Wednesday, April 13, 2016

ஒரு நாள் போதுமா

திருவிளையாடல் திரைப்படத்தில் பரமசிவன் வந்து ‘ஒரு நாள் போதுமா, இன்றொரு நாள் போதுமா?” என பாடிய மாதிரிதான் நம் எல்லோருக்கும் 24 மணி நேரம் கொண்ட நாள் போதுமானதாக இல்லை.

ஆனால் இந்த நாளின் மகத்துவத்தினை நாம் அறிந்திருக்கிறோமா?

தத்தமது துறையில் சாதித்தவர்களை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்........நேர மேலாண்மையை கைக்கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

மிகச்சிறந்த எடுத்துக்காட்டு......திரைத்துறையில் ‘நடிகர்திலகம்’ சிவாஜி கணேசன், நேரத்தினை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கும், கொஞ்சமாவது ‘பங்க்சுவாலிட்டி’ குணம் நம்மை எப்படி மேலேற்றும் என்பதற்கும் அவரை ‘உதாரண புருசனாகப்’ பார்க்கலாம்.

முதலாவது ‘டைம் கான்சியஸ்’ என்பது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்துவது.
அதாவது கிடைத்திருக்கும் கொஞ்ச காலத்துக்குள் நிறைய்ய்ய்ய ‘பெர்பார்ம்’ பண்ணிக்கொள்வது. அப்போ க்வாலிட்டி கெட்டுவிடாதா எனக்கேட்கலாம்.
ஒரே நாளில் அவரது இரண்டு படங்கள் வெளியாயிருக்கின்றன.

தப்பில்லை.
நமது அத்தனை முயற்சிகளுமே ஹிட் அடிக்கும் என்று சொல்ல முடியாது.ரஜினிக்கும் ஒரு ‘பாபா’ உண்டுதானே?

ஆரம்ப கால கட்டத்தில் கிடைக்கும் நிறய்ய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது தன்னை புடம் போட்டுக்கொள்ள உதவும். தம் தவறுகளை கண்டுபிடிக்க இந்த அதிக வாய்ப்புகள் உதவ்லாம்.

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய இளம் நடிகர்களுக்கு, “ வருடத்துக்கு ஒரு படம் பண்னுகிற கான்செப்டை நீங்கள் விட்டொழியுங்கள். மாறாக மூன்று நான்கு படங்களில் நடியுங்கள்.......அதில் ஹிட் ஆகிற ஒரு படம் அடுத்த  நாலு படங்களை வாய்ப்பாக்கும்” என்று அட்வைசியிருக்கிறார்.

இதேதான் ......கிடைக்கிற வாய்ப்புகளை அதிகமாக பயன்படுத்திக்கொண்டால் அதில் கிடைக்கிற அனுபவம் உங்களுக்கு உங்களின் ப்ளஸ்- மைனஸ்களை உங்களுக்கே அறிமுகம் செய்யும்.


சமீபத்தில் பா.ராகவன் அவர்களின் ‘எக்சலண்ட்’ என்ற புத்தகத்தில் ‘நடிகர்திலகம்’ பற்றி பழம்பெரும் நடிகர் வி.கே.ராமசாமி சொன்னதாக தகவல் ஒன்று படிக்க நேர்ந்தது.

அதிலிருந்து......
“......................தமிழ்திரைத்துறையில் ரெண்டு நல்ல ஆக்டர்கள்னா சந்திரபாபுவும், சிவாஜி கணேசனும்தான். என்ன வித்தியாசம்னா, மத்த நடிகர்கள் செட்டுக்கு வரதுக்கு முன்னாடியே சிவாஜி வந்துருவாரு. அன்னிக்கி டயலாக், காமிரா கோணம், உடன் நடிப்பவர்கள் பற்றிய தகவல், எல்லாம் அப்டேட் பண்ணிக்குவாரு..வசனங்களை கண்ணாடி முன்னால் நின்னு பேசிபார்த்துருவாரு...லேட்டாவோ...கரெக்ட் டயத்துக்கோ வரவங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. இப்படித்தான் சிவாஜி பெர்பார்மரா ஆனாரு. ஒன்லி டைம் கான்சியஸ்.......

ஆனா சந்திரபாபு, எப்பவுமே லேட்டாத்தான் வருவாரு.........சீக்கிரமே ஃபீல்ட் அவுட்டும் ஆனாரு....”

இது இரண்டாவ்து வகை டைம் கான்சியஸ். அதாவ்து குறித்த நேரத்துக்கு முன்பே வேலையை தொடங்குதல்.

இந்த இரண்டு ‘நேர மேலாண்மை’ தத்துவங்களை புரிந்து கொண்டு செயல்படுகிற பயிற்சியாளரின் வாயில், “சாரி.....இன்னிக்கு என்னால் பயிற்சிக்கு வர இயலாது. ஒரு திடீர் வேலை” என்கிற வார்த்தைகள் வராது.

 நீங்கள் கொடுத்த நேரத்தை நீங்கள் கேன்சல் பண்ணும்போதோ, அல்லது வேறு நேரம் கேட்டு (postpone) பெறும்போதோ உங்களின் வாக்கின் உறுதியும், உங்களின் மீதான நம்பிக்கையும் குலைகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.


இதுபோலவே நாம்செய்யும் இன்னொரு மாபெரும் தவறு, குறித்த நேரத்தில்  முடிக்காமல் இழுத்தடிப்பது.

எவ்வளவு கால தாமதமாக ஆரம்பித்தாலும், முடிக்க வேண்டிய நேரத்தில்  முடித்தே தீரவேண்டும். அது காலத்தின் கட்டாயம்.

நல்ல நேரம் காத்திருக்கிறது. பெஸ்ட் ஆப் லக்.