Posts

Showing posts from January, 2010

வாய்மையே (பலசமயம்) வெல்லும்

Image
மலை ஏறி இறங்கினர் ஐந்து இளைஞர்கள்; விடாத மழையினால் ஒதுங்க ஒரு குடிசையை அணுகினர். "இந்த மழை இரவெல்லாம் தீராது-இன்றிரவு இங்கே தங்கி விடிந்ததும் செல்லுங்கள்"என்றார் அந்த குடிசைக் கிழவன்.தேநீர் தந்து உபசரித்தவள் கிழவனாரின் பேத்தி; வஞ்சக நிழல்படியாத பிஞ்சு; பூமியின் மீதொரு புதையலாய் அவள் அழகு.பரணின் மீது படுக்கச் சொல்லி அவர்களுக்கு ஒரு இரவுக்கான ஆதரவு தருகிறது அந்த குடிசை.அடர்ந்த மழை ஓய்ந்து , விடிந்ததும் விடை பெறுகின்றனர் அந்த ஐவர் குழு.கதவின் பின்னால் கண்ணீரோடு அந்தப் பேதை; கண்கள் இரண்டிலும் ஒரே கேள்வி;"நேற்றிரவு என் பெண்மையை தட்டுத் தடுமாறி, திருடித் திறந்தவன் உங்களைவரில் யார்?'கன்னத்தில் அறைகிறதல்லவா இந்த கன்னடச் சிறுகதையின் உள்ளுறையும் உண்மை ?==== உண்மையை- இந்த மாதிரி உண்மையைத்தான் நாம் எத்தனை முறை மண்மூடி ஒழித்திருக்கிறோம்? நம்மில் எத்தனையோ பேர் அன்றாடம் தொழில் முறையில் உண்மை பேச முடியாமல் தவறி, பின் அந்த பொய்யினைக் காப்பாற்ற மேலும் மேலும் பொய் சொல்லி…பின்னர் இன்று என்ன பொய் சொல்லலாம் என திட்டமிடலிலேயே நாள் போய் விடுகிறது..ஏன் பொய் சொல்ல நேரிடுகிறது?-சரியான கணக்கிட…