பயந்துட்டியா கொமாரு ?

தினக்கணக்கில்
தீவனம் தேடும்
தியாகிகளாய்தான் 
இன்னும் திரிகிறோம் கொமாரு.

ஜனக்கணக்கில் நாங்கள் ‘ஜக்காரியா’ பக்கம்.
ஊர்ப்பிள்ளைகளுக்கு ஊட்டிவிடும்
உத்தமத்தனம்தான் எங்களின் பக்க பலம்.

இனக்கணக்கை எழுதிமுடிக்காத
திராவிடமே எங்களின்
இன்னுமொரு குறை கொமாரு.

மனக்கணக்கில் கோட்டைவிட்டு
பணக்கணக்கை மாத்திட்டையா கொமாரு?

பயக்கணக்கை பார்க்காமல்
கொஞ்சம்
சுயக்கணக்கையும் பாரு கொமாரு.

மொத்தத்தில் மறுபடியும்
கூட்டிக்கழிச்சுப்பாரு கொமாரு.
கணக்கு தப்பா வரும்.

கடைசியில் சரியா போகும் !.

Comments

Popular Posts