Friday, September 30, 2016

டெக்ஸ் கனெக்ட் - ஜவுளி துறைக்கான கருத்தரங்கு

ரொம்ப நாட்களாகவே மனதுக்குள் ஒரு எண்ண ஓட்டம்.
நம்மை வாழ வைக்கும் ஜவுளி துறைக்கு நாம் ஏதாகினும் செய்ய வேண்டும் என்று.....

ஜவுளித்துறையின் பணியாளர்களே அதன் தூண்கள். இரவு பகல் பாராது, கண் துஞ்சாது, கருமமே கண்ணாக.............உழைக்கும் அந்த வர்க்கம் உச்சியில் வைத்து பாராட்டத்தக்கவர்கள்.

அவர்களுக்காக TEXCONNECT - Technical Motivation Seminar  உருவாக்கப்பட்டது. இது 2-ஆம் வருடம்.

பொட்டில் அடித்தாற்போல் நெகிழ்ச்சியுடன் உயர்ச்சி பற்றி பேச டாகடர் ஸ்டார் ஆனந்த்ராம் தான் சரியான ஆள் என்பது மீண்டும் நிரூபணமானது.

"Come On" இவரின் தலைப்பு
துறையின் ஆளுமை சக்தி வளர என்ன செய்யவேண்டும் என ரொம்ப கேசுவலாக அவர் சொன்ன விஷயங்கள் அபாரம். Texconnect ஓப்பனிங்கே பெருமழை என பின்னர் வந்த பேச்சாளர்கள் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்கள்.

கேட்க வேண்டியதே இல்லை. பிரமாதமான பேச்சாளர், மோட்டிவேட்டர், நிறுவங்களுக்கான பயிற்சியாளர்....பிரமாதம்  போங்கோ.....

இன்றைய தேதியில் ஏன் மோட்டிவேஷன் தேவைப்படுகிறது என திருப்பூர்  திரு . சந்திரகுமார் அவர்கள் அறிமுக உரையாற்றி தொடங்கி வைத்தார். நான் தனிப்பட்ட முறையில் எனது துறையிலொரு தொழில்னுட்பனாக விளங்க இவரும் ஒரு காரணம் என்பேன்.

அடுத்து அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் கார்மெண்ட் டெக்னாலஜி துறைத்தலைவர் திரு.மனோகரன், எடுத்துக்கொடுக்க திரு. சுந்தர ராஜன் "Upgrade yourself" என்ற தலைப்பில், துறையில் வளர நாம் நம்மை துறையுடன் இணைந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது என தனது அனுபவத்திலிருந்து எடுத்துரைத்தார்.

ஜவுளி துறையை தனது முதன்மை தொழிலாக வைத்திருந்தாலும், ஜோதிட ஆராய்ச்சிகள் செய்து அதிலும் தன்னை மேம்படுத்திக்கொண்டுள்ள இவர், இரு விஷயத்தையும் இணைத்து பேசி அரங்கம் அதிர வைத்தார்.


இன்றைய ஜவுளி நிறுவனங்களின் பிரச்சினை மாணவர்கள் அல்ல. அவர்கலை தயாரித்தளிக்கும் கல்லூரிகளே.

ஈகோஸ்டார் ஸ்ரீகாந்த் முன்னிலை வகிக்க, அடுத்து அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் திரு. தினகரன் தனது அனுபவ மொழிகளால் அந்த சிக்கல்கள், சுவாரசியங்கள், திருத்தங்கள் பற்றி பகிர்ந்தார்.
பசி நேரம்......மக்கள் கவனம் திசை திரும்பும் நேரம்........புயலாய் அரங்கினுள் நுழைந்தார் திரு. P.V.கந்தசாமி அவர்கள். அருள்முருகன் டெக்னிகல் காம்பஸ் தாளாளர்.

தனது அருமையான முன்னுரையில் What your Boss thinking  என்பதை நியாப்படுத்தி தனது எண்ணம் என்ன என்பதையும் விளக்கினார்.

பெருமழையாய் வந்தார் ஹரிபாலா திரு.பாலகுப்புசாமி.
தனது பயிற்சித்துறை அனுபவம், பேச்சுத்துறை அனுபவம், வணிக அனுபவம்,

 கிட்டத்தட்ட் 50 நிமிஷங்களுக்கும் மேல் தனது காட்டாற்று பேச்சல் கட்டி வைத்தார், பசியை, பொறுமையின்மையை, ...இன்ன பிற இடைஞ்சல்களை

பிரமாதமான அனுபவமாக உணர்ந்ததாக பங்கேற்பாளர்கள் சொன்னதும் நமக்கு குளிர் உச்சிக்கு ஏறியது.

அத்துனை பேருக்கும் நினைப்பரிசு வழங்கியபின், லேப் மேலாளர் நன்றி சொல்லி, கலந்தோம்.....மகிழ்வாய்.