'புது' (?) கவிதை

இன்றைய தினப் பத்திரிக்கைகளில்
வரும் கவிதைகளை படிக்கையிலே

'நெஞ்சு பொறுக்குதில்லையே'
(அட இதுதாங்க தலைப்பு)

அலையே,
மலையே என்றும்

கலையே
சிலையே
என்றும்

வாயில் வரும்
வசனமெல்லாம்

ஒன்றின் கீழ்
ஒன்றாய்
எழுதிவிட்டு
(இதே மாதிரி)

இதுதான்டா
புதுக் கவிதை
என்று
பிதற்றுகின்றார்...

தட்டிக் கேட்போரை
புதுக் கவிதை தாத்தா
நீ
என்று
அதட்டுகின்றார்.

எங்கடா
போனது

'எதுகை'யும்
'மோனை''யும்

அழிந்தா போனது
'அணி''யும்
'இலக்கண''மும்
என்று
தேடுவோரே

அதோ
'மாத்திரை''யில் மயங்கி
மதியிழந்து
கிடக்கின்றார்
மயக்க கவிஞர்கள்.

Comments

Popular Posts