Friday, June 06, 2014

முதல் 'பிட்டு' படம் !


செமெஸ்டர் பரிட்சைக்கு படிக்க வேண்டி கருங்கல்பாளையத்தில் இருந்த நண்பன் வீட்டில் டேரா.

அவன் திடீர்ன்னு ‘ரயிலுக்கு நேரமாச்சு’ படம் பார்க்கப்போலாம் என்றான், நான் ராமராஜனின் ஒரே படம்தான் பார்த்திருப்பதால் கொஞ்சம் கலக்கத்துடந்தான் ஒத்துக்கொண்டேன்.

அவன் பழம் தின்னு அந்தக்கொட்டையை முளைக்க விட்டு மீண்டும் பழம்(?)பார்த்த பலே ஆளு! ஆனால் படிப்பில் பலே கில்லாடி.

 ஈரோட்டின் காவிரிக்கரை ஓர தியேட்டருக்கு போனோம்.                     
                                                      
“என்னடா வேற போஸ்டர் ஒட்டிருக்கு?” என்றேன்.
என்னை அவன், ‘அற்ப பதரே’ என்பதைபோல் பார்த்து, ”படமே வேறதான், ச்சும்மா வா” என்றான்.

சைக்கிள் பாஸ் போட இடம் இல்லை. முந்தின சைக்கிளின் ஹேண்டில் பார் மீது, எங்கள் சைக்கிளை வைத்து பாஸ் போட்டுவிட்டு உள்ளே போனால்....பெருமாள் கோவில் சொர்க்கவாசல் கூட்டம்.

எனக்கு இது முதல் அனுபவம். அவன்தான் டிக்கட் எடுத்தான்.
வெறும் பென்ச்தான்.

படம்போட்டு பத்து நிமிஷம்........ஒரு மலையோர மலையாள குடும்பம். ஒரு வயசாளி விறகு வெட்டப்போகிறான். வருகிறான். போகிறான். வருகிறான் மலையாள மணிரத்னம் படம் மாதிரி அமைதியாய் போய்க்கொண்டு இருந்த்து.

தியேட்டரில்இதுவரை அமைதியா இருந்தவர்கள் எல்லாம் சொல்லி வைத்தாற்போல விசிலாய் அடித்து தள்ளினார்கள்.

 “என்னடா இது, எதுக்கு இப்பிடி விசில்?” என்றேன். “இப்பப்பாரு மேட்டரை...இதான் நம்ம சிக்னல்” என்றான் அனுபவசாலி.

 ‘டப்’பென்று படம் நின்றது. மொத்த தியேட்டருக்கும் ஒரே ஒரு குண்டுபல்ப் மட்டும் எரிந்து அணைந்த்து “இதான் ஆப்பரேட்டர் சிக்னல்” என்றான் மீண்டும் அனுபவசாலி.

 “எதுக்கு ?” என்றேன் விவரங்கெட்ட தனமாய்.

 “இப்ப பாரு” என்றான். பக்கத்தில் இருந்தவரை பார்த்து விஷம்மாய் சிரித்தான்.
முன் சீட்டில் இருந்த ஒருவர் எழுத்து லுங்கியை அவிழ்த்துக்கட்டிக்கொண்டு உட்கார்ந்தார்.
 “ரெடியாயிட்டானுங்க...” முணுமுணுத்தான் நண்பன்.

திடீரென்று மரவெட்டிக்கு சம்பந்தமேயில்லாத ஒரு குளியலறையில் ஒருத்தி குளித்துக்கொண்டிருந்தாள்.

அத்தனை விசிலும் கப்சிப்.

 “போட்டாண்டா.....” அமைதியான தியேட்டர்.

மனோகரா கடைசி சீனில்தான் நான் இப்படி நிசப்தம் கேட்டிருக்கிறேன். “தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே......” சிவாஜி பேசப்பேச கேக்கனுமே? இங்கே எந்த கேரக்டருக்கும் டயலாக்கே கிடையாதே?

அந்தப்பெண் இன்னும் குளித்துகொண்டுதான் இருந்தாள். குளிக்கிறாள், குளிக்கிறாள், ‘இவளுக்கு இன்னிக்கு ஆபிஸ் லீவா’ என்கிற வரை குளிக்கிறாள். ஷவரில் தண்ணீர்.

கேமெராவில் அவள் மீது விழும் நீர் தலை முதல் கால் வரை விழுந்துகொண்டே இருக்க........”என்னடா இது சல்லடை துணியில குளிக்கிறா?”
“இதுவே அதிகம்டா” .

அப்போது கதவை திறந்துகொண்டு ஒருவன் நுழைய..... இடைவேளை.

"என்னடா இரு வெறும் பொம்பளை குளிக்கிற சீனா வருது? எங்க ஊரு கால்வாய்ல இதைவிட பெட்டரா குளிப்பாங்க"

எதுக்கு முறைக்கிறான்.

முறுக்கும்,டீயும் முடித்து உள்ளே வந்தோம்.
 நிறைய பேர் இன்னும் வரவில்லை. படம் போட்டாச்சு.


 மறுபடியும் வயசான விறகு வெட்டி..... “அடப்பாவி அவ்ளோதானா?” என்றுவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான்.

தியேட்டரில் கூட்டம் பாதி கூட இல்லை. “எங்கடா போனானுக எல்லாம்?” என்ற எனக்கு, “இனி வரமாட்டனுக, அவ்ளோதான் போல” வாடா கிளம்பலாம்” என்றான்.
“ஏண்டா, பாதி படம்தானே பாத்திருக்கோம்?” “ மீதி இன்னிக்கில்லை, வா”

சைக்கிள் ஸ்டேண்ட் காலியாக கிடந்தது.நீங்கள்ளாம் முதல் 'பிட்டு' படம் பார்த்த அனுபவம் சொல்ல முடியுமா?