மனித வளம் - Textiles

 






உலகம் தழுவிய அளவில் சுமாராக 770 பில்லியன் டாலர்களில் நம்து ஆயத்த ஆடை வியாபாரம் நடைபெறுகிறது. மிகப்பெரிய இந்த தொழிலில் இந்திய தேசத்தின் பங்கு 5.5 சதம் மட்டுமே.

 

கவலை கொள்ளேல்...இது மாறியிருக்கிறது,

இந்த வருடம் உச்சம் நோக்கி இந்தியா திரும்பியிருக்கிறது.

 

அதே சமயம் மனிதவளக்குறியீட்டிலும் நமது நாடு வீறுநடை போடுவதற்கான நல்ல காரணிகளும் நடந்துகொன்டுதான் இருக்கின்றன.

 

ஆனாலும் உலகந்தழுவிய அளவீட்டுக்கு அருகில் வர நாம் போராடித்தான் ஆக வேண்டியதிருக்கிறது. ஏனெனில் சிற்சில நிறுவனங்கள் தவிர பெரும்பாலான நிறுவனக்ள் சம்பளக்கணக்கு போடுவதற்கே மனிதவளத்துறையை வைத்திருக்கின்றன.

 

வளர்ச்சிக்கும், மாற்றத்திற்குமான பொதுக்கருத்தோ, வழிவகைகளோ அங்கே இல்லையென்பதே நிதர்சனம். இதனால் மன ஊக்கம் குறைந்து,  பணியாளர்வருகை குறைந்து, பொதுவான உற்பத்தி அளவு மற்றும் தரமும் குறைந்துவ்ருகிறது.

 

சிலசமயம், 6 மாதங்களுக்குள் அவர்களை நிலையான வேலையாளாக காட்டாமல், ESI, PF,போன்றவற்றிலிருந்து விலக்கு பெற இடை நிறுத்தும் செயல்களால் நம்பிக்கை, தரம் ஆகிய இரண்டுமே கெட்டு நிறுவங்களின் மீதான ‘பிராண்ட்’  என்பது எதிர் நிலை வளர்ச்சியை பெறுகிறது.

 

மனிதவளமேம்பாடு துறையானது ஒவ்வொரு  நிறுவனத்திலும்,தனக்கான சொந்தக் கருத்தில் பலமாக வேரூன்றி இருக்க வேண்டும். அதாவ்து பணியாளர்களின் தொழில்நுட்பம், தனித்திறமை, அறிவு, அவர்தம் வேலைத்திறம் ஆகியவற்றின் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதாக.

 

 வேலையாளர்தம் பணி அழுத்தம், தேவை இவற்றின் இடையே ம.வ.மே.துறையானது தனது கொள்கையை சிறப்பாக நிறுவும்போது, அங்கே உற்பத்தித்திறன் மேம்படும்.

ஆனாலும், வேலைக்கு ஆளெடுப்பது என்பது ‘பொது’ நிலை தாண்டி ‘ குறிப்பிட்ட’ நிலைக்கு என வருகையில் மனிதவளமேம்பாடு துறையானது ‘பயிற்சி’ அளவில் நம்பிக்கையூட்டும் விதமாக வடிவமைக்கப்படுதல் வேண்டும்.தினசரி தேவைகள், பொதுவான தேவைகள் இவற்றை நோக்கி பயிற்சிக்களம் அமைய வேண்டும்.

 பயிற்சிக்கான வசதிகள் என்பது நாம் அவர்களுக்கு எநத மாதிரியான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பதை பொறுத்தே அமைய வேண்டும். பயிற்சிமற்றும் கல்வி அள்விலான பின்தங்குதல், நிறுவனம் நினக்கும்புதுமைகளை புகுத்த பெருந்தடையாக அமைந்துவிடுகிறது.

மனிதவளமேம்பாடு துறையானது பணியாளர்களுக்கும், நிறுவன மேலாண்மைக்கும் இடைப்பட்ட பாலமாக அமைந்து, அதாவ்து இந்த இரு துறைக்குமான புரிதலை மேம்படுத்த உழைப்பது அவசியமாகிறது.

 

Source : Dream Factory - Business Consultancy

 

Comments

Popular Posts