டேட்டாமயமான எதிர்காலம்

 ஒரு வெல்கம் பார்ட்டி.

தன் மகளின் திருமணத்துக்காக தேர்வு செய்யப்பட்ட புது மணமகனை அத்தனை பேருக்கும் இன்ட்ரொட்யூசினார் அந்த பிசினஸ் புலி மாமனார்.

 மணமகனுக்கான அரியதோர் ஆஃபரையும் அறிவித்தார்.

 “இதோ.. உங்கள் முன், என் வருங்கால மருமகன். எங்கள் குடும்பத்தில் நுழையும் அவருக்கு எனது தொழிலின் 50 சத பங்கினை அவருக்கு அளிக்கிறேன்………” சொன்னதோடு நிற்காமல் அப்போதே அதற்கான டாக்குமெண்டை அளித்தார்.

 பயங்கர கைதட்டலும், வரவேற்பும்.  அவரே தொடர்ந்தார்….

”சொல்லுங்க மருமகனே, நீங்க எந்த பொறுப்பை ஏத்துக்கப் போறீங்க, உற்பத்தியை கவனிச்சுக்கறீங்களா?”

 “ஸாரி மாமா…எனக்கு இந்த ஃபேக்டரி சத்தமே ஒத்துக்காது…..வோணாம்..” மாப்பில்ளை முகத்தை அஷ்டகோணலாக்கினார்.

 “ஓ….சாரி..மாப்ளே…ஒண்ணும் பிராப்ளம் இல்ல…..ஆபிஸை உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். அது ஒங்களுக்கு கரெக்டா இருக்கும்.”

 “அய்யய்யோ மாமா... ஆபிசில , டெஸ்க்குக்கு பின்னாடி உட்கார்ந்து வேலை பார்க்கறதே எனக்கு …வ்வே……ஆகாது…..அதை விட்டுடுங்க!”

 “மார்க்கெட்டிங்?”

 “அய்யோ ஆகாது…?”

 “ அப்போ ஆடிட்டிங்தான் பெஸ்ட்டு…?”

“ ஆஹாஹா, அது மகா போர்…?”

 “….என்னய்யா அனியாயமா இருக்கு? அப்போ, உங்கிட்ட இருக்கற 50 பர்சண்டை வச்சுக்கிட்டு என்னதான் பண்ணப்போறே? “

 

“ அதை நீங்களே பர்சேஸ் பண்ணிக்கோங்க மாமா….”

 (புரிஞ்சவங்களுக்கு பூஸ்ட் தேவையில்லை)

 

கொஞ்சம் நன்றாக யோசித்துப் பார்த்தால், நாமும் இப்படித்தான் சும்மாவே காசு பண்ண முடியுமா என்று இருந்திருக்கிறோம் என்பது தெளிவாகும்.

 கொரோனாவை காரணம் காட்டி, சும்மா இருந்துவிட்டு, அப்புறம் ஆர்டர் இல்லை, இலாபம் இல்லை, ஆட்கள் இல்லை, அதிசயம் ஏதும் நடக்கவில்லை என புலம்பித்தள்ளிவிட்டோம்.

 ஆனால், ஆர்வம் இல்லை என்பது மட்டும் தான் உண்மை. இது பெரும் நிறுவனங்களை சிலாகிக்க வேண்டிய நேரம்.

 அவர்களைப் பாருங்கள், கோவிட்டின் பாதிப்பு ஆரம்பித்த வேளையில், சற்றே கலக்கமுற்று பின் வாங்கியிருந்தாலும், உடனடியாக சுதாரித்துக்கொண்டு, ஸ்டாக் வைக்க வேண்டியவைகள், புதிய ஆர்டர்கள், அடுத்த தேவைகள், வேலையாட்கள் சம்பளம், தயாரான பொருட்களில் உடனடியாக அனுப்ப வேண்டியவைகள், செலவு குறைப்பு, (…………ஹப்பா……மூச்சு வாங்குதா?) என யோசித்து தம்பிள்ஸ் அடிக்காமலே களம் காண தயாராகிவிட்டிருந்தனர்.

 மற்றவர்கள்…….இரண்டு பாராவுக்கு முந்தய காரணங்களை சொல்லி , புலம்பிக்கொண்டிருந்தனர்,

 இதைத்தான் Prediction of Future என்கின்றனர் வல்லுனர்கள். இந்த 2020 இன் கொரோனா மட்டும்தான் தொழில் சிரமங்களுக்கு காரணமா என்றால்…. இல்லை.

 இந்த மோசமான சிச்சுவேஷன் கடந்த 2019 அக்டோபரிலேயே ஆரம்பித்துவிட்டது. ( ஹலோ..அதுக்கும் கொரோனாதாங்க காரணம் என்று  நீங்கள் ப்ளா..ப்ளாவது  கேட்கிறது.) தொடர்ந்து தொழில் துறையில் இயங்கி வருபவர்களிடம் கேளுங்கள்….இதெல்லாம் ஒரு சைக்கிள் ( ரெண்டு சக்கரமா, மூணு சக்கரமா? ) என்று அவர்கள் பகருவார்கள்.

 அதாவது, தொழில் ஏற்ற – இறக்கம். ( இரக்கம் அல்ல)

இதெல்லாம் சகஜமாக அவ்வப்போது நடப்பதுதான். ஐந்து வருடங்களுக்கு இடையிலோ, மூன்று நான்கு வருடங்களுக்கு இடையிலோ.

 இதை அனுமானிப்பதுதான் Prediction of Future எனப்படும்.

 எப்படி அந்த அனுமானம் வருமாம்?

 அனுபவம்தான்.

 அனுபவம் எப்படி வருமாம் ?

 எல்லா வேலைகளிலும் இருக்கும் ஈடுபாடே அனுபவம். 

 எப்படி அந்த அனுபவத்தையும், ஈடுபாட்டையும் மேம்படுத்துவது?

 சிம்பிள்.

கடந்த ஒரு மாதத்தில் எவ்வளவு பொருட்கள் விற்றிருக்கிறோம் எனும் லிஸ்டை தயார் செய்யுங்கள்.  அல்லது  எவ்வளவு பொருட்கள் விற்றிருக்கிறோம் எனும் லிஸ்ட். அல்லது எவ்வளவு ஆர்டர் பெற்றிருக்கிறோம் எனும் லிஸ்ட்.

 அதிலிருந்து சுமாராக 10% அதிகமாக அடுத்த மாதத்திற்கான கோல் அமையுங்கள்.

 ஓகே. இது பிரடிக்ஷன் இல்லையே….அதானே உங்கள் கேள்வி ?

 நடப்பை வைத்து, எதிர்காலத்தை அனுமானிக்கலாமே? கூடாதா என்ன? நாம் மேலே பார்த்த மாப்பிள்ளை மாதிரி ச்சும்மாவே மாமனார் பணத்தை ஆட்டையை போட முடியுமா என்ன ?

 போலவே, கடந்த மூன்று மாதத்தைய விற்பனை, ஆர்டர், இன்வாய்ஸ் கணக்குகளை லிஸ்ட் செய்யுங்கள். இதன் ஆவரேஜை அடுத்த மாத கோல் என வையுங்கள்.

 ஒரு மாதக் கணக்கினைப்பார்த்தோம்.

மூன்று மாத கணக்கினைப் பார்த்தோம்.

அதே மாதிரி இந்த மாதத்திலிருந்து கடந்த ஒரு வருட (  நிதியாண்டோ, காலண்டர் ஆண்டோ அல்ல…) கணக்குகளை எடுங்கள்.

 தொழில் வெற்றி என்பது டேட்டாக்களை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதுதான்.

டேட்டா என்பது  நாம் உள்ளிட்ட எண்கள் அல்ல. உள்ளீடுகளிலிருந்து நாம் பெறும் தகவல்தான்.

 இதுதான் எதிர்காலத்தை கணித்தல்.  

 இந்த கணிப்புகளுக்கு தேவை, டேட்டா.

 கடந்த ஒரு வருட டேட்டாவிலிருந்து கீழ்க்கண்ட தகவல்களை உருவலாமா?

 1)   வருடத்தின்  எந்த மாதத்தில் பிசினஸ் அதிகம் அல்லது குறைவு.                                      2)   வருடத்தின்  எந்த மாதத்தில் பில்லிங் (பிசினசுக்கும், பில்லிங்கும் சம்பந்தமில்லை) அதிகம் அல்லது குறைவு                                                                                                                                    3)   வருடத்தின்  எந்த மாதத்தில் வசூல் அதிகம் அல்லது குறைவு                                            4)   எத்தனை பில்கள் கேஷ் மற்றும் கிரடிட்                                                                                         5)   மேற்கண்ட அத்தனையும், முந்தைய, பிந்தய பெர்பார்மன்சோடு கம்பேர் செய்யலாம்.                                                                                                                                                        6)   கம்பேர் செய்த பிசினஸ் பெர்பார்மண்சுகளின் பர்சண்டேஜ் என்ன?                                    7)   ஏட்சட்ரா….எட்சட்ரா..

நோய் நாடி, நோய் முதல் நாடி என்று வள்ளுவர் சொன்னது, உடல் நோய்க்கு மட்டுமல்ல. கொரோனா மற்றும் சீசன் ஆகியவற்றால் பாதிக்கப்படும் தொழில் நோய்க்கும்தான்.

கற்காலம் தாண்டி, இரும்புக்காலம் தாண்டி, டீசல் நாகரிகம் தாண்டி, டேட்டா கலாச்சாரம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம்.

புரிந்தால் பூஸ்ட் தேவையில்லை.

Comments

Popular Posts