியாய் அமர்ந்து தன் முன் வைக்கப்படிருந்த பீர் கோப்பையையே சோகமாக வெறித்துக்கொண்டிருந்தான் குமார்.

திடீரென நுழைந்த இரு பைக்கர்கள், வண்டியை சைட் ஸ்டேண்ட் இட்டு, நேராக குமார் டேபிள் அருகில் நுழைந்து, அவன் எதிரில் இருந்த பீரை எடுத்து 'கடக், கடக்'கென அருந்தி முடித்து எக்காளமாக சிரித்தனர்.

"எப்புடி?"
குமார் கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.

"யொவ்...இதுக்கெல்லாமா அழுவாங்க.....டேக் இட் ஈசி.....இதெல்லாம்  நாங்க செய்யற த்ரில் விளையாட்டு. திடீர்னு நுழைவோம். அங்கே எதாவ்து ரவுசு பண்ணுவோம். எதிர்வினையை பார்ப்போம். கவலையே படாம போயிக்கிட்டே இருப்போம்..."

குமார் அழுகையை நிறுத்தவில்லை..." சே...என் நாளே சரியில்லை...."

" ப்ச்.....இப்ப என்ன...? டேய்  மூணு பீர் ஆர்டர் பண்ணுடா.....இவரோட சேர்ந்து சாப்பிடுவோம்...என்ன பிரதர் வேறு எதும் பிரச்சினையா?"

கண்களை துடைத்துக்கொண்ட குமார், " அதுக்கில்லை....இன்ன்னிக்கு மொத்தமாவே செரியில்ல....காலைல வீட்லேர்ந்து கிளம்பும்போதே லேட்டு, அப்படியே பங்க் போயி பெட்ரோல் போட்டால் கி…

அசராத அர்ஜுனன்...

Image
குருத்துரோகிகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிற நாட்டில், குருவுக்கு தன் திறமைகளை காணிக்கையாக்கிய மாவீரன் அர்ஜுனன் பற்றி பேசப்போகிறோம்.

அப்படி ஒருசமயம் அர்ஜுனனின்குரு துரோணாச்சாரியாவின் மோதிரம் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.அப்போது அவருடன் பாண்டவர்களும், கௌரவர்களுமாய் மாணவ்ர் பலர் இருந்தனர். மோதிரத்தைஎடுத்துத் தருமாறுஅவர்மாணவர்களைக் கேட்டார். கௌரவர்களும்,பாண்டவர்களும்பெருமுயற்சி செய்துமுடியாத நிலையில்அந்தப்பொறுப்பை அர்ஜுன்ன் ஏற்றான். எடுத்தான் தன் அம்பராவை. தொடுத்தான் வில்லை.கொடுத்தான்அம்மோதிரத்தைஆச்சாரியாரிடம். மற்றொரு நாள், குருநிற்கும் மரமொன்றைக்காட்டி, அதன்அத்தனை இலைகளையும் துளையிடுமாறு கூறினார். அனைவரும் திகைக்கும்படி அம்புகள் எய்து அத்தனை இலைகளிலும் துளை ஏற்படுத்தினான்.

வில்லுக்கு விஜயன் எனப் பேரெடுத்தவனல்லவா?பின்பு ஒருநாள் துரோணர் ஆற்றில் குளிக்கும் போது அவரது காலை ஒரு முதலை கவ்வியது.. அதற்குத்தெரியுமா அவர் அர்ஜுன்னின் குரு என்று. வலி தாங்காமல்துரோணர் கதறினார்.பார்த்தான் அர்ஜுன்ன்.ஒரே அம்பில் முதலையின் தலையைத் தனியாக துண்டித்து துரோணரைக் காப்பாற்றினான். துரோணர் மார்போடு அருச்சுனனை அணைத்…

பிராண்டிங் – சில ‘அத்து’மீறல்கள்

Image
ஆதவ் கீர்த்தனாம்பரத்திலே, கலியுகத்திலே……..என்றாரம்பித்தால் நீங்கள் அடுத்த பக்கம் இருக்கிர விளம்பரத்தை ஆராயும் வாய்ப்பிருப்பதால் நேரடியாய் விஷயத்துக்குப் போகலாம். எதற்கும் இன்னுமொரு முறை தலைப்பை படித்துவிடுங்கள்.
ஆச்சா….?  பிராண்டிங்  ( Brand )–என்றாலே அது பிராடிங் ( Fraud ) தான் எங்கிறீர்களா? சரியாய்ப்போச்சு போங்கள். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் ஆன கதைதான்.
நான் இங்கே சொல்ல வந்த அத்துமீறல்கள் சற்றே வேறு மாதிரியானவை. சில அத்து(Border)களை மீறவேண்டும் என்பதே !
ஈரோட்டில் ஜவுளிக்கடைகளில் லுங்கிகளின் மீது ‘பிராண்ட் லேபிள்’ ஒட்டப்படுவது உண்டு. என்ன பிராண்ட்? ஏதோ ஒரு பெயர் அவ்வளவுதானே , பிராண்ட்? கடையின் பெயரின் முதல் எழுத்தெல்லாம் சேர்ந்து ஒரு ‘எஸ்’ அவ்வளவுதான். அதாவ்து K.T.Textiles என்றால், KTT'’. அல்லது  ‘kay Tee Tee பிராண்ட் லுங்கிகள்’ என உலகலாவிய பெயர் வைக்கப்பட்டிருக்கும். இன்னுமொரு ஆப்சன் இருக்கும். ‘காக்கினாடா, கனடா பக்கம் வாடா’ என்கிற ரைமிங்கில் ‘குட்டி நட்சத்திர லுங்கிகள்’ என்றோ, ‘குரங்கு மார்க் கைலிகள்’, ‘சங்கு சக்கர வேஷ்டிகள்’ என்றோ த்ரேதா யுகம் தொட்டு வழங்கி வரும் பெயராய்ப்பார்த்து …