ஐஸ்கிரீம் கதைகள் - 2

சுந்தர் தன் நண்பர்களுக்கு தனது பிறந்த நாள் ட்ரீட்டிக் கொண்டிருந்தான். டின்னரின் இறுதியில் , "யாருக்கெல்லாம் டெசெர்ட் வேண்டும்?" என்றான். கேட்டது தான் தாமதம் நண்பர்கள் அனைவரும் கை தூக்கினர். சிலர் இரண்டு கைகளையும்..... "பொறுமை....பொறுமை" என்று விட்டு, " யாருக்கு என்ன ஐஸ்கிரீம் வேணும், சொல்லிடுங்க...." என்றான். "எனக்கு வெண்ணிலா...
" இது நரேஷ். வெண்ணிலா, அவனை திரும்பி முறைத்தாள். "ஏண்டா உனக்கு உன் பொண்டாட்டி பேரைத் தவிர எதுவும் தெரியாதா?" என்றான் தனா. " ஸ்ட்ராபெர்ரி...." இன்னொரு குரல்.............." "எல்லோருக்கும் ஸ்ட்ராபெர்ரி பிடிக்குமா?" என்றாள் ராதா. " இல்லியே....எனக்கு சாக்லேட் தான் வேணும்..............." கோரஸ் குரலில் அந்த ரெஸ்டாரென்ட்டே அதிர, " ஏண்டா, ஐஸ்கிரீமில் எத்தனை வகை இருக்கு தெரியும்ல? இன்னும் இந்த வெண்ணிலா,ஸ்ட்ராபெர்ரி,சாக்லேட்டுன்னு இதையே கட்டிட்டு அழனுமா?" என்றாள் திலகா. "அதானே....இரு எல்லோருக்கும் நானே ஒரு செம வேரைட்டி கண்டு பிடிக்கிறேன்" என்று மெனுவில் விரலோட்டினான் அருள்மணி. அருள் ரொம்ப நேரம் தேடுவதைக் கண்டு "என்னடா மெனு கார்டில் படம் வரையறே?" என்றபடி மெனு கார்டினை வாங்கி ஐஸ்கிரீம் வெரைட்டி தேடலானான் பரணி. இதற்குள் ஆர்டர் எடுக்கும் சிப்பந்தி , “ சார்….யுவர் ஆர்டர் ப்ளீஸ்….” என்றார். டக்கென பரணியின் கண்கள் பக்கத்து டேபிளில், தம்பதியர் கையில் இருந்த ஐஸ்கிரீமை நோட்டமிட்டன… “ அதென்ன அயிட்டம்?” “ சார்…அது டுடேய்ஸ் ஸ்பெஷல், பிளேக் கரண்ட் வித் ரோஸ் ரிப்பல்ஸ்….” “ நல்லாருக்குமா?” “ செம்ம டேஸ்ட் சார்……குழந்தைகளுக்கும் பிடிக்கும், பெரியவர்களுக்கும் பிடிக்கும்” “ சரி, எல்லோருக்கும் அதுவே கொடுங்க……………” சிப்பந்தி நகர்ந்ததும் பரணியிடம் அருள் கேட்டான், “ஏண்டா, இதுலயுமா காப்பி அடிப்பே?” “ எது.... பக்கத்து டேபிளை பார்த்து ஐஸ்கிரீம் வெரைட்டி காப்பி அடிச்சதை சொல்றியா?” இதற்குள் சுந்தர் அருகில் வந்திருந்தான், “ அதிலென்ன அருள் தப்பிருக்கு? பரணி செஞ்சது கரெக்ட் தான். உனக்கு ஏன் அஜித் பிடிக்குது, எனக்கு ஏன் கமல் பிடிக்குது………சில விஷயங்களை நாம அவங்ககிட்டேர்ந்து காப்பி அடிக்க விரும்புகிறோம்……………..அதானே ?” “…………………………எனக்கு விஜய் பிடிக்கும், அதுக்கும் இதான் காரணமா?” “நிச்சயமா……ரசிகர் மன்றங்களும் அதனால்தான்! அப்பாவின் மேனரிசம், மேனேஜரின் கண்டிப்பு, அம்மாவின் பரிவு, நண்பர்களின் விட்டுக்கொடுத்தல்…..இப்படி ஏதோ ஒண்ணை நாம சமூகத்துலேர்ந்து காப்பியடிச்சுகிட்டேதான் இருக்கோம்….” “ காப்பி அடிச்சா தப்புன்னு தானே நமக்கு சொல்லிக் கொடுத்தாங்க..?” “ ஆமா….அறிவை காப்பி அடிச்சா தப்பு. பத்தாம் வகுப்பில் படிக்காமல் பரிட்சையில் காப்பி அடிச்சா தப்பு…….ஆனா, படிப்புக்கு வெளியே தப்பில்லை. டைரக்டர் மணிரத்னம் கூட என் கதைகளை மகாபாரதத்திலேர்ந்துதான் எடுக்கிறேன்…….அதுக்கு பேரு இன்ஸ்பிரேசன் அப்படின்னு சொல்லிருக்கார்…அதுவும் காப்பிதானே” “ஓ…..அப்போ ரெண்டு பாராவுக்கு மேலே சொன்ன அப்பாவின் மேனரிசம், மேனேஜரின் கண்டிப்பு……இதெல்லாம் கூட இன்ஸ்பிரேசன் தானா?” “நிச்சயமா…………………………….. நாயகன் படமே நாலஞ்சு படங்களின் காப்பின்னு சமீபத்தில் ஒரு யூட்யூப் பேட்டி பார்த்தேன் " " உனக்கு மட்டும் இதெல்லாம் எங்கிருந்து தான் சிக்குதோ?" நல்ல விசயங்களை நல்ல மனிதர்களிடம் இருந்து காப்பி அடிங்க. தப்பில்லை…….அதனால் விளைவதும் நல்லதே………

Comments

Popular Posts