The King

பாலைவன ஓரம் ஒரு சின்ன ஊர். நம்ம மெட்ராஸ் மாதிரி, அங்கேயும் தண்ணிரே இருக்காது. சங்கல்பன் அந்த ஊரின் தலைவன். சென்னைமேயர்மாதிரி இல்லாமல் இவன் கொஞ்சம் நல்லவன்.
மழையில்லா அங்கே பூண்டிஏரி மாதிரி ஒரு குளம், அதிலும் குழம்பிய தண்ணீரே எப்போதும் இருக்கும்.சுவையும்நம்ம சென்னை தண்ணீர் மாதிரி கொஞ்சம் குழப்பமாய்த்தான் இருக்கும் !
அப்போது அரசன் , அருகிலுள்ள மாமியார் வீட்டில் முகாமிட்டிருப்பதை தெரிந்த சங்கல்பன்,
மழையின்றி வாழும் மக்களுக்கு உதவி கேட்க அரசனைப்பார்க்க கிளம்பினான்.

வழியில ஒரு குளம்.....அது நம்ம காவேரி மாதிரி தெளிவா குழம்புன குளம். அந்த தண்ணீரை தாகத்துக்கு குடித்தான் சங்கல்பன். பூண்டித்தண்ணியை விட பெட்டரா இருந்தது. அவனுக்கு மகிழ்ச்சி...தண்ணி நல்லா சுவையா இருக்கேன்னு !
அரசு அதிகாரிகளைபார்க்க கையில வெய்ட்டா எதும் கொண்டு போகனும்ல ?
குளத்திலிருந்து, தன் தோல் பை நிறைய தண்ணீரை எடுத்துக்கிட்டான். இதைக் கொடுத்தால், இந்த சுவையான த்ண்ணீரை குடிச்சு, அரசர் மகிழ்ந்தால், பரிசு நிறைய தருவாருல்லன்னு அவன் நினைப்பு.
அரசரை பார்த்தான்.
அவரும் வேதார்ண்யமே புயல்ல காணாமல் போனாலும், மாமியார் ஊரு பங்சன் கலந்துகிட்ட சி.எம். மாதிரி ஜம்முனு சந்தோசமாத்தான் இருந்தாரு.
"என்னா வேணும்?" என்றாரு.
" அரசே, செமையான குடி தண்ணி கொண்டு வந்திருக்கேன். குடிச்சு பாருங்க...அசந்துருவீங்க"ன்னான்.
அரசருக்கு டவுட்டு. எதும் கேன் தண்ணியை கொண்டாந்து கலாய்க்கிரனான்னு...இருந்தாலும் , : "கொடு , பார்க்கலாம்" என்றாரு.
கொடுத்தான். குடிச்சாரு.
" அட..ஆமா. சரவண பவன்ல, கை விரல் நனையாம கொடுப்பானே, அப்படி சுவையா இருக்கே. சூப்பர். கேளு. உனக்கு என்ன வேணும்?" ன்னாரு.
சங்கல்பன்," அரசே, நான் கொண்டு வந்த பை நிறைய தங்க காசு வேணும்" என்றான்.
அரசரும், தன் அடிமைகளை .....அதான் அமைச்சர்களைப்பார்த்து, " அந்த பை தண்ணீரை வேற பாத்திரத்தில் வச்சுகிட்டு, அது நிறைய தங்க காசு கொடுங்க" என்றார். அப்படியே சங்கல்பனிடம், " நீ, நாட்டுக்குள் போகாமல், உன் ஊருக்குத்தான் போக வேண்டும்: என்றார். மீடியாவுக்கு பேட்டி கொடுக்கக்கூடாதுன்னு நக்சலைட்டுகளிடம் சொலவ்து மாதிரி.
'குறை தீர்" நாள்ல கலெக்டரை பார்த்த மகிழ்ச்சியோடு அவனும் கிளம்பினான். ஈ.பி.எஸ் கூட இருக்கும் ஓ.பி.எஸ் மாதிரி,எப்போதும் அருகிலேயே சந்தேகக் கண்ணோடு இருக்கும் அடிமை அமைச்சருக்கு பெரும் குழப்பம்.
" எதுக்கு, அவனை ஊருக்குள் போக வேணான்னீங்க?"
அரசர் சொன்னார்." அடிமை அமைச்சரே, அவன் கொண்டு வந்த தண்ணில சுவையும் இல்லை, சுத்தமும் இல்லை. ந்ம்ம ரயில்வே ஸ்டேசன்ல கிடைக்குதே...,'ரயில் நீர்'...... அதை விட இது மோசம்.
ஆனால், அவன் இத்தனை நாளா, நாம பஸ் ஸ்டேண்டுல தரும்,'அம்மா குடி நீர்' கண்டிசன்ல தண்ணி குடிச்சிட்டு இருக்கான். அதுனால எது நல்ல த்ண்ணின்னு தெரியாம , இதையே எனக்கு பரிசா கொண்டு வந்த்ருக்கான்....ஊருக்குள்ள போனா
நியூஸ் சேனல்ல விசயம் தெரிஞ்ச்சிடும்.அதான். பாவம், மோசமான பொருளை அரசனுக்கு கொடுத்ததை நினச்சு அவன் வருந்தக் கூடாதுல்ல?"
1000 கோடி உதவித்தொகை கிடைச்சா மாதிரி அங்கிருந்தவங்களுக்கு முகம் பிரகாசம் ஆயிடுச்சி.
"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்" வள்ளுவம் சொல்வதும் இதைத்தான்.( நல்ல நிலையில் நின்று ஆட்சி செய்யும் மன்னன், இறைவன் போல!)

Comments

Popular Posts