கசங்காத காலண்டர்
என் பள்ளித்தோழனை சமீபத்தில் சந்திக்கும் பாக்கியம் கிட்டியது. அவன் ஈரோட்டில் பிசியாக இருக்கும் ஒரு மத்திய அர்சுப்பணியாளன்(ர்).

“என்னடா பண்ணிட்டு இருக்கே? பார்த்து ஒரு 20 வருசமாவது இருக்காது” என்று என்னை கேட்டான். பத்தாம் வகுப்பில் தோழன்.

“ அதிகமா இருக்கும். டெக்ஸ்டைல் லேப் வச்சிருக்கேன்.....ஜேசியில பட்டயம் வாங்கின பயிற்சியாளரா இருக்கேன்..”

“அப்போல்லாம் நிறைய்ய எழுதுவியே..கவிதை,,கதைன்னு...?”

“இப்பவும்தான் எழுதறேன்.......எனக்கு ஒரு ப்ளாக் இருக்கு, முகனூல்லயும் ஆக்டிவா  இருக்கேன்..”

“ நீதான் படிக்கிற காலத்துலயே செம குறும்புக்காரனாச்சே..ஃபேஸ்புக் உனக்கு தீனி போடும்.... நான்லாம் முகனூல்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணதோட சரி. அப்புறம்....நீ சரியான சோசியல் ஆக்டிவிஸ்ட் ஆச்சே...அப்பவே? இப்ப எப்படி?

“இப்பவும்தான்.......ரோட்டரி கிளப்ல செயலரா இருக்கேன். மக்கள் சிந்தனை பேரவைல உறுப்பினர். தமிழக அரசோட பாலிடெக்னிக் சிலபஸ் கமிட்டி மெம்பர். ஈரோடு சிறுதொழில்கள் சங்க உறுப்பினர்...அதுல வர மாதாந்திர செய்திபத்திரிக்கைக்கு ஆலோசகர். கோயம்புத்தூர்ல இருந்து வெளிவரும் ‘வெற்றிமுழக்கம்’ பத்திரிக்கைல தொழில்முனைவோர்களுக்குன்னு ‘என்னை அறிந்தால்’ கட்டுரை தொடர் எழுதறேன்....ஈரோட்டின் தர்ம ரக்ஷ்ண சமிதி அமைப்பில் செயல்ர்..........சில தொழில் நிறுவனங்களுக்கு விஸ்தரிப்பு ஆலோசகரா இருக்கேன் ”

“நிறுத்துடா.....கொஞ்சம் மூச்சு விட்டுக்க...எப்பிடிடா உங்களுக்கு 
இதுக்கெல்லாம் டைம் இருக்கு?”

“அதைத்தான்பா எங்க ஜேசி, எங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கு...”

”அதுமா சொல்லி தராங்க......?”

“கிட்டத்தட்ட....ஆமாம். 50-60 சதவீத நேரத்தை தொழிலுக்கும், 30 சதவீத நேரத்தை குடும்பத்துக்கும், மீத நேரத்தை சொசைட்டிக்கும் பகிர்ந்து கொடுத்தா, ஒரகடத்துல ப்ளாட் இருக்கான்னு மாதவன் கிட்ட விசாரிக்க கூட நேரம் இருக்கும்..” – சிரித்தேன்.

“உங்கிட்ட நிறய்ய பேசனும்டா.....” என்று 
கிளம்பினான்.

அவனுக்கு அலுவலக்த்தில் இருந்து அழைப்பு.

ஒரு வாரத்துக்கு பிறகு அவனே அழைத்தான். ”வரியா...நான் இப்ப ஃப்ரீ..” என்றான்.நான் எனது மதிய உணவு இடைவேளையில்.

அடுத்த அரைமணியில் அவனது அலுவலகத்தில் இருந்தேன்.”எப்பிடி உடன வந்துட்ட? வேலை இல்லையா?” என்றான் ஆச்சரியமாய்.

“இருக்குதான்....ஆனா அதையெல்லாம் முடிக்க இன்னும் டைம் இருக்கு. அதான் வந்தேன்.”

“இல்ல....உங்கிட்ட பேச நினைச்சது இந்த டைம் 
விசயம்தான்....என்னால முடியலை. பாரு எவ்ளோ பென்டிங்” என்று எதிரே கை காட்டினான். நிறைய்ய கோப்புகள் காத்திருந்தன.

“உன்னுடைய கால்ண்டர் எங்கே?” என்றேன்.

“எனக்குன்னு ஒண்ணு இல்லை. ஆபிஸ் காலண்டர்தான் அதோ சுவற்றில்..” என்று எதிரே காட்டினான்.

“ உனக்கு வெளி வேலைகள் இருக்குமா...அலுவலக ரீதியாய்?”

“ம்ம்ம்......இன்ஸ்பெக்சன்...டேக்ஸ் ரைடு.......இப்பிடி இருக்கும்”

“அதுக்கெல்லாம் ஷெட்யூல்?”

“அப்பிடி எதும் இல்ல..”

“வீட்டு விழாக்கள்...நோட் பண்றதுண்டா?”

“அதெல்லாம் அவ பாத்துக்குவா?”

“குழந்தைகளுக்குன்னு நேரம் ஒதுக்கறதுண்டா?”

“வாய்ப்பே இல்ல...”

“..........சரி. இனிமே உன் டேபிள்ள ஒரு ‘டெஸ்க் டாப் கேலண்டர்’ இருக்கட்டும். உன்னுடைய அன்றாட வேலைகளை, விசிட் விசயங்களை அதில் குறிப்பிடு. எப்ப யாரிடம் இருந்து அழைப்பு வந்தாலும், அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கும்போது காலண்டர் மீது கண் இருக்கட்டும்”

“ ரிசல்ட் இருக்கும்ன்னு சொல்றே?”

“ இதை பாலோ பண்ணிட்டு இருக்கும் நான் கடந்த காலங்களில் ஒரு முறை கூட எனது பயிற்சியை நேரமின்மை காரணமாகவோ, அவசர அலுவல் காரணமாகவோ கேன்சல் பண்ணதில்லை.... மத்த பயிற்சியாளர்கள் கேன்சல் பண்ண புரோக்கிராம்களை  நான் நடத்தியும் கொடுத்திருக்கேன். நானே புரூஃப்”

“வீட்டுலயும் கம்ப்ளெயிண்ட் ......எல்லா நாளுமே லேட்தான் ”

“ டோன்ட் வொர்ரி......சாயங்காலம் நாலு மணிக்கே வீட்டுக்கு போற நேரத்தை ஃபிக்ஸ் பண்ணிட்டு வேலையை செய்...தானாமுடிஞ்சுடும்”

“எப்பிடி, தானா முடியும்?”

“அது அப்பிடித்தான். வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு போறதுன்னா லேட் ஆகத்தான் செய்யும். ஆறு மணிக்குள்ள வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு போறதுன்னா, முடிஞ்சுடும்...அதான் ரகசியம்”

“பிரமாதம்டா....ஒரு டவுட்டு. இப்படி உடனே வந்த நீ, செஞ்சுகிட்டு இருந்த வேலையை பாதிலதானே விட்டுட்டு வந்திருக்கனும்?”

“பாதி வேலை செய்ய என் பேரு என்ன திருப்பதியா.....இல்ல நான் கோவில்பட்டி வேட்பாளரா?”

“என்னடா அரசியலும் பேசுவியா?”
“அதில்லை.....சமீபத்திய நிகழ்வுகளை நீ தெரிஞ்சு வச்சிறிக்க்யான்னு பார்த்தேன். அதுக்கும் டைம் வேணும்ல? இந்த வேலையை முடிக்கிறதுன்னு ஒரு ஐடியா வேணும். குறிப்பிட்ட நேரத்துக்குள்ள எப்படி முடிக்கிறதுன்ன தனியா ஒரு ஐடியா வேணும்.அப்போ எவ்ளோ பிரேக் வேணா விடலாம் இல்ல....இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள்னு, ஒரு கொட்டேசனோட?”

“ஹாஹ்ஹாஹ்ஹா......சூப்பர்டா. இந்தக்கட்டுரையும் அப்பிடித்தான் பிச்சி பிச்சி எழுதினியா”

“இல்ல......தீம் வரும்வரை மனசுக்குள்ளயே எழுதிட்டிருப்பேன். போஸ்டிங் பன்ணிடனும் எங்கிர எண்ணம் வந்ததும் எழுதிடுவேன்.


Post a Comment

Popular posts from this blog

முதல் 'பிட்டு' படம் !

நாம ஒண்ணு நினைச்சா....

உன் விழியில் என் உலகம்.....திரிதராஷ்ட்ரர் ,