கட்டாய விடுப்பா - கொரோனா ?

கட்டாய விடுப்பில், கட்டாய வீடியோ கால், கான்பரன்ஸ், மீட்டிங் வந்தாலும் வந்தது.....சிலபல சிக்கல்களும் பின்னாலேயே !
குறிப்பாக Zoom app- பை பயன்படுத்துவது பற்றி
Host-க்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தெரிவித்திருப்பது போல, பங்கேற்பாளர்களுக்கு நாமும் .....
1) வீடியோவை செட் செய்யும் முன், உங்கள் மூஞ்சையும் செட் செய்து கொல்லுங்கள். ....சாரி, கொள்ளுங்கள். தூக்கக் கலக்கத்தில் பல்லு மட்டும் துலக்கி வந்தது தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனி. 

2) வீடியோவை செட் செய்யும் போது அது உங்கள் முகம் காட்டுகிறதா, வீட்டின் விட்டம் காட்டுகிறதா என உறுதி செய்து கொள்ளுங்கள். ( பல நாள் ஒட்டடை )

3) சவுகரியமாக இருக்கிறதென்பதால் இரண்டு கால்களுக்கு நடுவில், மொபைல் வைத்து, வீடியோ ஆன் செய்யும் அபாயம் வேண்டாம்.

4) உங்கள் உடனடி பின்னால் வெறும் சுவர் மட்டும் இருக்கட்டும். அதாவது அறையின் ஓரம், கடைசில் அமருங்கள். இல்லையேல், உங்கள் அறையில் லுங்கி மாற்றுவது, ( அரிவாள்மனையோடு ) வெங்காயம் கொண்டு போவது எல்லாம் காட்சிப்படும். இதெல்லாம் கூட பரவாயில்லை.... பீரோவைத் திறந்து.....சரி விடுங்கள் !

5) நீங்கள் பேசாத போது, மைக்கை ம்யூட்டில் வையுங்கள். பின்னால் நேத்து ராத்திரி யம்ம்ம்மா,,,,

6) தேவையில்லாத போது உங்கள் வீடியோவை ஆப் செய்து கொள்ளவும். சட்டையெல்லாம் சிந்திக்கொண்டே காபி குடிப்பது தவறல்லவா?

7) மொட்டை மாடியிலோ, திறந்தவெளியிலோ வேண்டாம்.....பின்புலம் ரசிக்கத்தக்கதாக இல்லாமற்போகலாம்.

8) கடைசியாக......மீட்டிங் முடிந்ததும் "சாவடிச்சுட்டாய்ங்க....ஸதாய்க்கறாங்க...ராவிட்டானுக..." என்றெல்லாம் இம்மீடியட் கமெண்ட் அடிக்கும் முன் மைக், ஆஃப் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யவும். இல்லையேல் மேனேஜரிடம் இருந்து போன் வரலாம். அதையாவது ஆஃப் செய்து வைக்கவும்.

9) கட்டேங்கடைசியாக......மீட்டிங் முடிந்ததும் " தீச்சுட்டாய்ங்க..." என்றுவிட்டு எழுந்து, நீங்கள் செய்யும் அத்தனை 
அங்க சேஷ்டைகளும் , ஃபார்மல் ஷர்ட் வித் லுங்கியும், வீடியோவில் !........ஞாபகம் இருக்கட்டும். Leave Meeting ஆப்ஷ்னே அதற்குத்தான்.

Comments

Popular Posts