பிசினஸ் சீக்ரட்ஸ்................வெளியே சொல்லலாம் !

ஒரு  வழக்கமான பயிற்சிப்பட்டறையாய் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இதை டிசைன் செய்திருந்தோம், நானும் ராம மூர்த்தியும்.

நிறுவனங்களின் விஷன்,மிஷன் இதை சம்மந்தப்தப்பட்டவர்களே உருவாக்கும்படி சொல்லிக்கொடுத்தோம்.



 தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் அதன் உணவு விடுதியில் சாப்பிட சென்ற போது டேபிளுக்கு வர தாமதமானது. தாமதமாய் கொண்டு வந்த சர்வர் அதற்கு மன்னிப்பும் கேட்டு, காரணம் சொல்லி (கொஞ்சம் கருகிவிட்டதால், மீண்டும் தயார் செய்த ) கொண்டு வந்த உணவுக்கு பில் வராது என்றும் அதை, தன் சம்பள்க்கணக்கில் கழித்துக்கொள்வதாயும் விளக்கமளித்தார்.

அடுத்த நாள் காலை, விடுதியின் மேனேஜர் , அவரை அழைத்து நேற்றைய இஅரவின் நிகழ்வுக்கு மன்னிப்பு கோரி , நிர்வாகம் அதற்காக காலை உணவை, தங்கள் பொறுப்பில் அளிக்குமென்றும், அதற்கு அவர் பணம் தரவேண்டாமென்றும் மன்னிப்பு கொரினார்.
இவருக்கோ ஆச்சாய்யம்.,
தான் ப்புகார் தராத ஒன்று. அது தவறு என்றாலும் முன்னமே சர்வர் மன்னிப்பு கேட்டும், பில் தராமலும், இன்று நிர்வாகம் மன்னிப்பு கேட்டு மீண்டும் இலவச உணவை அளிக்கும் சயல் ஆச்சர்யம் தந்தது.
இப்போது அவருக்கு நிறுவனத்தலைமயை சந்திக்கும் ஆவல் பிறந்த்து.
சந்திஉக்கும் வாய்ப்பும் கிடைத்த்து.

அத்துனை பேருமே இத்துணை பொறுப்பாய் இருக்க காரணம் கேட்டார்.
அலுவலகச்சுவற்றில் எழுதப்படிருந்த நிறுவனத்தின் விஷன், மிஷன் அவருக்கு காட்டப்பட்ட்து.

“ எங்களின் வாடிக்கையாளருக்கு த்ரும் சிறப்பான சேவையே எங்களின் முதல் நோக்கமாக.........................: என்று தொடங்கியது அது.

“இது எம்.டி.யோ, கன்சல்டன்டோ, முதல் நிலை மேனேஜர்களோ உட்கார்ந்து உருவாக்கவில்லை. கடை நிலை ஊழியர்வரை அமர்ந்து முடிவு செய்யப்பட்ட்து. அதனால்தான் அத்தனை பேருமே இதை மதித்து பின்பற்றுகின்றனர்”  அவரிடம் சொல்லப்பட்ட விளக்கம்.

அது ஒரு தொடர்விடுதிகளின் குழும்ம் என்பது இங்கே குறிப்பிட்த்தக்கது.

விஷன் மற்றும் மிஷன். பல இடங்களில் இதை நமது கன்சல்டன்ட் செய்வார்.

சில உதவிகரமான டூல்ஸ் கொடுத்து , அதன் மூலம் புரிந்துகொள்ளப்பட்ட விஷன், மற்றும் மிஷனை அவர்கள் அங்கே உருவாக்கினார்கள்.

மொத்தமாக இதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் 60 நிமிடங்கள் மட்டுமே.

Comments

Popular Posts