ஏனய்யா எஸ்.பி.பி...

 மனுசனோட மகத்துவம் ...

தெரியாது.

அப்புறம் என்னய்யா அதுக்குப் பேரு மருத்துவம்?

சனங்கள மகிழ வச்சு
சாதிச்சு போனாத்தாய்யா அங்கயும் உனக்கு 
அமரத்துவம்.

மாமியா செத்தப்பா 
ஆம்புலன்ஸ கூப்பிட்டு 
சாதிசனம் சொல்லி வச்சு
டீ,டிபன் ரெடி பண்ணி
சம்பந்தி சடங்கு செய்ய
சாயங்காலம் ஆயிப் போச்சு ..

அங்கெல்லாம் நான் அழல....!


ஆத்தா செத்தப்ப,
அங்க இங்க ஓடி ஆடி,
ஆத்மாவுக்கு
அப்ளிகேஷன் தேடி,
காசு பணம் புரட்டி,
சொந்ததுக்கு சொல்லியனுப்பி பந்தலும் பார்த்து சொல்லி
சண்டை காரனுக்கு ஆளனுப்பி 
சகவாச காரனுக்கு சேதி சொல்லி.....
அங்கேயும் அழுவதற்கு நேரமில்லை....

அட அத்தனை பேரு காதுக்குள்ள..
உன் சத்தம் தான்யா ஊருக்குள்ள..
எங்க ஊர் பாட்டுக்காரன் நீதான்யா ..
எதுக்கெடுத்தாலும் இங்கே பாட்டுதாய்யா..

சிவாஜி கர்ஜனய தினமும் நடிக்கலய்யா..
கலைஞர் வசனத்தை தினமும் பேசலய்யா..
ஆனாலும் சனங்க இங்க
பாடாத நிமிஷம் இல்லை.

இப்ப வேற வேலை இல்ல ,
உனக்காக அழுவதைத் தவிர, இன்னோரு சோலி இல்லை.

என் கூட சேர்ந்து இப்ப..
எங்கூரு வானமும் அழுவதய்யா..

Comments

Unknown said…
பாடும் நிலாவிற்கு பாட்டாஞ்சலி



Popular Posts