Posts

Showing posts from 2012

திண்ணைப் படி: ‘அந்த’ மாதிரி படம் பார்ப்பவரா நீங்கள்?

கண்ணுக்குக் கண்

அஜ்மல் கசாப்புக்கு (அப்பாடா) ஒரு வழியாக மரண தண்டனை கொடுத்தாகிவிட்டது. 
இது ஒன்றுமறியா அப்பாவி மக்கள் மீதும், இந்திய நாட்டின் சின்னமான தாஜ்விடுதி மீதும் நடத்திய தாக்குதலுக்கு தாமதமான தண்டனைதான், ஆனால் சரியான தண்டனையே!
காலையில்இதுபற்றி‘புதியதலைமுறை’யில்செய்திசொல்லிவிட்டுசிலரிடம்கருத்துகேட்டார்கள். 
மார்க்.கம்யூனிஸ்ட்ஜி.ராமகிருஷ்னன்இதுசரியேஎன்றார். 
வேறுஒருசமூகஆய்வாளர்இதுதவறுஎன்றார்.
அதாவதுபலநாடுகளில்கைவிடப்பட்டஇந்ததண்டனைஇந்தியாபிடிவாதமாக

நல்லாத்தான போய்கிட்டு இருக்கு?

Image
பேஸ்புக்கில் எப்படி ஹீரோவாக (அல்லது ஜீரோவாக) இருப்பது என்று இன்னும்பல பேருக்கு தெரிவதில்லை.
அதெப்படி பேஸ்புக் பத்தி தெரியாமல் பொழப்பு ஓடுதாம் ?
அழகு டிப்ஸ், ஆறுமடிப்பு (சிக்ஸ்பேக்ஸ்) டிப்ஸ், முதுகுவலி டிப்ஸ், மூட்டுவலி டிப்ஸ், அட அவ்வளவு ஏன், ஃபிகரை மடிக்கக் கூட டிப்ஸ் தரும்போது பேஸ்புக்கில் ஹீரோவாக டிப்ஸ் தரக்கூடாதா என்ன?
இதோ....சமய சஞ்சீவி.......!
காலை எழுந்ததும் : “அன்பு பேஸ்புக் (இதை இப்போ முகனூல் என்று தமிழ்’படுத்தி’ இருக்கிறார்கள் நமது தமிழ் ஆஆஆவ்....ஆர்வலர்கள்) நண்பர்களுக்கு , இனிய காலை வணக்கம்” என்று போட்டு விட்டுத்தான் பாத்ரூமுக்குள் நீங்கள் நுழையவேண்டும். இல்லையேல் நீங்கள் ‘கசாப்’புக்கு கமிட்மெண்ட் கொடுத்தோர் வரிசையில் நிற்க வைக்கப்படுவீர்கள். நிம்மதியாக பாத்ரூம் போய் வந்தாச்சா? சரி. ஒரு காலைக் கடன் கழிந்தது. (நீங்கள் பாத்ரூம் போய்வந்ததை சொல்லவில்லை)
காப்பி, கீப்பி...? பழக்கமில்லையா? பரவாயில்லை.
இப்போது ‘நெட்’டை பாருங்கள். கை,கால்விரல்களில் நெட்டை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கண்ணை ‘நெட்’டை விட்டு எடுக்காதீர்கள். யாராவது பஹ்ரைனிலோ, சிங்கப்பூரிலோ, பதிவிட்டுக்கொண்டிருந்தால் ‘லைக்’…

‘அந்த’ மாதிரி படம் பார்ப்பவரா நீங்கள்?

அண்மையில் எனது நண்பர் ஒருவர் தனது மகன் பற்றி சொன்ன விஷயம், இரண்டு ஆண்பிள்ளைகளின் அப்பாவான எனக்கு(ம்) சற்றே அதிர்ச்சி தருவதாக அமைந்தது.
அதிர்ச்சிக்கு காரணம்- கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் அவரது மகனின் கைபேசியில் இருந்த அந்த ஒலி-ஒளி படங்கள்.
அதைப் பார்த்த அதிர்ச்சியில் அவர் மீள முடியாதவராய், எப்படி அதை மகனிடம் பேசுவது என்பதும் தெரியாதவராய் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
எனக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
19 ஆம் நூற்றாண்டின் தந்தையாய் இருந்திருக்க வேண்டியவர் இவர் என்றே தோன்றியது.
இன்னும் இவர் அவர்களின் வலையுலகை கவனித்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.
 ஏனெனில் எளிதில் மற்றவர்கள் ஊடுருவ முடிகிற கைபேசியிலேயே ‘அந்த’ மாதிரி படத்தை வைத்திருக்கும் பையன், வலைத்தளத்தில் அம்மாதிரியான படங்களைத்தானே அதிகம் பார்ப்பான்?
அவனுக்கு ஈர்ப்பு எதில் அதிகமோ அதில்தான் கவனமும் இருக்கும்?
நிறையக் கல்லூரி மாணவர்களிடம் அடிக்கடி அளவளாவும் வாய்ப்பும், சேர்ந்து பயணிக்கிற வாய்ப்பும் அதிகம் உள்ளவன் என்பதால் இந்த விஷயத்தில் அவருக்கு உதவிட எண்ணினேன்.
அவனிடமே இதைப்பற்றிப் பேசலாமா என்றால் நண்பரோ தடுக்கிறார். “வேண்டாம்ப…

சிரிப்பா சிரிக்குது !

Image