அரசியல்வாதிகளுக்கு பயிற்சி

பள்ளி,கல்லூரிகளில் பயிற்சி வகுப்பெடுப்பது ஒருவகை;
தொழில் நிறுவனங்கள், சில்லறைவிற்பனை நிறுவனக்ளுக்கு இன்னொரு வகை;
பெரிய கார்ப்பரேட்......................கொஞ்சம் மாறுபாடான வகையில் அவர்களுக்கு பயிற்சி தரவேண்டும்.ஆனால் கடந்த  ஜூலை 15, 16 தேதிகளில் எனக்கு முற்றிலும் புதிய அனுபவம்; ஒரு அரசியல் கட்சிக்கு.

அதுவும் தேர்தல் சாராத இயக்கமாய் ஆரம்பித்து, தேர்தல் அரசியலுக்குள் நுழைய எண்ணும் கட்சிக்கு.அதன்,  தலைவரே பெரிய பேச்சாளர். எழுத்தாளர் என்பது இங்கே பின்குறிப்பு. கொஞ்சம் 'கிடுகிடு' கவலை நெஞ்சுக்குள் எழுந்தாலும், "உங்களின் அரசியல் பார்வை, கவலை  மற்றும் அது சார்ந்த சிந்தனைகளை கவனித்தே , இப்பொறுப்பை அளிக்கிறோம்" என்றார்கள். இன்னும் பயமாகி விட்டது.

காரணம் எனது அரசியல் பதிவுகளில் இதே கட்சியை - அதன் தலைவரை ஏகத்துக்கு விமிரிசித்திருக்கிறேன்.
கர்மவீரர் அவர்களின் பிறந்த நாளில் இனிதே தொடங்கியது பயிற்சி. முதல் நாளே Dress Code - கல்ர் பேண்ட், வெள்ளை சட்டை. அடையாள அட்டையுடன் இருக்கை.எப்போதும் எனது பாணி , கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தான். அதை இங்கும் கைவிடவில்லை. கைபேசி ஒலித்தால் ரூ.250 தண்டம். எடுத்து பேசினால் ரூ.350 தண்டம்................


வகுப்பின் அமைதிக்கு குந்தகம் வராமல் பாதுகாக்கவே இந்த முறை. ஆனால் யாரும் தண்டம் கட்டாமல் தம் கற்பதில் கவனம் செலுத்தினர்.

வெறும்வகுப்பறை பாடம், பேசியே கொல்லுதல் என அலுப்பூட்டும் பழைய முறைகளிலிருந்து மாற்றி, மைதானத்திற்கு அழைத்து அங்கே சில செயல்முறை கற்றல் ( Activities....) முறையை பயன்படுத்தினோம்.கீழே இருப்பது அப்படி ஒரு கற்றல் முறையில் சுய அறிமுகம். ஆர்வம் மிகுதியானது கண்கூடு.
பலவேறு மாவட்டங்கள், பலவேறு பதவிகள், பல்வேறு பழக்கங்கள்......சமாளிக்கனுமே ?

 
இதுதான் மொத்த டீம். உடன் இணைப்பயிற்சியாளர் சுரேஷ்பாபு. இவரே ஒருங்கிணைப்பாளரும்.  புகைப்படம் எடுக்க பங்கேற்பாளரே ஆர்வமுடன் முன்வந்தார்,


இரண்டாம் நாள்  வெள்ளை வேட்டி - சட்டை. இதுதான் ட்ரெஸ் கொடு.

பயிற்சியாளர்கள்  நேருகோட் - வேஷ்டியில்....

நல்ல Feedback கிடைத்தது. மானிலப்பொறுப்பாளர்கள் வந்திருந்து கவனித்தனர். மகிழ்ந்தனர்.Post a Comment

Popular posts from this blog

முதல் 'பிட்டு' படம் !

நாம ஒண்ணு நினைச்சா....

உன் விழியில் என் உலகம்.....திரிதராஷ்ட்ரர் ,