Posts

Showing posts from 2007

அகராதி (புடிச்ச) அருஞ்சொற்பொருள்

அகராதி (புடிச்ச) அருஞ்சொற்பொருள்

ஆளாளுக்கு அகராதி, திவ்யப் பிரபந்தம், திருக்குரல் உரை இப்படி எழுதி குவிச்சிட்டு இருக்க, நமக்கும் ஒரு யோசனை.
நாமும் தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?
(வரலாறு முக்கியம்!)

அவ்வளவுதானே...செஞ்சுடுவோமுனு காரியத்தில இறங்கிட்டோம்.
உடனே, தமில்...மன்னிக்கணும் தமிழ் அகராதில(?) போடலாமுனு ஒரு யோசனை(அங்கதானே யாரும் தப்பு சொல்ல முடியாது?)

இருந்தாலும் வித்தியாசமாய்,அகராதி புடிச்ச பசங்க உபயோகிக்கும் பல வார்த்தைகளுக்கு அருஞ்சொற்பொருள் போட்டுட்டோமில்ல.....

அரசியல்
ராமதாஸ் – கூட இருந்தே டென்ஷன் தரும் ‘குலகுரு’
சுப்ரமணியசாமி – லூசுப் பய புள்ள.
ஸ்டாலின் – பெரிய இடத்து சமத்துப் பையன்.
அழகிரி - பெரிய இடத்து டார்ச்சர் தரும் பையன்.
ஆற்காடு – போட்டுக் கொடுக்கும் ‘நிழல்’ மனிதர்.
ஐயா - H.O.D
அம்மா - முன்னாள் H.O.D

தொலை தொடர்பு
நோகியா - பாப்புலர் ஃபிகர்
மோடோரோலா - புரியாத ஃபிகர்
ப்ளூ டூத் - அட்டை போல ஒட்டும் ஃபிகர்
எம்.எம்.எஸ் - செலவு வைக்கும் ஃபிகர்
அவுட் கோயிங் ஃப்ரீ- சும்மா சுத்தலாம்.அவ்வளவுதான்.

சமையல்
சாம்பார் - குளப்படியாய் பேசும் லெக்சரர் / மாணவன்
கூட்டு - எங்கோ தொடங்கி எங்கோ முடிக்கும் லெக்சரர்

குடு…

தானம்.....நிதானம்

நம்மில் பலருக்கு பிரச்சினைகளை தீர்ப்பதே ஒரு பிரச்சினை. எந்த ஒரு பிரச்சினைக்கும் ஆதாரமான தீர்வு ஒன்று இருக்கும்.அதை தேடி ஒரு பயணம் போக வேண்டி இருக்கும்:பின்னரே தீர்வு தென்படும்.

நம்மில் பலர் யோசிக்காமல் காரியத்தில் இறங்கி விடுவதே பிரச்சினைக்கு மூல காரணமாகி விடுகிறது. சில விசயங்களை ஆழ்ந்து அறிந்து ஆராய்ந்து தீர்க்க வேண்டும்.

ஆய்ந்தாய்ந்து செய்யாதன் கேண்மை தீமுன்
வைத்தூறு போல கெடும்

என்றார் வள்ளுவர்.

ஒரு பெண்ணுக்கு ரொம்ப நாளாகவே மாப்பிள்ளை அமையாமல் வரன் தள்ளிக் கொண்டே போனது. சலித்துப் போன தரகர் இறுதியில் ஒரு வரன் கொண்டு வந்தார்.

பொண்ணோட அப்பாகிட்ட கேட்டார்;
“பத்து பொருத்தம் உள்ள மாப்பிள்ளை நம்ம பொண்ணுக்கு வாய்க்காது போலிருக்கு. எட்டு பொருத்தம் உள்ள வரன் ஒண்ணு இருக்கு,பாக்கலாமா?”
சலித்து போயிருந்த பொண்ணோட அப்பாவும்,”சரிதான், பாருமையா” என்றார்.

நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாண நாளும் வந்தது.
மணவறையில் மாப்பிள்ளை,பெண் அமர்ந்து இருக்க, ஐயர் சொன்னார், ”மாப்பிள்ளைவாள், அட்சதை-பொரியை அக்னியிலே போடுங்கோ”
மாப்பிள்ளையோ அதை வாயில் போட்டு தின்ன ஆரம்பித்தான்.
“மாப்பிள்ளை! நான் அக்னியில போடச் சொன்னேன்” – ஐயர்.
“அது…

கவித..கவித....

கவிதை எழுத கை வேண்டாம்,
கவனம் வேண்டும்.
உன்னை சுற்றி ஊர் இருக்கையில்
ஊரைச் சுற்றி
உன் பார்வை இருப்பதாய்……..

கவிதை எழுத மை வேண்டாம்,
மனம் வேண்டும்.
மனிதனைப் பற்றி எழுத வேண்டாம்,
மனிதனாய் இருப்பதை எழுது.

ஓ....நிறுத்திட்டாங்களா?

ஓ....நிறுத்திட்டாங்களா?
அன்புள்ள ஞானியின் 'ஓ..பக்கங்கள்' நிறுத்தப்பட்டது குறித்து பல வாசகர்கள் தங்களின் கவலைகளையும்,கருத்துகளையும் பல்வேறு விதமாக பதிவு செய்திருந்தனர்.

திரு.ஞானி இந்த கவலை(!)களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்(?) என்பதை இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

1. எனக்கு தெரிந்து என்றுமே ‘விகடனி’ல் ஒரே எழுத்தாளர் இரு கட்டுரை எழுத முடியாது. திரு.ஞானிக்கு மட்டுமே விதிவிலக்காய் ‘அறிந்தும் அறியாமலும்’ இரட்டை கட்டுரை வசதி.

2. மேலும் ஒரு வாசகர் சொன்னதைப் போல, விகடனில் ஜாதி வித்தியாசம் எல்லாம் கிடையாதுங்கோ.யார் வேனா என்ன வேனா எழுதலாம்.( நான் விகடனின் 22 வருட வாசகன் )

3. பொதுக் கருத்துக்கு மாறாக எழுதி, சீக்கிரம் பிரபலமாகி விடும் வித்தையை நன்றாக அறிந்தவர் இந்த ஞானி(!).

4. இப்படித்தான் ‘கண்ணகி சிலை’ இடம் மாற்றப் பட்ட போது கேனத்தனமாக அதை ஆதரித்து எழுதி (ஜு.வி) வாங்கி கட்டிக் கொண்டார்.

5. ஆஆஆஆஆஆஆஆனால், இப்போ அவர் என்ன சொல்லிட்டார்னு அவரை எல்லாரும் திட்டரீங்க? ‘வயசாயிட்டு,பாவம்-ஓய்வு எடுக்கட்டும் கலைஞர்’னுதானே சொல்றார்?சொல்லிட்டு போறார்...பாவம்,ஞானிக்கும் வயசாயிட்டில்லியா?கையொட அவரையும் அன…

'புது' (?) கவிதை

இன்றைய தினப் பத்திரிக்கைகளில்
வரும் கவிதைகளை படிக்கையிலே

'நெஞ்சு பொறுக்குதில்லையே'
(அட இதுதாங்க தலைப்பு)

அலையே,
மலையே என்றும்

கலையே
சிலையே
என்றும்

வாயில் வரும்
வசனமெல்லாம்

ஒன்றின் கீழ்
ஒன்றாய்
எழுதிவிட்டு
(இதே மாதிரி)

இதுதான்டா
புதுக் கவிதை
என்று
பிதற்றுகின்றார்...

தட்டிக் கேட்போரை
புதுக் கவிதை தாத்தா
நீ
என்று
அதட்டுகின்றார்.

எங்கடா
போனது
'எதுகை'யும்
'மோனை''யும்

அழிந்தா போனது
'அணி''யும்
'இலக்கண''மும்
என்று
தேடுவோரே

அதோ
'மாத்திரை''யில் மயங்கி
மதியிழந்து
கிடக்கின்றார்
மயக்க கவிஞர்கள்.