அம்மா என்றழைக்காத....

உங்கள் அம்மா உங்களை அடிவயிற்றில் 9 மாதங்கள் சுமந்தார்.

சரி அது மட்டும்தானா?

நான்கு மாதங்கள் என்ன செய்கிறதென்றே தெரியாமல் வாந்தி, வலி, வயிற்றில் இனம் புரியாத ஒரு சுமையுடன்.......

நடக்கையில், உட்காருகையில்...தன் கால்கள் வியர்த்து வழிவதை உணர்ந்தார்.

தோல் இழுபடுவதை கண்டு பயப்படாமல் உங்களுக்காக காத்திருந்தார்
– கண்ணீருடன் !

மாடிப்படி , வீட்டு வாசற்படி ஏற பெரும் பிரயத்தனம்.....

மூச்சு விடவே சில சமயங்களில் கஷ்டம்.

சில பல தூக்கமில்லா இரவுகள் கண்ணீருடனும், சந்தோஷத்துடனும்.

நம்மை வெளிக்கொண்டு வர சொல்ல முடியாத வலியை பொறுத்துக்கொண்டார்.



முடிந்ததா? அப்புறம்தான் பெரும்பாடே !  

உங்களின் முதல் நர்ஸ் அவர்தானே ?

உங்களின் உணவு தயாரிக்கும் சமையல்காரரும் அவர்தானே?

உங்களின் வேலைக்காரியாய் இருந்த்து யார்?

ஓரிடத்திலிருந்து வேறிடம் கூட்டிப்போகும் போக்குவரத்து அதிகாரியும் அவர்தானே? 

உங்களின் முதல் விசிறி யார் ?

சொல்லித்தந்த முதல் குரு யாராக இருக்க முடியும்?

கடைசி வரை நல்லதொரு நண்பனாக இருந்த்து யார்?

நமக்காக போராடிய தீவிரவாதி யார்?

நம்மை எண்ணி அழுத காதலி யார்?

நம் மீது நம்பிக்கை வைத்த மனைவி யார்?

நமக்காக கடவுளிடம் வரம் கேட்ட அவ்வை யார்?

நீங்கள் சொல்லும் எல்லாப் பொய்யையும் அப்படியே ஏற்ற்றுக் கொள்ளும் போலிஸ் யார்?


நாம் வளர்ந்த பிறகு, நமக்கெல்லாம் அவர் ஒரு பொருட்டே அல்ல. 

அனால் அவரின் 24 மணி நேரமும் நம்மை சுற்றியே இருந்த நாட்கள் உங்களுக்கு நினவில் இருக்கிறதா?

உங்களுக்கு அருகிலேயே அம்மா இருந்தால் நீங்கள் மிகவும் அதிருஷ்ட சாலி. ஒருபோது அவரை ஏசாதீர்கள்.



............ஏனெனில் எப்படியும் ஒரு நாள் நாம் அவரை இழக்கத்தான் போகிறோம்.



(உதவி : டாக்டர். சுப்பிரமண்யம் / ராஜமுந்திரி.)
Dr. Subrahmanyam Karuturi

Comments

Popular Posts