என்னை அறிந்தால் -2

“திடீரென்று கடவுள் தோன்றினால் , அவரிடம் ஒரு வரம் என்ன கேட்பீர்கள்?” என்று கேட்டேன். 

கேள்வி விதிமுறைகளுக்கு உட்பட்டது. அது “ பதிலை ‘டக்’குனு சொல்லனும்” .

‘இதுவா உங்க டக்கு?” என்கிற அளவுக்கு நிறைய பேர் தடுமாறித்தான் போனார்கள். என்னதான் கேட்பது கடவுளிடம் ?


ஒரு இளைய விற்பனையாளர் சொன்ன பதில் யோசிக்க வைத்திருக்கலாம் - கடவுளை.
“ என்னை நல்லா வச்சுக்க...............அது போதும்”



நம்மை நன்றாக வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும், கடவுளுக்கே கன்ப்யூசன் கற்றுக்கொடுக்க நம்மவர்களால் மட்டுமே முடியும்.

‘என்னை நன்றாக இறைவன் படைத்தான், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு’ என்று தனது பெரும்பாலான உரையை தொடங்குவார் திரு.சுகிசிவம் அவர்கள்.

அந்த......’நன்றாக’ ............த்தான் இங்கே சந்தேகமே!

ஒரு நேர்முகத்தில் கேள்வி, கலந்துகொண்டவரின் மன நிலையை அறியகேட்கப்பட்ட மனோதத்துவக்கேள்வி  : “தினக்கூலி,வாரச்சம்பளம், மாதச்சம்பளம்...இதில் எது உங்களுக்கு வேண்டும்?”

நம்மவரின் பதில் : “தினக்கூலியை தினமும் கொடுத்திடுங்க, வாரச்சம்பளத்தை வாராவாரம் கொடுத்திடுங்க, மாசச்சம்பளத்தை மாசாமாசம் வாங்கிக்கறேன் “

இங்கே ‘கக்கக்க போ’ என கனகச்சிதமாக கன்ப்யூசன் ஆனவர் யார் எனச்சொல்லவும் வேண்டுமோ?

‘நாலுபேர் நல்லா இருக்கனும்னா என்ன வேணா செய்யலாம், எதுவும் தப்பில்லை’ என வேலு நாயக்கர் சொன்ன அந்த நாலு பேர்  ‘ நான்-என் மனைவி-என் மகள்-என் மகன் ‘ என சொந்த ரேசன் கார்டின் ஜெராக்ஸ்காப்பியை லிஸ்டாய் தரக்கூடாது அல்லவா?



இந்த சமூகத்தின் மீது பாசம் இருக்கிற மாதிரியாவது ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’

அந்த நடிப்பின் அசல்அம்சம் தான், நோட்டுபுத்தகம் வழங்குதல் – தையல் மெசின் வழங்குதல் - ஏரி தூர்வாருதல் – கிராமத்தை தத்தெடுத்தல் -...............இன்னபிற ‘தல்’கள்.

நம்மை நல்லா வச்சுக்க, நம் குடும்பத்தை நல்லா வச்சுக்க, நம்ம சமூகத்தை நல்லா வச்சுக்க......என்னவெல்லாம் கடவுளிடம் கேட்கலாம்?

நாடு நன்றாக இருக்கவேண்டுமெனில் மானிலம், மானிலம் நன்றாக இருக்க மாவட்டம், மாவட்டம் 

நன்றாக இருக்க நம்ம ஊர், ஊர் நன்றாக இருக்க குடும்பம், குடும்பம் நன்றாக இருக்க நான்.............என எல்லாமே நன்றாக இருக்கத்தான் ஆசை.


அதற்குத்தான் இந்த என்னை அறிந்தால்...................................... 

(என்னது? முதல் பகுஹ்டியை இன்னும் படிக்கலையா?) http://vels-erode.blogspot.in/2015/02/blog-post_21.html

Comments

Popular Posts