Friday, July 18, 2014

ஆடிவெள்ளி !“எப்பவும் போல ‘டாண்’ணு கிளம்பிடாதீங்க, கோயில்ல ஆடிவெள்ளிங்கறதால கூழ் ஊத்த சொல்லிவச்சிருக்கேன். கொஞ்சம் இருந்து சப்போர்ட் பண்ணிட்டு ஆபிசுக்கு போங்க...”
புயலே அடிச்சாலும் 9.30 க்கு அலுவலகத்தில் இருக்கனும்.இது என் பாலிசி !
பசங்கள பேக் பண்ணி அனுப்பிச்சிட்டு கோயிலுக்கு போனா அங்க நம்ம கூழ் ரெடி. ஆனா கூடவே வேற யாரோ பொங்கல்,புளியோதரை தாராங்க. அவங்க இன்னும் வரல்ல !
இங்க தான் காண்டு ஆரம்பமாகும்.
10  நிமிஷம் !
அவங்களும் வந்து பூஜை முடிஞ்சு கூழ் கொடுத்து ஏரியா,சாமி-பக்தர்களை கூல் பண்ணி சாப்பிட்டு ஆபிசுக்கு வர வழியில வழக்கமான கடையில்
“பூ கொடுங்க, சீக்கிரம், லேட்டயிடுச்சு”
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க....ஆடி வெள்ளி பூ ஆயிடுச்சு....இப்ப வந்துரும்”
அப்பிடி இப்பிடி ஆபிசுக்கு வந்தா, இப்பத்தாம் கூட்டற அம்மாவே வருது.
“ஏம்மா, இவ்ளோ லேட்?”
“ஆடி வெள்ளிங்க.....அதான்”
30 நிமிஷம். பூஜை போட்டு சீட்டுல உட்கார்ந்து வேலை ஆரம்பிச்சா, கீழ் ஃப்ளோரில் ஷட்டர் தூக்கும் சத்தம்.
“என்னம்மா இது 10.30 மணிக்கு ஆபிஃஸ் திறக்கறீங்க?”
“ஆமாம்ங்க சார்......இன்னிக்கு ஆடி வெள்ளி”
அது முஸ்லிம் நண்பரின் அலுவலகம் !

Thursday, July 03, 2014

இந்தக்காலம் - ஒரு பாசிடிவ் பார்வை !

இந்தக் காலம் (Possitive Approach)
இந்தக் காலமும்
நன்றாகத்தான் இருக்கிறது.

பேருந்தில் இருந்தபடியே
Wi-fi யில் செய்தி பார்க்கலாம்.

எல்லா நிறுத்தத்திலும்
Super fast  பேருந்து நிற்கிறது.

TVS-50 ஓட்டத்தெரியாத
பொடியன்கள் இல்லை.

சிவாஜி படம் டிஜிட்டலில் பார்க்கலாம்.
தினத்தந்தியும்,தினகரனும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனில் !

எல்லோர் மொபைலிலும்
Ganghanam பாடல் .

விகடன்,குமுதம் எல்லம்
‘நெட்’டில் கிடைக்கிறது.

CBSE-யில் இடம் கேட்போர்
சீர்வரிசை தர தயாராய்.

சாலையில் எப்போதுமே
காலையிலிருந்தே Traffic Jam.

மழை என்பது வேடிக்கைப் பொருளாய் –
நின்றே போய் விட்டது நிதானமாக.

சாராராயக் கடைகள் நிறைய இருக்கின்றன:
அதை சாத்தச் சொல்லி தினம் போராட்டம்.

தமிழாசிரியர்கள் ‘கல்யாணமாலை’யில் பிசி.

வேலைக்குப் போகிறவன்
மனைவியுடன் வாழ்வதில்லை.

எளிதில் மணப்பெண் கிடைக்க
மேட்ரிமோனியல் போட்டு வைக்கிறோம்.

சச்சினை மிஞ்சவே முடியாது.

பத்து ரூபாய்க்கு ஷேவிங்க் பிளேடு,
ரெண்டு ரூபாய்க்கு ஷாம்ப்பூ.

நகரத்தின் எல்லா மளிகைக் கடைகளிலும்
‘டாப் அப்’ செய்யலாம்.

யுவதிகள் அத்தனை பேரும் சுரிதாரில் சுற்றுகிறார்கள்.
பாவாடையின் தாவணி பறக்குமே என்கிற பதைப்பு இல்லை.

ஜெய், கார்த்தி,ல் என புது ரசனை நாயகர்கள்.

அதிகாலை அலாரமே
செல்போனில்தான் ஆரம்பிக்கிறது.

புதுத் துணிகள் சனிக்கிழமைதோறும்.

ஊசல் கடிகாரத்துக்கும் ‘பேட்டரி’தான்.

தானாய் துயில் கலைந்து
எத்தனை மணிக்கு எழுந்தாலும்
இரவு பத்தரை மணிக்கு ‘சூப்பர் சிங்கர் ‘
பார்த்தபிறகுதான் படுக்கை.

ஆஹா........
இந்தக் காலம்தான் நன்றாக இருக்கிறது

என்றெழுதி வைக்கிறான் என்பையன்.

வேலை கிடைச்சிடுச்சு !
                                          


மேனேஜர் : ஒரு நாளைக்கு வேலை பாக்குறது எத்தனை மணி நேரம்?

மேனேஜர் : இது ஒரு நாளக்கி இது எத்தனை பெர்சென்ட்?

மேனேஜர் :   அருமை ! அப்போ வருஷத்துக்கு எத்தனி நாள்?               

 மேனேஜர் :  வாரக் கடைசில நம்ம ஆபிஸ் லீவு. இல்லையா?                              நம்மாளு : ஆமா…..அதுக்கென்ன ?    

மேனேஜர் :  அதுக்கு 52 சனி, 52 ஞாயிறு, மொத்தம் 104 நாள் கழிக்கனும். வேறென்ன?    122 நாள்ள  இந்த 104 நாள் போனா மிச்சம் நீ வேலை செய்யற நாள் எவ்வளவு..?   
 
நம்மாளு : ம்…….18 நாள்.     
                                                                                                                                                                    
 மேனேஜர் :  புத்தாண்டன்னிக்கி வேலை பாத்தியா?
மேனேஜர் :  பொங்கல்?                                                                   
 நம்மாளு :   மூனு நாள் லீவு…                                                                                                                                                                                   
மேனேஜர் :  காந்தி ஜெயந்தி?                                                                                                                                                                                               
நம்மாளு :    இல்ல                                                                                   
மேனேஜர் :  தீவாளி?                                                                                                                                                                                        


நம்மாளு :    ஒரு நாள்………ரெண்டு நாள்…….!
நம்மாளு :    புரியுது…..…னான் இத்தனி நாளா கம்பெனி காசை சும்மா யூஸ் பண்ணிட்டு இருந்திருக்கேன்…    
                             
-
-