தானம்.....நிதானம்

நம்மில் பலருக்கு பிரச்சினைகளை தீர்ப்பதே ஒரு பிரச்சினை. எந்த ஒரு பிரச்சினைக்கும் ஆதாரமான தீர்வு ஒன்று இருக்கும்.அதை தேடி ஒரு பயணம் போக வேண்டி இருக்கும்:பின்னரே தீர்வு தென்படும்.

நம்மில் பலர் யோசிக்காமல் காரியத்தில் இறங்கி விடுவதே பிரச்சினைக்கு மூல காரணமாகி விடுகிறது. சில விசயங்களை ஆழ்ந்து அறிந்து ஆராய்ந்து தீர்க்க வேண்டும்.

ஆய்ந்தாய்ந்து செய்யாதன் கேண்மை தீமுன்
வைத்தூறு போல கெடும்

என்றார் வள்ளுவர்.

ஒரு பெண்ணுக்கு ரொம்ப நாளாகவே மாப்பிள்ளை அமையாமல் வரன் தள்ளிக் கொண்டே போனது. சலித்துப் போன தரகர் இறுதியில் ஒரு வரன் கொண்டு வந்தார்.

பொண்ணோட அப்பாகிட்ட கேட்டார்;
“பத்து பொருத்தம் உள்ள மாப்பிள்ளை நம்ம பொண்ணுக்கு வாய்க்காது போலிருக்கு. எட்டு பொருத்தம் உள்ள வரன் ஒண்ணு இருக்கு,பாக்கலாமா?”
சலித்து போயிருந்த பொண்ணோட அப்பாவும்,”சரிதான், பாருமையா” என்றார்.

நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாண நாளும் வந்தது.
மணவறையில் மாப்பிள்ளை,பெண் அமர்ந்து இருக்க, ஐயர் சொன்னார், ”மாப்பிள்ளைவாள், அட்சதை-பொரியை அக்னியிலே போடுங்கோ”
மாப்பிள்ளையோ அதை வாயில் போட்டு தின்ன ஆரம்பித்தான்.
“மாப்பிள்ளை! நான் அக்னியில போடச் சொன்னேன்” – ஐயர்.
“அதுக்கு ஏன்யா கத்தறே” என்றபடி அப்படியே வாயில் இருந்ததை அக்னியில் துப்பிட்டார் மாப்பிள்ளை.
ஐயருக்கோ செம கடுப்பு.

தாலி கட்டும் நேரம்.ஐயர் தாலி எடுத்து கொடுக்க,மாப்பிள்ளையோ ஐயரிடம், ”வேணாம்,நான் கட்டலை.அப்புறம் அது சரியில,இது சரியில்லன்னுவீங்க, அதனால நீங்களே கட்டிடுங்க” என்றானாம்.

ஐயர் ரொம்ப கடுப்பாகி , “யாருய்யா இந்த மாப்பிள்ளை செலக்ட் பண்ணது? இவருக்கு சொன்னாலும் புரியல-சொந்தமாவும் புரியல”ன்னு கத்துனாராம்.
தரகர்,”நான்தான் முதல்லயே சொன்னனே? ரெண்டு பொறுத்தம் இல்லன்னு!
அது இந்த ரெண்டும்தான்”

Comments

Popular Posts