Posts

Showing posts from March, 2014

5-5-5

Image
காவிரிக்கரையில் இன்னொரு காசியைப்போல் ( ஆறு – அதன் கரையில் கோயில் மற்று சுடுகாடு என்று ) இருக்கும் ஈரோடு என எனக்கு ஒரு இருமாப்பு எப்போது உண்டு. சமீபத்தில் விருதாசலம் சென்று வந்தபின் அது குறைந்து விட்டது. 23.03.2014 அன்று விரையில் ஒரு பயிற்சி வகுப்பு. போனதும் முதலில் என்னமோ எனக்கு விஜயகாந்த் ஞாபகம் தான் வந்தது. ‘காசியில் செத்தா மோட்சம் மறந்தறாதே’ என காசி போகும் மாமாவுக்கு அட்வைஸ் பண்ணி அனுப்புவார் நாகேஷ் – அன்பே வா படத்தில். காசியில செத்தாத்தான் மோட்சம் என்பதோடு திருவாரூரில் பிறந்தாலே மோட்சமாம். திருவண்ணாமலையை நினைத்தாலே மோட்சம். சிதம்பரத்தில் வணங்கினால் மோட்சம். காஞ்சிபுரத்தில் வாழ்ந்தால் மோட்சம். இப்பிறப்பு அறுத்து மோட்சமடைவதே சைவநெறியாம். திருவிளையாடலில் என்ன வேண்டும் எனக்கேட்கும் சிவனிடன் “மீண்டும் பிறவாமை வேண்டும்’ என அவ்வை சொல்வதை நினைவில் கொள்ளலாம். விருதகிரீசுவரர் எழுந்தருளியுள்ள விருதாச்சலத்தில் பிறந்தால் –வாழ்ந்தால்-தரிசித்தால்-நினைத்தால்-இறந்தால்.......எது செய்தாலும் மோட்சமே. கொடுத்து வைத்த விருதாச்சலவாசிகள். கோயிலுக்குள் நுழைந்தால் 2.75 லட்சம் சதுர அடியில் பிரம்ம…

பெய்யெனப் பெய்யும்....?

“என்ன அமைச்சரே, நாட்டில் மும்மாரி பெய்கிறதா?” என்று அரசன் கேட்டால், நாட்டில் அடிக்கடி மழை பெய்யவேண்டும் என்கிற அவரது ஆசை புரிகிறது. சரி ! மழை பெய்வதைக் கூட கவனிக்காமல் அவர் என்னதான் பண்ணிக் கொண்டிருந்தாராம் ? நாட்டின் எல்லாப் பகுதியிலும் மும்மாரி பெய்த்தை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை இல்லையா. தவிர அப்போது நம்ம ரமணன் வேறு இல்லையா? அதனால் இருக்கலாம். சரி அரசனை மன்னிப்போம். மழை வேண்டி வருண பகவானுக்கு விண்ணப்பம், கழுதை கல்யாணம், மழை சோறு....இப்படி வராத மழையை வரவைக்க எத்தனை முயற்சிகள்? செயற்கை மழை பற்றி இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம். அது எப்படி நடக்கிறது? நாம் பிசிக்ஸ் பாட்த்தில் படித்த மாதிரி, முதலில் செயற்கையாய் காற்றழுத்தத்தை உருவாக்குகிறார்கள். இப்படி மழை மேகங்களை ஒன்றுகூட செய்வதே முதல் நிலை. கேல்சியம் கார்பைடு, கேல்சியம் ஆக்ஸைடு, உப்பும் யூரியாவும் கலந்த கலவை அல்லது யூரியாவும் அமோனியம் நைட்ரேடும் கலந்த கலைவையை மேகங்களில் தூவினால், அவை காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை மேகத்தை உருவாக்க உதவுகின்றன. அப்புறம் ,மழை மேகங்களை அதிகரிக்க செய்கிறார்கள். சமையல் உப்பு, யூரியா, அமோனியம் ந…