Tuesday, March 22, 2016

ஹேங்க் ஆகுதா உங்க ஆண்ட்ராயிட்?

1.பலவித பயன்பாடுகள் (apps) வேண்டாம். அதிக ஆப்சுதான் நமக்கு ஆப்பே...
2. நாம் போனில் பயன்படுத்தும் ஆப்ஸ்க்கு என்று தனியாக கேச் (cache) உருவாகும். இந்த கேச் நிரம்பி வழிந்தால், போன் உங்களிடன் வழியும்...ஹி.ஹி..
3. போனில் அடிக்கடி செயல் இழக்கும் பிரச்சனை தோன்றினால் அப்பப்ப அப்டேட் செய்யுங்க... வேற வழி....?
4.நீங்கள் உங்கள் போனில் நெட்டை பயன்படுகின்றீர்கள் என்றால் அதில் அதிக டேப்ஸை திறக்க வேண்டாம்.
அப்படி செய்தால் உங்கள் போனுக்கு 'நெட்டை' எடுக்கப்படும்...முடிஞ்சுது.....
5. மெமொரிகளை கார்டுக்கு அனுப்புங்க....
6. ஆடிக்கிட்டிருக்கும் அனிமேஷன் வால்பேப்பர் இருந்தா, சுண்ணாம்பு அடிச்சிருங்க...
7. அப்பப்ப டாஸ்க் மேனேஜர் (உங்கள் மனைவியை சொல்லவில்லை) பார்த்து, பேக்கிரவுண்ட் செய்லிகளை மட்டுப்படுத்துங்க....
8. முடிஞ்ச அளவுக்கு 'ரேம்' காலியா இருக்கட்டும்....அது காலியா இருக்கற வரை நீங்க ஜாலியா இருக்கலாம்...

கற்றலின்...............

பேச்சு’ என்பதன் முதற்பகுதி ‘கேட்பது’ என்பதாம்.

சரி..சரி...சீரியசாக ஆரம்பிப்பதாக உத்தேசம் இல்லாத காரணத்தால், நம்ம ஃஸ்டைலிலேயே வருகிறேன்.

‘ஆக்டிவ் லிசனிங்’ என்றொரு பாகம் இருக்கிறது. இந்த வார்த்தையை சொன்னதுமே எனக்கு ரொம்ப வருடங்களுக்கு முன்னால் ஜவஹர் அவர்கள் எழுதிய விஷயந்தான் ஞாபகம் வருகிறது. அது அப்புறம்.உங்களுக்கு நண்பர் யாருடனாவது பேசப்போகும்போதே ‘போட்டு அறுக்கும்’ சிலரின் ஞாபகம் வரலாம். சில பேர் ...

“சுஜாதா புத்தகம் ஒண்ணு லைப்ர்ரில எடுத்தேன்..”

“சிறுகதை தொகுதியா, கட்டுரை தொகுதியா?” என்பார்கள் பதிலாய்.
“எப்படி கரெக்டா சொல்றே”

“உங்க டேஸ்ட் எனக்கு தெரியாதா?....செம மேட்டர் ஒண்ணு அதுல மாட்டிருக்கு, அடுத்த உங்க ட்ரெயினிங்கில், அது இருக்குமே”

“ஆமா, அதுலயும், ஃபிக்சன் கதை ஒண்ணு...”

“பிச்சி எடுத்துருப்பாரே...உங்க வாயாலயே சொல்லுங்க கேப்போம்”

“ புக் தரேன் ..படிச்சி பார்...”

“நீங்க அதைவிட சுவாரசியமா, கொஞ்சம் சேர்த்து சொல்வீங்க......சொல்லுங்க”

சொல்ல ஆரம்பித்தால்......இடையே “இரு இரு கொஞ்சம் முன்னால என்னமோ சொன்னியே என்னது?” என கேட்டு வாங்கி போவார்கள்.

உங்களுக்கு யாருடனாவது கதை அடிக்க விருப்பம் எனறால், அவர் உங்களை பேச வைத்து கேட்பவர் என்று அர்த்தம்.

எனக்கு R.S..பிரபு, தனவேல்  இவர்களுடன் பேசப் பிடிக்கும்...மணிக்கணக்கில். அதிலும் ‘தனவேல்’ என்றால் நாட்கணக்கில்.
இன்னும் ஒருவர் இருக்கிறார். 

மஞ்சு ஆன்ந்த். 

நாம் பேசிக் கொண்டே இருக்கலாம். கேட்டுக்கொண்டே, சிரித்துக் கொண்டே, நடுவில் சின்னதாய் கமெண்ட் மட்டும் அடிப்பார். அவரின் கடேசி கமெண்ட் இப்படித்தான் இருக்கும், “ சார்......சான்சே இல்ல....பிச்சிட்டீங்க”

இன்னும் சிலர்.....வேறு கேஸ்.

இந்த  “மேட்டூர் ரோடு இருக்கில்ல..” என நாம் ஆரம்பித்த்துமே, “எது, அபிராமி தியேட்டர் ரோடுதானே....கிழின்சிது...செம ட்ராபிக்தான். நைட் பத்து மணிக்கு க்கூட K.P.N. வண்டியை குறுக்கே போட்டுகிட்டு ஒரே அலப்பரை. நைட்டுன்னா எப்படி வேணா வண்டி ஓட்டலாமா......அதும்...பிருந்தாவன் வாசல்ல..பழைய புத்தகம்...கொய்யாக்காய்.....கண்ட்தெல்லாம் விக்கிறான்...அப்ப்ப்ப்ப்பா......ஆமா நீ என்ன சொல்ல வந்தே?”

“அதில்லை...நான் என்ன சொல்ல வந்தேன்னா?”

“தெரியுது...அடையார் ஆன்ந்த பவன் கிட்ட நம்மாளுக சொதப்புற ட்ராபிக் விஷயந்தானே...? இவனுங்கலை திருத்தவே முடியாது......இவனுக எதுக்கு கோடு போட்டு அங்க போலீசையும் நிக்க வச்சிருக்காங்க.....லெப்ட் ப்ரீன்னு இன்னும் எவனுக்கும் புரியலை.....சொல்லு....என்ன உன் பிரச்சினை?”

“டேய்....”


கற்றலின் கேட்டலே நன்று. புரிஞ்சா சரி.....

Tuesday, March 08, 2016

என்னை அறிந்தால் -3நாம் நம்மை எந்த அளவுக்கு  நம்மை அறிந்திருக்கிறோம்?

செத்து மேலே போனான் நம்மாளு ஒருத்தன். தீர்ப்பு கொடுக்கும்போது எமன் கேட்கிறார். “ தம்பி உனக்கு  நரகம்தான்னு தீர்ப்பு சொல்றேன். ஆனா ஒரு ஆப்சன். உனக்கு எந்த நாட்டு நரகம் வேணும்?”

நம்ம பயலுக்கு ஒரே கன்ஃயூசன். என்னடா இது, இப்படி ஒரு ஆப்சனா?

சரி வரிசையாக் காட்டுங்க, நான் செலெக்ட் பண்ணிக்கறேன்னான்.ஏன்னா நாம மொபைல் வாங்கும்போது கூட மூணு,நாலு கடை ஏறி- நாலஞ்சு பிராண்டு பார்த்துட்டுத்தான முடிவு பண்ணுவோம் - கடைசில வீட்ல கேட்டுட்டு!

முதல்ல ஜெர்மன் நரகம் காட்னாங்க.

இங்க என்ன விஷேசம்(?)”ன்னு நம்ம பய கேட்டான்.

மொதல்ல உங்கள எலெக்ட்ரிக் சேர்ல ஒரு மணி நேரம் உக்கார வச்சு , கரண்ட் ஷாக் கொடுப்பாங்க; அப்புறம் ஆணிப்படுக்கையில ஒரு மணி நேரம் படுக்க வச்சிடுவாங்க; அப்புறம் சாயங்காலம் வரை ஒரு ரிடையர்டு சாத்தானை 
வரச் சொல்லி சவுக்கடி கொடுப்பாங்க. அதுக்கப் புறம் நைட் ஃபுல்லா நீங்க ஃப்ரீ

கொஞ்சம் டைட் வொர்க்கா இருக்கும் போல?, இது வேலைக்காவாதுன்னு அடுத்த அமெரிக்கா நரகம் பக்கம் போனான் நம்மாளு. ‘இங்கெப்பிடின்னு ஒரு கொக்கியப் போட்டான்.

மொதல்ல உங்கள எலெக்ட்ரிக் சேர்ல ஒரு மணி நேரம் உக்கார வச்சு , கரண்ட் ஷாக் கொடுத்துட்டு, ஆணிப்படுக்கையில ஒரு மணி நேரம் படுக்க வச்சிட்டு, அப்புறம் சாயங்காலம் வரை ஒரு ரிடையர்டு சாத்தானை வரச் சொல்லி……..” இப்பிடிப் போச்சி போச்சி அவங்க பதில்.
நம்மாளு கடுப்பாயிட்டான், “யோவ் , இதேதான அங்கயும் சொன்னீங்க?”ன்னான்.

கடுப்போட கடுப்பா அப்பிடியே ஆஸ்திரேலியா நரகம், ஜப்பான் நரகம்……எல்லா நரக சுகத்தையும் விசாரிச்சிட்டு வந்தான்.

கிட்டத்தட்ட எல்லா இடத்திலயும் இதே கதைதான்.

சோர்ட்ந்து போயி வரும் வழியில இந்திய நரகம். நம்மூரு ரேஷன் கடை மாதிரி பெரிய கியூ.

நம்மாளுக்கு ஆச்சரியம் ரிபீட் அடிச்சுது.”என்னாடா இது இந்தியாவுக்கு இவ்ளோ கிராக்கி?” ன்னு அவனை அவனே தட்டிக் கொடுத்திட்டு கிட்டப் போயி நைசா மேட்டர் போட்டான்.

சொன்னாங்க, “மொதல்ல உங்கள எலெக்ட்ரிக் சேர்ல ஒரு மணி நேரம் உக்கார வச்சு , கரண்ட் ஷாக் கொடுப்பாங்க; அப்புறம் ஆணிப்படுக்கையில ஒரு மணி நேரம் படுக்க வச்சிடுவாங்க; அப்புறம் சாயங்காலம் வரை ஒரு ரிடையர்டு சாத்தானை வரச் சொல்லி சவுக்கடி கொடுப்பாங்க. அதுக்கப் புறம் நைட் ஃபுல்லா நீங்க ஃப்ரீ” – கிட்டத்தட்ட அதே கதைதான்

மசக் கடுப்பாயிட்டான் நம்மாளு.

கியூவில நின்னுகிட்டு இருந்த ஒருத்தர்கிட்ட கேட்டான், “ லூசாப்பா நீ? அதேதான இங்கையும்என்னய்யா அதிசயத்தை கண்டே, இந்த இந்திய நரகத்தில?”

கியூவில இருந்த ஒரு மொக்கை முனுசாமி சொன்னான், விஷயம் தெரியாம கத்தாதய்யா! வந்து நீயும் இதே வரிசையில நில்லு!”ன்னான்.

நாம டெமோ காட்டாம எந்தப் பொருள் வாங்கியிருக்கோம்?
நரகம் மட்டு விதிவிலக்கா?

விளக்கம் சொல்லு” – ன்னாம் நம்மாளு.

அட, முதல் ஒரு மணி நேரம் எலெக்ட்ரிக் ஷாக் கொடுப்பாங்க இல்லா? மட்டமான மெயின்டனன்ஸ்னால  எலெக்ட்ரிக் சேர் வேலை செய்யாது. அது தப்பித் தவறி வேலை செஞ்சாலும் அப்பப் பார்த்து கரண்ட் இருக்காது……”

சரி , ஆணிப் படுக்கை இருக்கில்ல, இருக்கில்ல?” வடிவேலு மாதிடியே ஆயிட்டான் நம்மாளு இப்ப.

இருக்குய்யா, ஆனா அதுல ஏகப்பட்ட ஆணிங்கள நம்மாளுங்க எப்பவோ ஒண்ணொன்ணா புடிங்காட்டானுங்க……பாதி ஆணி கூட இல்லையாம், நம்மூரு சினிமா தியேட்டரு சீட்டுங்க மாதிரி
சரிதாம்ப்பு, ரிடையர்டு ஆபிஸர் சாத்தான்கிட்ட இருந்து எப்படி தப்பிக்க முடியும்? அங்க இருக்கில்ல ஆப்பு?”

சுத்த வெவரம் புரியாத ஆளா இருக்க? அந்தாளு பாட்டுக்கு வந்து கையெழுத்துப் போட்டுட்டு, கேண்டீன் போயிடுவான்….பிரச்சினையே இல்லை. வா, வந்து நில்லு


நாம் எங்கே நிற்கிறோம், தெரிகிறதா?