Friday, February 21, 2014

இனி ஒரு ஜேசிய கீதம் !

தேசியகீதத்தின் தேவைகள் தீர்ந்தன. பாதையில் இல்லை – பாரதத்தாயின் பார்வை இப்போது ! மாறாய் பாதைமாறுகிற பாதங்களைத்தான் பார்க்கிறால் எப்போதும் ! வழியெங்கும் நெம்புகோல்களே நிரம்பிக்கிடகின்றன; குறுக்கே கிடந்த குறுங்கற்களை நகர்த்திமுடித்த அவை நல்லதுதான். சரி...... இனியாவது, பாதணிகளை செப்பனிட ஊசிகள் தேடுவோம். • * * * * * நாட்டுக்குள் அத்தனை பேருமே நாட்டாமைகள் என்றால் வீதியில் இறங்கி வெளிச்சம் பெருக்க சாதி பார்க்காத சமத்துவர்கள் எத்தனை பேர் ? தேசியகீதத்தின் தேவைகள் தீர்ந்தன. இனி, ஜேசிய கீதம் இசைக்கப் பழகுவோம். அனிச்சப்பூவாய் அகம் , முகம் மலர வெளிச்சம் பெருக்க வீதியில் இறங்குவோம் ! மகத்தான சேவையாம் மானிட சேவையில் மனதை வைப்போம் ! பூமியின் பெருஞ்செல்வம் பூத்தவனின் ஆளுமையே என பூரிப்பெய்துவோம் ! தனிமனிதனுக்கு தலைவணங்கா சட்டங்களே சரியான அரசின் சின்னமென சிந்தனையில் கொள்வோம் ! தடையில்லா பொருளாதாரமே தனக்கான வியாபாரமென தனிமனைத நீதி தழைக்கச் செய்வோம் ! தேசங்கள் மீதான கோடுகளை சகோதரத்துவம் கொண்டு சரித்திடுவோம் ! கடவுளின் மீதான கவனமே குறிக்கோளும், பொருளுமாய் நம்பிக்கை தருமென கூவி நிற்போம் ! இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் ! Jc. Du.VELUMANI , ZONE TRAINER JCI ERODE TEXCITY ரிதம் 17 - Official Bulletin of Zone 17 க்காக எழுதப்பட்டது.

Thursday, February 13, 2014

பாலு...


திரை உலகம் திரும்பிப்பார்த்த இயக்குனர் ‘பாலு’ ரெண்டு பேர். ஒன்று டி.என். பாலு. அவர் மசாலாக்காரர். இன்னிருத்தர் நமது தலைமுறையில் பாலு மகேந்திரா. ஒளிப்பதிவாளராக இவர் நிவாஸ் வர்களின் போட்டியாளராக அடையாளம் காணப்பட்டாலும், தனது காலத்திய இளைய தலைமுறையின் ‘கில்லாடி’ ஒளிப்பதிவாலராக அடையாளம் காணப்பட்டார். கதையை நம்பி படம் எடுக்கும் சிலரின் விருப்ப ஒளியியக்குனராக விரும்பப்பட்டார். மகேந்திரனுக்கு பிறகு, அவரது பார்ட்னராக பயணித்திருந்தாலும், கதை சொல்லியாக இவரை கை காட்டலாம். ஸ்ரீதேவி எனும் நீர்வீழ்ச்சியை தாங்கக்கூடிய ஒரே நடிகர் கமல்தான், என மூன்றாம்பிறைக்கு விள்க்கம் அளித்தார். ‘பொன்மேனி உருகுதே’ எதற்கு என்பது மட்டும்தான் விளங்கவே இல்லை. சில்வர் ஸ்கிரீனுக்கு இவர் தந்த ‘நீங்கள் கேட்டவை’ யும் அதே ரகம். முதுமை என்பது ரணமா, ரசிக்கவா என்பதே தெரியாத போழ்து, நாம் இறப்பை பேசியாக வேண்டி இருக்கிறது. திருமணமாகி நான் பார்த்த....சாரி, நாங்கள் பார்த்த முதல் படம் ‘ராமன் அப்துல்லா’. அந்த வகையில் பாலு என் வாழ்வில் !