Monday, December 12, 2016

மீண்டும் நாசமாய் போனோம்

பணத்தை வங்கியில் போட்டு வைக்கிற அறிவு நமெக்கெல்லாம் எப்போது வந்தது?

எவனாவது திருடனை டவுன் பஸ்ஸில்பேட்டியெடுத்த பின்னர் தானே?

ரெண்டு மூணு திருட்டு பார்த்தபின் வங்கியில் பணம் போட்டொம்.
80 களில்தான் நாம் வங்கியில் வரிசை போட்டோம். காலை பல்லுவிளக்கியவுடன் போனால் மதியசோத்துக்குத்துக்த்தான் வீடு. அப்படி க்யூ.

பின்னர் லெட்ஜர் பார்த்து கூப்பிட சுணங்கி 'டெல்லர் முறை' வந்தது. இதுக்கே 1990 ஆரம்பித்துவிட்டது. ஐயாயிரம் வரை எளிதாய் நேராய் கவுன்டருக்கே போய் பணம் எடுக்கலாம்.

ராஜிவ் காந்தி கொண்டுவந்த க்ணிணிமயத்தால் நாமே பாலன்ஸ் பார்க்கலாம்...வங்கியிலேயே. கம்யூனிகேசன்...ஊரெல்லாம் ஒரு ரூபா போன் என மைக்கேல் பெரைரவின் தய்வு.
தனி கம்ப்யூட்டர் தந்தார்கள்...நம்மாளுக அதற்கும் க்யூ நின்றார்கள்.

ICICI மாதிரியான கஸ்டமர்களுக்கு வேலை செய்யும் வங்கிகள் வந்தன. வரிகைகள் கரைந்தன.
ATM வந்து இன்னும் எளிதாக்கியது. வங்கிக்கு பணத்தேவைக்கு போக வேண்டாம். 'சிட்டி பேங்க்' போன்ற வகையறாக்கள் வங்கிப்பரிவர்த்தனைக்கு தனியாக சார்ஜ் போட்டு பயப்படுத்தினார்கள்.

அப்புறம் ஏ.டி.எம்.தான் எல்லாமே. அங்கேயே பேலன்ஸ் பார்த்து, ட்ரான்ஸ்பர் செய்து, பணம் போட்டு, ........கார்டும் கையுமாய் அலைந்தனர் செப்புமொழியார் அத்தனை பேரும்.
'ஆன் தி வே'யில் பணம் எடுத்தே நாமெல்லாம் ஆக்ராவரைக்கும் பொய் வந்தோம். பாதுகாப்பும் கூட.

எவர் கண் பட்டதோ.......கலியுகத்தின் கடேசி பிரம்மாவாய் மோடி காலத்தில் மீண்டும்கற்காலத்துக்கே போய்விட்டோம். மறுபடி பல்லு விளக்கியும் விளக்காமலும் வரிசையில் தமிழ்கூறும் நல்லுலகம்......... நிற்க !

Friday, September 30, 2016

டெக்ஸ் கனெக்ட் - ஜவுளி துறைக்கான கருத்தரங்கு

ரொம்ப நாட்களாகவே மனதுக்குள் ஒரு எண்ண ஓட்டம்.
நம்மை வாழ வைக்கும் ஜவுளி துறைக்கு நாம் ஏதாகினும் செய்ய வேண்டும் என்று.....

ஜவுளித்துறையின் பணியாளர்களே அதன் தூண்கள். இரவு பகல் பாராது, கண் துஞ்சாது, கருமமே கண்ணாக.............உழைக்கும் அந்த வர்க்கம் உச்சியில் வைத்து பாராட்டத்தக்கவர்கள்.

அவர்களுக்காக TEXCONNECT - Technical Motivation Seminar  உருவாக்கப்பட்டது. இது 2-ஆம் வருடம்.

பொட்டில் அடித்தாற்போல் நெகிழ்ச்சியுடன் உயர்ச்சி பற்றி பேச டாகடர் ஸ்டார் ஆனந்த்ராம் தான் சரியான ஆள் என்பது மீண்டும் நிரூபணமானது.

"Come On" இவரின் தலைப்பு
துறையின் ஆளுமை சக்தி வளர என்ன செய்யவேண்டும் என ரொம்ப கேசுவலாக அவர் சொன்ன விஷயங்கள் அபாரம். Texconnect ஓப்பனிங்கே பெருமழை என பின்னர் வந்த பேச்சாளர்கள் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்கள்.

கேட்க வேண்டியதே இல்லை. பிரமாதமான பேச்சாளர், மோட்டிவேட்டர், நிறுவங்களுக்கான பயிற்சியாளர்....பிரமாதம்  போங்கோ.....

இன்றைய தேதியில் ஏன் மோட்டிவேஷன் தேவைப்படுகிறது என திருப்பூர்  திரு . சந்திரகுமார் அவர்கள் அறிமுக உரையாற்றி தொடங்கி வைத்தார். நான் தனிப்பட்ட முறையில் எனது துறையிலொரு தொழில்னுட்பனாக விளங்க இவரும் ஒரு காரணம் என்பேன்.

அடுத்து அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் கார்மெண்ட் டெக்னாலஜி துறைத்தலைவர் திரு.மனோகரன், எடுத்துக்கொடுக்க திரு. சுந்தர ராஜன் "Upgrade yourself" என்ற தலைப்பில், துறையில் வளர நாம் நம்மை துறையுடன் இணைந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது என தனது அனுபவத்திலிருந்து எடுத்துரைத்தார்.

ஜவுளி துறையை தனது முதன்மை தொழிலாக வைத்திருந்தாலும், ஜோதிட ஆராய்ச்சிகள் செய்து அதிலும் தன்னை மேம்படுத்திக்கொண்டுள்ள இவர், இரு விஷயத்தையும் இணைத்து பேசி அரங்கம் அதிர வைத்தார்.


இன்றைய ஜவுளி நிறுவனங்களின் பிரச்சினை மாணவர்கள் அல்ல. அவர்கலை தயாரித்தளிக்கும் கல்லூரிகளே.

ஈகோஸ்டார் ஸ்ரீகாந்த் முன்னிலை வகிக்க, அடுத்து அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் திரு. தினகரன் தனது அனுபவ மொழிகளால் அந்த சிக்கல்கள், சுவாரசியங்கள், திருத்தங்கள் பற்றி பகிர்ந்தார்.
பசி நேரம்......மக்கள் கவனம் திசை திரும்பும் நேரம்........புயலாய் அரங்கினுள் நுழைந்தார் திரு. P.V.கந்தசாமி அவர்கள். அருள்முருகன் டெக்னிகல் காம்பஸ் தாளாளர்.

தனது அருமையான முன்னுரையில் What your Boss thinking  என்பதை நியாப்படுத்தி தனது எண்ணம் என்ன என்பதையும் விளக்கினார்.

பெருமழையாய் வந்தார் ஹரிபாலா திரு.பாலகுப்புசாமி.
தனது பயிற்சித்துறை அனுபவம், பேச்சுத்துறை அனுபவம், வணிக அனுபவம்,

 கிட்டத்தட்ட் 50 நிமிஷங்களுக்கும் மேல் தனது காட்டாற்று பேச்சல் கட்டி வைத்தார், பசியை, பொறுமையின்மையை, ...இன்ன பிற இடைஞ்சல்களை

பிரமாதமான அனுபவமாக உணர்ந்ததாக பங்கேற்பாளர்கள் சொன்னதும் நமக்கு குளிர் உச்சிக்கு ஏறியது.

அத்துனை பேருக்கும் நினைப்பரிசு வழங்கியபின், லேப் மேலாளர் நன்றி சொல்லி, கலந்தோம்.....மகிழ்வாய்.
Monday, June 06, 2016

நல்ல மனம் வாழ்க....!

பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்துள்ளேன்....., பல்வேறு  வயதினருக்கு ப்யிற்சிகள் அளிக்கிறேன்....பல்வேறு தலைப்புகளில்.....பல்வேறு இடங்களில்...

ஆனால் சில இடங்களில் கிடைக்கிற பாராட்டு  மனம் நிறைகிறது....

இது விருதாச்சலத்தில் ஒரு ஜவுளி நிறுவனத்தில்...அந்த பெரியவர் பயிற்சியின் கடைசியில், " தம்பி, ரொம்ப நல்ல விஷயங்களை பிடிக்கிற மாதிர் சொன்னீங்க, ஏதோ என்னால முடிஞ்சது..." என்று சொல்லி ஒரு ஐம்பது ரூபாயை கொடுத்து ஆசிர்வதித்தார்.

மறக்க இயலா வாழ்த்து......


தற்போது 2016 TRED (Trust for Rural Education & Development ) தொண்டு நிறுவனத்திற்காக சிறுபிராயக் குழந்தைகளுக்கு பயிற்சியளிக்க சென்றிருந்த போழ்து அறிமுகமான திரு யூல் ரோச்சேட் (Yul Roeschter)  என் பயிற்சியை பார்த்துவிட்டு  எண்ணக் கருத்தினை தெரிவித்தார்.


அந்த வீடியோ.........!


சமீபத்தில் 03.06.2016 அன்று எடிசியா , ஈரோட்டு நிறுவனப்பணியளர்களுக்கென 'என்னை அறிந்தால்' (  STEPs - Staff Talent Empowerment programs)  என்று ஒரு பயிற்சி வகுப்பினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் 62 பணியாளர்கள், பல்வேறு நிறுவனகளில் இருந்து கலந்து கொண்டார்கள்.

Current Electrical works  எனும் நிறுவனத்தார் அடுத்த நாளே மின்னஞ்சலில் தங்களின் கருத்தை அளித்திருந்தனர்....

என்ன தவம் செய்தனை என என்ண இவையெல்லாம் காரணங்கள்.......

Wednesday, April 13, 2016

ஒரு நாள் போதுமா

திருவிளையாடல் திரைப்படத்தில் பரமசிவன் வந்து ‘ஒரு நாள் போதுமா, இன்றொரு நாள் போதுமா?” என பாடிய மாதிரிதான் நம் எல்லோருக்கும் 24 மணி நேரம் கொண்ட நாள் போதுமானதாக இல்லை.

ஆனால் இந்த நாளின் மகத்துவத்தினை நாம் அறிந்திருக்கிறோமா?

தத்தமது துறையில் சாதித்தவர்களை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்........நேர மேலாண்மையை கைக்கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

மிகச்சிறந்த எடுத்துக்காட்டு......திரைத்துறையில் ‘நடிகர்திலகம்’ சிவாஜி கணேசன், நேரத்தினை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கும், கொஞ்சமாவது ‘பங்க்சுவாலிட்டி’ குணம் நம்மை எப்படி மேலேற்றும் என்பதற்கும் அவரை ‘உதாரண புருசனாகப்’ பார்க்கலாம்.

முதலாவது ‘டைம் கான்சியஸ்’ என்பது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்துவது.
அதாவது கிடைத்திருக்கும் கொஞ்ச காலத்துக்குள் நிறைய்ய்ய்ய ‘பெர்பார்ம்’ பண்ணிக்கொள்வது. அப்போ க்வாலிட்டி கெட்டுவிடாதா எனக்கேட்கலாம்.
ஒரே நாளில் அவரது இரண்டு படங்கள் வெளியாயிருக்கின்றன.

தப்பில்லை.
நமது அத்தனை முயற்சிகளுமே ஹிட் அடிக்கும் என்று சொல்ல முடியாது.ரஜினிக்கும் ஒரு ‘பாபா’ உண்டுதானே?

ஆரம்ப கால கட்டத்தில் கிடைக்கும் நிறய்ய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது தன்னை புடம் போட்டுக்கொள்ள உதவும். தம் தவறுகளை கண்டுபிடிக்க இந்த அதிக வாய்ப்புகள் உதவ்லாம்.

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய இளம் நடிகர்களுக்கு, “ வருடத்துக்கு ஒரு படம் பண்னுகிற கான்செப்டை நீங்கள் விட்டொழியுங்கள். மாறாக மூன்று நான்கு படங்களில் நடியுங்கள்.......அதில் ஹிட் ஆகிற ஒரு படம் அடுத்த  நாலு படங்களை வாய்ப்பாக்கும்” என்று அட்வைசியிருக்கிறார்.

இதேதான் ......கிடைக்கிற வாய்ப்புகளை அதிகமாக பயன்படுத்திக்கொண்டால் அதில் கிடைக்கிற அனுபவம் உங்களுக்கு உங்களின் ப்ளஸ்- மைனஸ்களை உங்களுக்கே அறிமுகம் செய்யும்.


சமீபத்தில் பா.ராகவன் அவர்களின் ‘எக்சலண்ட்’ என்ற புத்தகத்தில் ‘நடிகர்திலகம்’ பற்றி பழம்பெரும் நடிகர் வி.கே.ராமசாமி சொன்னதாக தகவல் ஒன்று படிக்க நேர்ந்தது.

அதிலிருந்து......
“......................தமிழ்திரைத்துறையில் ரெண்டு நல்ல ஆக்டர்கள்னா சந்திரபாபுவும், சிவாஜி கணேசனும்தான். என்ன வித்தியாசம்னா, மத்த நடிகர்கள் செட்டுக்கு வரதுக்கு முன்னாடியே சிவாஜி வந்துருவாரு. அன்னிக்கி டயலாக், காமிரா கோணம், உடன் நடிப்பவர்கள் பற்றிய தகவல், எல்லாம் அப்டேட் பண்ணிக்குவாரு..வசனங்களை கண்ணாடி முன்னால் நின்னு பேசிபார்த்துருவாரு...லேட்டாவோ...கரெக்ட் டயத்துக்கோ வரவங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. இப்படித்தான் சிவாஜி பெர்பார்மரா ஆனாரு. ஒன்லி டைம் கான்சியஸ்.......

ஆனா சந்திரபாபு, எப்பவுமே லேட்டாத்தான் வருவாரு.........சீக்கிரமே ஃபீல்ட் அவுட்டும் ஆனாரு....”

இது இரண்டாவ்து வகை டைம் கான்சியஸ். அதாவ்து குறித்த நேரத்துக்கு முன்பே வேலையை தொடங்குதல்.

இந்த இரண்டு ‘நேர மேலாண்மை’ தத்துவங்களை புரிந்து கொண்டு செயல்படுகிற பயிற்சியாளரின் வாயில், “சாரி.....இன்னிக்கு என்னால் பயிற்சிக்கு வர இயலாது. ஒரு திடீர் வேலை” என்கிற வார்த்தைகள் வராது.

 நீங்கள் கொடுத்த நேரத்தை நீங்கள் கேன்சல் பண்ணும்போதோ, அல்லது வேறு நேரம் கேட்டு (postpone) பெறும்போதோ உங்களின் வாக்கின் உறுதியும், உங்களின் மீதான நம்பிக்கையும் குலைகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.


இதுபோலவே நாம்செய்யும் இன்னொரு மாபெரும் தவறு, குறித்த நேரத்தில்  முடிக்காமல் இழுத்தடிப்பது.

எவ்வளவு கால தாமதமாக ஆரம்பித்தாலும், முடிக்க வேண்டிய நேரத்தில்  முடித்தே தீரவேண்டும். அது காலத்தின் கட்டாயம்.

நல்ல நேரம் காத்திருக்கிறது. பெஸ்ட் ஆப் லக்.

Tuesday, March 22, 2016

ஹேங்க் ஆகுதா உங்க ஆண்ட்ராயிட்?

1.பலவித பயன்பாடுகள் (apps) வேண்டாம். அதிக ஆப்சுதான் நமக்கு ஆப்பே...
2. நாம் போனில் பயன்படுத்தும் ஆப்ஸ்க்கு என்று தனியாக கேச் (cache) உருவாகும். இந்த கேச் நிரம்பி வழிந்தால், போன் உங்களிடன் வழியும்...ஹி.ஹி..
3. போனில் அடிக்கடி செயல் இழக்கும் பிரச்சனை தோன்றினால் அப்பப்ப அப்டேட் செய்யுங்க... வேற வழி....?
4.நீங்கள் உங்கள் போனில் நெட்டை பயன்படுகின்றீர்கள் என்றால் அதில் அதிக டேப்ஸை திறக்க வேண்டாம்.
அப்படி செய்தால் உங்கள் போனுக்கு 'நெட்டை' எடுக்கப்படும்...முடிஞ்சுது.....
5. மெமொரிகளை கார்டுக்கு அனுப்புங்க....
6. ஆடிக்கிட்டிருக்கும் அனிமேஷன் வால்பேப்பர் இருந்தா, சுண்ணாம்பு அடிச்சிருங்க...
7. அப்பப்ப டாஸ்க் மேனேஜர் (உங்கள் மனைவியை சொல்லவில்லை) பார்த்து, பேக்கிரவுண்ட் செய்லிகளை மட்டுப்படுத்துங்க....
8. முடிஞ்ச அளவுக்கு 'ரேம்' காலியா இருக்கட்டும்....அது காலியா இருக்கற வரை நீங்க ஜாலியா இருக்கலாம்...

கற்றலின்...............

பேச்சு’ என்பதன் முதற்பகுதி ‘கேட்பது’ என்பதாம்.

சரி..சரி...சீரியசாக ஆரம்பிப்பதாக உத்தேசம் இல்லாத காரணத்தால், நம்ம ஃஸ்டைலிலேயே வருகிறேன்.

‘ஆக்டிவ் லிசனிங்’ என்றொரு பாகம் இருக்கிறது. இந்த வார்த்தையை சொன்னதுமே எனக்கு ரொம்ப வருடங்களுக்கு முன்னால் ஜவஹர் அவர்கள் எழுதிய விஷயந்தான் ஞாபகம் வருகிறது. அது அப்புறம்.உங்களுக்கு நண்பர் யாருடனாவது பேசப்போகும்போதே ‘போட்டு அறுக்கும்’ சிலரின் ஞாபகம் வரலாம். சில பேர் ...

“சுஜாதா புத்தகம் ஒண்ணு லைப்ர்ரில எடுத்தேன்..”

“சிறுகதை தொகுதியா, கட்டுரை தொகுதியா?” என்பார்கள் பதிலாய்.
“எப்படி கரெக்டா சொல்றே”

“உங்க டேஸ்ட் எனக்கு தெரியாதா?....செம மேட்டர் ஒண்ணு அதுல மாட்டிருக்கு, அடுத்த உங்க ட்ரெயினிங்கில், அது இருக்குமே”

“ஆமா, அதுலயும், ஃபிக்சன் கதை ஒண்ணு...”

“பிச்சி எடுத்துருப்பாரே...உங்க வாயாலயே சொல்லுங்க கேப்போம்”

“ புக் தரேன் ..படிச்சி பார்...”

“நீங்க அதைவிட சுவாரசியமா, கொஞ்சம் சேர்த்து சொல்வீங்க......சொல்லுங்க”

சொல்ல ஆரம்பித்தால்......இடையே “இரு இரு கொஞ்சம் முன்னால என்னமோ சொன்னியே என்னது?” என கேட்டு வாங்கி போவார்கள்.

உங்களுக்கு யாருடனாவது கதை அடிக்க விருப்பம் எனறால், அவர் உங்களை பேச வைத்து கேட்பவர் என்று அர்த்தம்.

எனக்கு R.S..பிரபு, தனவேல்  இவர்களுடன் பேசப் பிடிக்கும்...மணிக்கணக்கில். அதிலும் ‘தனவேல்’ என்றால் நாட்கணக்கில்.
இன்னும் ஒருவர் இருக்கிறார். 

மஞ்சு ஆன்ந்த். 

நாம் பேசிக் கொண்டே இருக்கலாம். கேட்டுக்கொண்டே, சிரித்துக் கொண்டே, நடுவில் சின்னதாய் கமெண்ட் மட்டும் அடிப்பார். அவரின் கடேசி கமெண்ட் இப்படித்தான் இருக்கும், “ சார்......சான்சே இல்ல....பிச்சிட்டீங்க”

இன்னும் சிலர்.....வேறு கேஸ்.

இந்த  “மேட்டூர் ரோடு இருக்கில்ல..” என நாம் ஆரம்பித்த்துமே, “எது, அபிராமி தியேட்டர் ரோடுதானே....கிழின்சிது...செம ட்ராபிக்தான். நைட் பத்து மணிக்கு க்கூட K.P.N. வண்டியை குறுக்கே போட்டுகிட்டு ஒரே அலப்பரை. நைட்டுன்னா எப்படி வேணா வண்டி ஓட்டலாமா......அதும்...பிருந்தாவன் வாசல்ல..பழைய புத்தகம்...கொய்யாக்காய்.....கண்ட்தெல்லாம் விக்கிறான்...அப்ப்ப்ப்ப்பா......ஆமா நீ என்ன சொல்ல வந்தே?”

“அதில்லை...நான் என்ன சொல்ல வந்தேன்னா?”

“தெரியுது...அடையார் ஆன்ந்த பவன் கிட்ட நம்மாளுக சொதப்புற ட்ராபிக் விஷயந்தானே...? இவனுங்கலை திருத்தவே முடியாது......இவனுக எதுக்கு கோடு போட்டு அங்க போலீசையும் நிக்க வச்சிருக்காங்க.....லெப்ட் ப்ரீன்னு இன்னும் எவனுக்கும் புரியலை.....சொல்லு....என்ன உன் பிரச்சினை?”

“டேய்....”


கற்றலின் கேட்டலே நன்று. புரிஞ்சா சரி.....

Tuesday, March 08, 2016

என்னை அறிந்தால் -3நாம் நம்மை எந்த அளவுக்கு  நம்மை அறிந்திருக்கிறோம்?

செத்து மேலே போனான் நம்மாளு ஒருத்தன். தீர்ப்பு கொடுக்கும்போது எமன் கேட்கிறார். “ தம்பி உனக்கு  நரகம்தான்னு தீர்ப்பு சொல்றேன். ஆனா ஒரு ஆப்சன். உனக்கு எந்த நாட்டு நரகம் வேணும்?”

நம்ம பயலுக்கு ஒரே கன்ஃயூசன். என்னடா இது, இப்படி ஒரு ஆப்சனா?

சரி வரிசையாக் காட்டுங்க, நான் செலெக்ட் பண்ணிக்கறேன்னான்.ஏன்னா நாம மொபைல் வாங்கும்போது கூட மூணு,நாலு கடை ஏறி- நாலஞ்சு பிராண்டு பார்த்துட்டுத்தான முடிவு பண்ணுவோம் - கடைசில வீட்ல கேட்டுட்டு!

முதல்ல ஜெர்மன் நரகம் காட்னாங்க.

இங்க என்ன விஷேசம்(?)”ன்னு நம்ம பய கேட்டான்.

மொதல்ல உங்கள எலெக்ட்ரிக் சேர்ல ஒரு மணி நேரம் உக்கார வச்சு , கரண்ட் ஷாக் கொடுப்பாங்க; அப்புறம் ஆணிப்படுக்கையில ஒரு மணி நேரம் படுக்க வச்சிடுவாங்க; அப்புறம் சாயங்காலம் வரை ஒரு ரிடையர்டு சாத்தானை 
வரச் சொல்லி சவுக்கடி கொடுப்பாங்க. அதுக்கப் புறம் நைட் ஃபுல்லா நீங்க ஃப்ரீ

கொஞ்சம் டைட் வொர்க்கா இருக்கும் போல?, இது வேலைக்காவாதுன்னு அடுத்த அமெரிக்கா நரகம் பக்கம் போனான் நம்மாளு. ‘இங்கெப்பிடின்னு ஒரு கொக்கியப் போட்டான்.

மொதல்ல உங்கள எலெக்ட்ரிக் சேர்ல ஒரு மணி நேரம் உக்கார வச்சு , கரண்ட் ஷாக் கொடுத்துட்டு, ஆணிப்படுக்கையில ஒரு மணி நேரம் படுக்க வச்சிட்டு, அப்புறம் சாயங்காலம் வரை ஒரு ரிடையர்டு சாத்தானை வரச் சொல்லி……..” இப்பிடிப் போச்சி போச்சி அவங்க பதில்.
நம்மாளு கடுப்பாயிட்டான், “யோவ் , இதேதான அங்கயும் சொன்னீங்க?”ன்னான்.

கடுப்போட கடுப்பா அப்பிடியே ஆஸ்திரேலியா நரகம், ஜப்பான் நரகம்……எல்லா நரக சுகத்தையும் விசாரிச்சிட்டு வந்தான்.

கிட்டத்தட்ட எல்லா இடத்திலயும் இதே கதைதான்.

சோர்ட்ந்து போயி வரும் வழியில இந்திய நரகம். நம்மூரு ரேஷன் கடை மாதிரி பெரிய கியூ.

நம்மாளுக்கு ஆச்சரியம் ரிபீட் அடிச்சுது.”என்னாடா இது இந்தியாவுக்கு இவ்ளோ கிராக்கி?” ன்னு அவனை அவனே தட்டிக் கொடுத்திட்டு கிட்டப் போயி நைசா மேட்டர் போட்டான்.

சொன்னாங்க, “மொதல்ல உங்கள எலெக்ட்ரிக் சேர்ல ஒரு மணி நேரம் உக்கார வச்சு , கரண்ட் ஷாக் கொடுப்பாங்க; அப்புறம் ஆணிப்படுக்கையில ஒரு மணி நேரம் படுக்க வச்சிடுவாங்க; அப்புறம் சாயங்காலம் வரை ஒரு ரிடையர்டு சாத்தானை வரச் சொல்லி சவுக்கடி கொடுப்பாங்க. அதுக்கப் புறம் நைட் ஃபுல்லா நீங்க ஃப்ரீ” – கிட்டத்தட்ட அதே கதைதான்

மசக் கடுப்பாயிட்டான் நம்மாளு.

கியூவில நின்னுகிட்டு இருந்த ஒருத்தர்கிட்ட கேட்டான், “ லூசாப்பா நீ? அதேதான இங்கையும்என்னய்யா அதிசயத்தை கண்டே, இந்த இந்திய நரகத்தில?”

கியூவில இருந்த ஒரு மொக்கை முனுசாமி சொன்னான், விஷயம் தெரியாம கத்தாதய்யா! வந்து நீயும் இதே வரிசையில நில்லு!”ன்னான்.

நாம டெமோ காட்டாம எந்தப் பொருள் வாங்கியிருக்கோம்?
நரகம் மட்டு விதிவிலக்கா?

விளக்கம் சொல்லு” – ன்னாம் நம்மாளு.

அட, முதல் ஒரு மணி நேரம் எலெக்ட்ரிக் ஷாக் கொடுப்பாங்க இல்லா? மட்டமான மெயின்டனன்ஸ்னால  எலெக்ட்ரிக் சேர் வேலை செய்யாது. அது தப்பித் தவறி வேலை செஞ்சாலும் அப்பப் பார்த்து கரண்ட் இருக்காது……”

சரி , ஆணிப் படுக்கை இருக்கில்ல, இருக்கில்ல?” வடிவேலு மாதிடியே ஆயிட்டான் நம்மாளு இப்ப.

இருக்குய்யா, ஆனா அதுல ஏகப்பட்ட ஆணிங்கள நம்மாளுங்க எப்பவோ ஒண்ணொன்ணா புடிங்காட்டானுங்க……பாதி ஆணி கூட இல்லையாம், நம்மூரு சினிமா தியேட்டரு சீட்டுங்க மாதிரி
சரிதாம்ப்பு, ரிடையர்டு ஆபிஸர் சாத்தான்கிட்ட இருந்து எப்படி தப்பிக்க முடியும்? அங்க இருக்கில்ல ஆப்பு?”

சுத்த வெவரம் புரியாத ஆளா இருக்க? அந்தாளு பாட்டுக்கு வந்து கையெழுத்துப் போட்டுட்டு, கேண்டீன் போயிடுவான்….பிரச்சினையே இல்லை. வா, வந்து நில்லு


நாம் எங்கே நிற்கிறோம், தெரிகிறதா?