Sunday, November 04, 2007

அகராதி (புடிச்ச) அருஞ்சொற்பொருள்

அகராதி (புடிச்ச) அருஞ்சொற்பொருள்

ஆளாளுக்கு அகராதி, திவ்யப் பிரபந்தம், திருக்குரல் உரை இப்படி எழுதி குவிச்சிட்டு இருக்க, நமக்கும் ஒரு யோசனை.
நாமும் தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?
(வரலாறு முக்கியம்!)

அவ்வளவுதானே...செஞ்சுடுவோமுனு காரியத்தில இறங்கிட்டோம்.
உடனே, தமில்...மன்னிக்கணும் தமிழ் அகராதில(?) போடலாமுனு ஒரு யோசனை(அங்கதானே யாரும் தப்பு சொல்ல முடியாது?)

இருந்தாலும் வித்தியாசமாய்,அகராதி புடிச்ச பசங்க உபயோகிக்கும் பல வார்த்தைகளுக்கு அருஞ்சொற்பொருள் போட்டுட்டோமில்ல.....

அரசியல்
ராமதாஸ் – கூட இருந்தே டென்ஷன் தரும் ‘குலகுரு’
சுப்ரமணியசாமி – லூசுப் பய புள்ள.
ஸ்டாலின் – பெரிய இடத்து சமத்துப் பையன்.
அழகிரி - பெரிய இடத்து டார்ச்சர் தரும் பையன்.
ஆற்காடு – போட்டுக் கொடுக்கும் ‘நிழல்’ மனிதர்.
ஐயா - H.O.D
அம்மா - முன்னாள் H.O.D

தொலை தொடர்பு
நோகியா - பாப்புலர் ஃபிகர்
மோடோரோலா - புரியாத ஃபிகர்
ப்ளூ டூத் - அட்டை போல ஒட்டும் ஃபிகர்
எம்.எம்.எஸ் - செலவு வைக்கும் ஃபிகர்
அவுட் கோயிங் ஃப்ரீ- சும்மா சுத்தலாம்.அவ்வளவுதான்.

சமையல்
சாம்பார் - குளப்படியாய் பேசும் லெக்சரர் / மாணவன்
கூட்டு - எங்கோ தொடங்கி எங்கோ முடிக்கும் லெக்சரர்

குடும்பம்
சென்னை சில்க்ஸ் - செலவு வைக்கும் மனைவி
சரவணா சில்க்ஸ் - ‘பிரமாண்டமாய்’ சுய தம்பட்டம் அடிக்கும் மனைவி
ஆலுக்காஸ் - நகைப் பிரியை

இப்போதைக்கு இதை வச்சி முன்னேறப் பாருங்க !
ம்ற்றவை அடுத்த மடலில். ஒ.கே?