Saturday, November 28, 2009

என் மனைவியென்றானவள் !

எனக்கென வருகையில்

உன் அடையாளம்

அத்தனையும் தொலைத்தவள் நீ !

 

உன்

உள்ளத்தை மட்டுமல்ல -

உன் இனிஷியலையும்

எனக்காக தாரைவார்த்தாய் !

 

உன் இல்லம் விட்டு வந்ததோடு,

என் இல்லமே உன்

முகவரியென்று கொண்டாய் !

 

உன் கனாவில் பல இரவுகள் இருந்திருக்கலாம்

ஆனாலும் ஒரு முதல் இரவை எனக்கானதாக்கினாய்!

 

*   *     *     *     *     *     *

உனக்கென நான் என்ன கொடுத்தேன்?

 

என்னையொத்த சிறு பிள்ளையும்

சில

எச்சில் முத்தங்களும் தவிர?

 

-து.வேலுமணி / ஈரோடு 9600790033

Monday, March 09, 2009

கோர்ட் & போலீஸ்

ஐகோர்ட்டிற்கு மூன்று ஷிப்ட்டாக போலீஸ் பாதுகாப்பு தரப்போராங்களாம். இளம் வயது போலீசாரை விட்டுட்டு, வயதான போலீசாரை மட்டும் பணியில் வைக்கறாங்களாம். சென்னை ஐகோர்ட்டில் நடந்த மோதல் எதிரொலியாக வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் உள்ளனர். இந்நிலையில், தமிழக அரசுக்கு ஐகோர்ட் பதிவாளர் எழுதிய கடிதத்தில், "பிப்ரவரி 19ம் தேதிக்கு முன் வழங்கியது போன்றே ஐகோர்ட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று கேட்டிருக்கிறார்.

அதைப் பரிசீலித்த அரசு, ஐகோர்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், வட சென்னை இணைக் கமிஷனர் ரவி, பூக்கடை துணைக் கமிஷனர் பெரியய்யா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. "ஐகோர்ட் தடியடி சம்பவத்திற்குப் பிறகு, போலீசாருக்கு எதிராக வக்கீல்களின் மனநிலை உள்ளது. ஐகோர்ட்டிற்கு வெளியே போலீசாரை நிறுத்தலாம். கோர்ட்டிற்குள் போலீசாரை அனுமதித்தால் சிக்கலாகலாம்' என ஆலோசிக்கப்பட்டது. "முன் போலவே ஐகோர்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 10 நாட்களுக்கு சோதனை முறையில் எட்டு மணி நேரத்திற்கு ஒரு "ஷிப்ட்' என 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட் பாதுகாப்பு அளிக்க முடிவெடுக்கப்பட்டது. ஐகோர்ட்டிற்குள் தடியடி நடத்திய இளம் வயது ஆயுதப்படை மற்றும் சிறப்புப் படை போலீசாரைத் தவிர்த்து, சட்டம் ஒழுங்கில் பணியாற்றும் மூத்த ஏட்டுகளை ஐகோர்ட்டிற்குள் பணியில் அமர்த்த போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.ந

நாட்டு நலன் என்கிற விஷயம் பின் தள்ளப்பட்டு, சுய நல தலை தூக்கினால் என்னாகும் என்பதற்கு வக்கீல்களின் இந்த விபரீதப் போக்கு சாம்பிள்.

எல்லோரும் கோர்ட் சொல்வதைக் கேட்கனும்,ஆனால் வக்கீல்கள் கேட்க மாட்டார்கள்.

என்ன கொடும கடவுளே இது?


Sunday, March 08, 2009

தா.பா.வின் தமாஷ்


தா.பா.வின் தமாஷ்
அ.தி.மு.க., தேர்தல் குழுவினரான மதுசூதனன், பன்னீர்செல்வம், ஜெயக்குமார், தம்பிதுரையுடன் இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் குழுவினர் தா.பாண்டியன், பழனிச்சாமி ஆகியோர், தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.அ.தி.மு.க., கூட்டணியில் ஆறு தொகுதிகளை தனது கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது


தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் அணியாக நாங்கள் இருக்கிறோம். முதல் கட்ட பேச்சுவார்த்தையை துவங்கி யுள்ளோம். போட்டியிடும் தொகுதிகள் நிச்சயம் செய்த பின் அறிவிக்கப்படும். தேர்தல் பிரசார தேதியும் அறிவிக்கப்படும்.பா.ம.க., எங்கள் அணிக்கு வருமா? என்பதை ராமதாசிடம் தான் கேட்க வேண்டும். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில் முறியடிக்கும் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளோம். தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம். இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

இதில் தமாஷ் எதுவென்று படிக்கிற உங்களுக்கே தெரிஞ்சுருக்கும்???????

Tuesday, February 03, 2009

திண்ணைப் படி: தானம்.....நிதானம்

திண்ணைப் படி: தானம்.....நிதானம்

கவிதை

அகரம் அமுதா எனும் வளைப்பதிவு சமீபத்தில் சந்திக்க ( பார்க்க..என்று சொன்னால் பாவம்,ஏனெனில் அவ்வளவு எளிமையாய் நேரில் சந்திப்பதை போல எழுதியிருந்தார் அவர்).

அதன் பாதிப்பில் அவருக்கு பதிலாய் நான் அளித்த வெண்பா.ஒரு ப்ளாக்ஸ்பாட் எழுதவே எனக்கு நேரம் - விஷயம் கிடைக்கவில்லை. இவருக்கு எப்படித்தான்....?

ஒரு ஸ்பாட்டில் எழுதுதற்கே தடுமாற்றம்
தெரு ஸ்பாட்டில் எழுதுகின்றீர் - வெறுங்
காலில் நடப்பதுபோலும் உம் மெழுத்து
பாலில் விஷமாய் நான்