ஓ....நிறுத்திட்டாங்களா?

ஓ....நிறுத்திட்டாங்களா?
அன்புள்ள ஞானியின் 'ஓ..பக்கங்கள்' நிறுத்தப்பட்டது குறித்து பல வாசகர்கள் தங்களின் கவலைகளையும்,கருத்துகளையும் பல்வேறு விதமாக பதிவு செய்திருந்தனர்.

திரு.ஞானி இந்த கவலை(!)களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்(?) என்பதை இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

1. எனக்கு தெரிந்து என்றுமே ‘விகடனி’ல் ஒரே எழுத்தாளர் இரு கட்டுரை எழுத முடியாது. திரு.ஞானிக்கு மட்டுமே விதிவிலக்காய் ‘அறிந்தும் அறியாமலும்’ இரட்டை கட்டுரை வசதி.

2. மேலும் ஒரு வாசகர் சொன்னதைப் போல, விகடனில் ஜாதி வித்தியாசம் எல்லாம் கிடையாதுங்கோ.யார் வேனா என்ன வேனா எழுதலாம்.( நான் விகடனின் 22 வருட வாசகன் )

3. பொதுக் கருத்துக்கு மாறாக எழுதி, சீக்கிரம் பிரபலமாகி விடும் வித்தையை நன்றாக அறிந்தவர் இந்த ஞானி(!).

4. இப்படித்தான் ‘கண்ணகி சிலை’ இடம் மாற்றப் பட்ட போது கேனத்தனமாக அதை ஆதரித்து எழுதி (ஜு.வி) வாங்கி கட்டிக் கொண்டார்.

5. ஆஆஆஆஆஆஆஆனால், இப்போ அவர் என்ன சொல்லிட்டார்னு அவரை எல்லாரும் திட்டரீங்க? ‘வயசாயிட்டு,பாவம்-ஓய்வு எடுக்கட்டும் கலைஞர்’னுதானே சொல்றார்?சொல்லிட்டு போறார்...பாவம்,ஞானிக்கும் வயசாயிட்டில்லியா?கையொட அவரையும் அனுப்பிடுச்சு விகடன்.
That’s all !

ஆகவே மக்களே, இதிலிருந்து என்ன தெரிகிறது? நியூட்டனின் மூன்றாம் விதிப்படி , “ஒவ்வொரு வினைக்கும், அதற்குச் சமமான எதிர் வினை ஒன்று உண்டு”

து.வேலுமணி / ஈரோடு.4
velumani1@hotmail.com

Comments

Popular Posts