பாஸ் என்கிற டைம் பாஸு !


ஆச்சு......இன்னும் ரெண்டு மூணு நாள்தான்.
அப்புறம் ஆபிசெல்லாம் திறந்தாகிவிடும். நாமும் போய் விடுவோம்......நம்ம சீட் கிழிபடாமல் இருந்தால், இன்னும் நம்ம பெயர் ரெஜிஸ்டரில் இருக்கிறதென தெரிந்தால், நாம் வழக்கம் போல வேலையை தொடரலாம்.


எங்கிருந்து தொடருவது......?

அது நம்ம பாஸுக்கே தெரியாது என்றாலும், நமக்கும் தெரியாது என்பது நமது மேனேஜருக்கு தெரியாமல் பார்த்துக்கொல்ல....சாரி...கொள்ள வேண்டுமல்லவா?

 சரி எப்படித்தான் 10 டு 5 ஐ ஓட்டுவதாம்? 

கவலை வேண்டாம்..இதோ சில டிப்ஃஸ்.

 1.நிச்சயம், அவுட்லுக்கை ஓபன் செய்து Send & Receive கொடுத்தால் ஹேங்க் ஆகியே தீரும். தெரிஞ்சுருச்சில்ல……..அப்புறமென்ன தயக்கம்…இதான் முதல் வேலையே. தெரிஞ்சே தப்பு செய்யலாமா? ( நீங்கல்லாம் இந்திய நிதி அமைச்சராக வாய்ப்பே இல்லை, பாஸ் )    

2.   இப்ப ஆபிஸ் மைக்ரோசாப்ட் அவுட்லுக்கில்  நம்ம மெயில் அக்கவுண்டை தூக்கிவிட்டு, திரும்ப ஆக்டிவேட் செய்யலாம்.   இப்படிச்செய்யும் போது நிச்சயம் உங்களுக்கு மெயில் பாஸ்வர்டு மறந்திருக்கும். பிரவுசருக்கு போய் forget password கொடுத்து….ஓபிஏஸ்  மாதிரி ஸ்பெசல் கேரக்டர்லாம் வச்சு newpass word செட் பண்ணி………நல்லாவே டைம் பாஸ் ஆகும்.


3.   செட் ஆயிடுச்சா…….இனியும் எதுக்கு அவுட்லுக்?   நேரா பிரவுசரை ஓபன் பண்ணி, பழைய மெயில் எல்லாத்துக்கும் ரிப்ளை பண்ண ஆரம்பிக்கலாம். படிச்சுப் பார்க்கவே மத்தியானம் ஆயிடும். 
     பதில் கொடுப்பது எப்படியா?  (நீங்க எடப்பாடின்னு ஒரு பேரு கேள்விப்பட்டதே இல்லியா?)

4.   தப்பான மெயில் ஐ..டி.க்கு போன உங்க மெயில் எல்லாம் ரிட்டர்ன் ஆயிருக்கும்ல ?  அதுக்கான ஸிஸ்டம் நோட்டிபிகேசனும் வந்துருக்கும்.........ச்சும்மா விடலாமா?   அதுக்கெல்லாம் தேங்க்ஸ் பதில் அனுப்பலாமே?


5.   இதையெல்லாம் சும்மா, சாதாரனமாக செய்யக்கூடாது.,,,,நீங்க வெட்டியா இருப்பது கண்டுபிடிக்கப்படலாம்.    கம்ப்யூட்டர் ஸ்கிரீனை முறைச்சு பார்த்துக்கிட்டே, யாரையாவது ( யாரை……மேனேஜரைத்தான்) செய்யலாம்).  

6.   உங்கள் அலுவலக சேரில் ஹாயாக சாய்ந்து உட்காரலாமோ?,,, ச்சேச்சே……சீரியசாக காட்ட வேண்டுமெனில், உங்கள் சேரின் நுனியில், ( அதாவது யோகிபாபுவின் கேவலமான கவுண்டர் டயலாக் கேட்கும்போது ஏந்திரிச்சு போயிடலாம்னு தோணுமே….அந்த பொசிசனில் ) விழுகிறமாதிரியே அம்ர்ந்து சீரியஸ் பண்ணவும்.      ( ச்சும்மா இருந்துகிட்டே சீரியசா நடிக்கவா….அதானே உங்க கேள்வி  ? , எதுக்கும் அடுத்த முறை நம்ம பாராளுமன்ற கூட்டத்தொடர்ல கலந்துக்கோங்க….)


7.   நடுவில் டீ டயம் வரும்………  ம்ஹீம்,போகாதீர்கள்.  அங்கே கூடும் அனைவரும் ஒரே ஒருத்தன் தான்யா வேலை பார்க்கிறான் என பேச வாய்ப்பு கொடுப்போம். ( சுகாதாரத்துறை  மந்திரி
ஞாபகம் வருதோ?)

8.   அடுத்த சீன் : அந்த டீடைமர்கள் ( டீ மடையர்கள் என்றுதானே படித்தீர்கள்? ) அனைவரும் உங்களை பார்க்க வருவார்கள். உங்கள் உட்டாலக்கடி தெரிந்துவிடக்கூடாதல்லவா?    யேபிள் மீது வழக்கமாக எழுதி எழுதி கிழிப்பீர்களே அந்த நோட்புக்கை வைத்துக்கொள்ளுங்கள்.  எஃபக்டிவாக இருக்கும். 


9.   உடன் பணியாளர்களோ, மேனேஜரோ…….அட ஓனரோ உங்கள் இருக்கைக்கு அருகில் வருவதற்குள்  அந்த நோட்டில், பலவிதமான வார்த்தைகளை எழுதி வையுங்கள். அவை கொஞ்சம் டெக்னிகலாக இருந்தால் உங்கள் உடம்புக்கு நல்லது. உதாரணம் : மார்க்கெடிங், கஸ்டமர், பேமெண்ட்………..இப்படி மேலிடத்துக்கு பிடித்த வார்த்தைகளாக இருந்தல் சிறப்பு.  எழுதிய வார்த்தைகளை உடனே அடித்துவிடனும்.  ( அதாவ்து 20லட்சம் கோடின்னு அடிச்சு உடரது மாதிரி )

10.  அவர்களெல்லாம் டீ சாப்பிட்டு சீட்டுக்கு திரும்புகையில், நீங்கள் டீ சாப்பிட போகலாம். அப்படி போகையில், எதிரே பக்கத்து மாநில முதலமைச்சரே வந்தாலும் கண்டுகொள்ளாத பழைய செல்வி மாதிரி அவர்களையெல்லாம் கிஞ்ச்சித்தும் மதிக்காமல் , ஆள்காட்டிவிரலுக்கும், நடு விரலுக்கும் இடையே பேனாவையோ, பென்சிலையோ வைத்து  ஆட்டிக்கொண்டே , சுப்பிரமனியம் சுவாமி மாதிரி தனக்குத்தானே ஏதாவது பேசிக்கொண்டே  நடக்கவும்..

இந்த பத்துக்கட்டளைகள் முதல் நாளுக்கு மட்டுமே எனக்கொள்ளவும்.  ஏரியா கவுன்சிலர் மாதிரி  தினம் ஒரு புது ஐடியா கண்டுபிடிக்கலாம்

Comments

Popular Posts