சகலகலா டாக்டர்....

Lady : மே கமின் டாக்டர்
Dr : வந்துட்டீங்களே உட்காருங்க!
Lady : தேங்க் யூ!
Dr : சொல்லுங்க! Lady : என்னது?
Dr : என்ன பிரச்னைன்னு சொல்ல சொன்னேன்!
Lady : ! பையனுக்கு ஒடம்பு சரியில்லை!
Dr: பேர் என்னம்மா? மஞ்சுளா!
Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?
Lady : டாக்டர் அது என் பேரு!
Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!
Lady : குஞ்சு!
Dr: மொத்தமே அதுதான் பேரா?
Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!
Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?
Lady : லூஸ் மோஷன்!
Dr : எப்படிப் போறான்?
Lady : மஞ்சளா!
Dr : அதான் மொதல்லயே சொல்லிட்டீங்களே பையனப் பத்தி சொல்லுங்கம்மா! பையன் எப்படி வெளியே போறான்னு கேட்டேன்!
lady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனே ஓடிப் போயிடுவான்!
Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!
Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன்! இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!
Dr : கடவுளே! அம்மா, பையன் ஆய், ஆய்... அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன்! புரிஞ்சுதா!
Lady : அதுதான் சொன்னேனே, மஞ்சளா!
Dr : ஐயோ, அது உங்க பேருன்னு சொன்னீங்க?
Lady : இல்ல டாக்டர், என் பேரு இல்ல, இவன் மஞ்சளாப் போறான்னு சொன்னேன்!
Dr : ! சாரி! சாப்ட்டானா?
Lady : இல்ல டாக்டர், நல்லவேளை, அதுக்குள்ளே கையைக் கழுவி விட்டுட்டேன்!
Dr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா! இப்படிப் படுத்தறீங்களே!
Dr : உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?
Lady : இல்லைங்க அவரு துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு!
Dr: என்னம்மா இது பையனுக்கு ரெண்டு வயசு! அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்! எப்படி இது? ஸ்கைப்லயேவா !
lady : சீ! அவர் நடுவுல ஒரு ரெண்டுநாள் வந்திருந்தார்! ஒரு பிரச்னைக்கு!
Dr : வந்தபோது பிரச்னை பண்ணிட்டார் போல! சரி, சொல்லுங்க, என்ன பிரச்னை!
Lady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்!
Dr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க? நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்! Lady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்!
Dr : சாரி!
Lady : அதுதான் சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?
Dr : ஐயோ ஆண்டவா! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்!
Lady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்!
Dr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?
Lady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?
Dr : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னும் கொடுக்கறீங்களா?
Lady : ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி!
Dr : என்னம்மா இவ்வளவு பச்சையா ...
Lady :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!
Dr: அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!
Lady : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க! அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.
Dr : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை! பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?
Lady : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.
Dr : முருகா! ஏம்மா இப்படி! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?
Lady : அவர் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் வருவார்!
Dr : ம் ...கொடுத்து வெச்சவன்! சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?
Lady : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!
Dr : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க, பிரியாணி சாப்பிடலாமா?
Lady : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?
Dr : அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது. புரிஞ்சுதா? சரி, எத்தனை தடவை போனான்?
Lady : எங்க டாக்டர்? Dr : ம்! என் தலை மேல! லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?
Lady : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ! நாலு தடவை!
Dr : தண்ணி மாதிரி போனானா?
Lady : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா!
Dr : அம்மா, மஞ்சுளா, உங்க சாம்பார் பத்தி நான் கேட்கலம்மா! (சாம்பார் எப்படியிருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவீங்கன்னு நெனைச்சாலே திக்குங்குது!)
Dr : இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்! இந்த மாத்திரைய மூணு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க! அப்புறம் இந்த பௌடர,
Lady : பூசிவிடவா டாக்டர்?
Dr : ம். ஆமாம், அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க! சாவடிக்கறீங்களே! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்? சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா! ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா, வந்து காட்டுங்க!
 Lady : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டுவரவா டாக்டர்?
Dr : அம்மா பரதேவதே,
Lady : என் பேர் மஞ்சுளா டாக்டர்!
Dr : உங்க பையன் குஞ்சக் கொண்டாந்து காமிங்க! புரிஞ்சுதா?
Lady : மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்ச...?
Dr : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே! Lady : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது! வெளியில ஹரித்திக் ரோஷன்ன்னு கூப்பிடுவோம்!
Dr : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க! எனக்கென்ன போச்சு!
 Lady : டாக்டர், டயட் சொல்லலியே!
Dr : என்ன எங்கம்மா பேச விட்டே நீ!
Dr : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி!
Lady : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்!
Dr : தாயே, அது உங்களுக்கு! ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும்!
 Lady : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் சிக்கனை என்ன செய்ய?
Dr : வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!
Lady : அய்.. ஏன், அவங்க உங்க செட் அப்பா?
Dr : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்!
Lady : டாக்டர் பீஸ்?
Dr : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா!
Lady : அப்போ செட் அப்புதான்! நான் வரேன் டாக்டர்!
Dr : வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு! (யாருப்பா அங்க.. லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. HOSPITAL ஒருவாரம் லீவு..)
Post a Comment

Popular posts from this blog

முதல் 'பிட்டு' படம் !

நாம ஒண்ணு நினைச்சா....

உன் விழியில் என் உலகம்.....திரிதராஷ்ட்ரர் ,