அந்த வானத்தைப் போல


வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

 ‘பாபாபாஆஆங்க்’……எனும் பேருந்து ஒலி ஹாரன் சுந்தரின் சின்னத்தூக்கத்தை கலைத்தது. திடுக்கிட்டு விழித்தவன் , எந்த இடத்தில் பேருந்து நிற்கிறது என வெளியே கவனித்தான்.

சிக்னல். சிகப்பு எரிந்துகொண்டிருந்தது. அவனுக்கு. …. சிகப்பு நிறம் …மனசுக்குள் இலேசான நடுக்கத்தை கொடுத்தது.

ஒரு வாரமாக இந்தப்பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிரது…..சிகப்புதான் காரணம்.
அலுவலக்த்தில் அவன் மீது ஒரு சிகப்பு புகார்.

போனவாரம் நடந்ததன் பிரதிபலிப்புதான்……சுந்தருக்குள் அந்த நாள் நடப்புகள் வந்து போனது.

வழக்கம் போலத்தான் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பினான் சுந்தர். அவனது வீடு இருந்த ஊர், அலுவலகம் இருக்குமிடமிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில். தினசரி பிரயாணம்தான்.

நகரப்பேருந்து…..அதுதான் நகராப்பேருந்து தானே?
அந்த 20  கிலோ மீட்டர் தாணடவே 45 நிமிடங்களுக்கும் மேல் ஆகிவிடும். அந்த நாள் கொஞ்சம் வித்தியாசம்..வழியில் தண்ணீர்குடங்களின் வரிசை..சாலைக்கு குறுக்காய்!

தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சாலையெங்கும் மறியல்.பேருந்துகள் நிறுதப்பட்டு, காவலர்களுக்கு தகவல், உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு தகவ்ல்…பறந்து…….முழுசாய் ஒரு மணி நேரதாமதமாய் அலுவலகம் வந்து சேர்ந்தான் சுந்தர்.

செம்ம காண்டில் இருந்தார் அலுவலக மேலாளர்.
காரணம்…காலை பத்துமணிக்குள் வங்கிக்கு போக வேண்டிய சில கோப்புகள்.

ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனமாகையால், அன்றை தினம் நிச்சயமாய் வங்கிக்கு சேர்க்கப்பட வேண்டிய பத்திரங்கள் நின்றுபோனது. அதனால், அன்றைக்கு துறைமுகத்துக்கு போகவேண்டிய சரக்குகள் நின்றுபோனது……வங்கிக்கு வந்திருக்க வேண்டிய இறக்குமதியாளரின் பணம் வரவில்லை…….மேலும் குளறுபடிகள்….

அலுவலக மேலாளருக்கு அன்று கும்பமேளா. திட்டித்தீர்க்க வார்த்தைகள் தேடி அலுத்துவிட்டார். வருகைப்பதிவில் கருப்புப்புள்ளி வைக்கப்பட்டது  மட்டுமல்ல. இது மாதிரி திரும்பத்திரும்ப தாமதமாக வருவதே சுந்தரின் வழக்கமாகப் போய்விட்டது என்று புதிய பதிவுவேறு.

நொந்துதான் போனான் சுந்தர்.

நெருங்கிய நண்பன் தண்டபாணிதான். அவனிடம் கொட்டித்தீர்த்தான் .

“உண்மையை சொல்லு……நிஜமா நடந்து என்ன?” என்றான் டி.வி.பாணியில் சுந்தர்.

“நிஜமாலுமே அன்னிக்கி பஸ் ஸ்ட்ரைக்தாண்டா….போலிஸ் வந்த பின்தானே பஸ்ஸை ரிலீஸ் பண்ணாங்க….?”

“சரிதான்…..ஆனால் நீ அடிக்கடி லேட்டாத்தானே வர்றே?”

“ என்னடா, நீ? என் ரூட்ல எப்பவும் இதுமாதிரி ட்ராபிக்பிராப்ளம் நான் என்ன செய்யட்டும்?

“ நல்ல கதை… ட்ராபிக் பிராப்ளம்கிறது எப்பவுமே சொல்லக்கூடியதா என்ன? வேற எதாவது புதுசா பொய் சொல்லுப்பா, தப்பிச்சிக்கலாம்…”

“ அடப்பாவி….தப்பிக்க நான் பொய் சொல்லலைடா, தப்பு ஆயிடக்கூடாதுன்னு நினைச்சு காரணம் சொல்றேன்”

“ நீ என்ன வேணா சொல்லு. மேனேஜர் உன் மேல செம்ம காண்டுல இருக்கார்….தெரியும்ல? அடுத்த இங்கிரிமெண்டுல நீ மாட்டிக்குவே….அவ்ளோதான் …..பார்த்துக்கோ….நான் எஸ்கேப்”

திக்கு தெரியாத கும்மிருட்டுக்க் காட்டில் சிக்கிய முடவன் கதிதான் சுந்தருக்கு. இதோ,  மனச்சிக்கலில் ஒரு வாரம் ஓடிவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் , நடைப்பிணமாய் பேருந்திலிருந்து இறங்கி, அலுவல்கம் நடந்தான் சுந்தர்.  பத்து நிமிட நடையில் அலுவலகம் வந்தது.

“வாப்பா, தம்பி…என்ன காலையிலயே நடையில சுணக்க்ம்?”

வாட்ச்மேன்தான். அவருக்கு எப்பவுமே சுந்தரிடம் ஒரு வாஞ்சை. அவனுக்கும்.
தோற்றத்தில் சுந்தரின் அப்பாவை பிரதியடிப்பார் வாட்ச்மேன். கொஞ்சம் கனிவாய் பேசுவார்.  அவனுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத ஒட்டுதல்.

“ ஒண்ணுமில்லய்யா……..கொஞ்சம்  தலைவலி…”

உற்று கவனித்த வாட்மேன், “வலி, தலையிலயா…மனசிலயா?” என்றார். அதான் வாட்ச்மேன்.

நிமிர்ந்து பார்த்தான்….” ம்ம்ம்ம்….ரெண்டுலயும்….”

“ அதான் தெரியுதே , கண்ணுலயே?”

“ என்ன சொல்ல……..ஆப்சண்ட் ஆயிருச்சி என் அட்டண்டன்ஸ்…”

“ஏன்…… ஒழுங்கா டயத்துக்கு  கையெழுத்து போடலொயா?”

“ அதெல்லாம்…….இல்லை…………..வந்து…………….” என்றபடி மேல நீங்கள்படித்த போன வார சிக்கல் கதையை சிக்கனமாகச் சொன்னான்.

வாட்ஸ்மேன் சிரித்தார்…“ப்பூ…என்ன தம்பி..கையில வென்ணெயை வச்சிகிட்டு நெய்யுக்கு அலையிற?”

“என்ன அய்யா சொல்றீங்க?”

“பின்னே? உன் செக்சன்ல தானே நாகப்பன் சார் இருக்கார்?”

“ ஆமாம்….”

“ அவரை போயிப்பாரு…நல்ல வழி சொல்வார்…”

“ நாகப்பனா..?”

“ ஆமாம்……..யாரு சிக்கலுன்னு போனாலும் அவரு நல்லவிதமா பேசி வழி காட்டுவாரு…. நம்ம எம்.டி.க்கும் அவர்மேல நல்ல பேரு.  எதுக்கும் நீ அவரை முதல்ல பார்த்திரு…அப்புறம் கவலைப்படு..” என்றார் சிரித்தபடி.

யோசனைகளினூடே அலுவலகம் புகுந்தான்.
வேலைகளில் ஒன்றியவன் மாலை வரை தன்னையே மறந்தான்.

சாயங்காலம் நாகன்ப்பன் அழைப்பதாக தகவல் வரவே ஆச்சரியப்பட்டுக்கொண்டே அவரை சந்தித்தான்.

“ வாப்பா சுந்தார், என்ன சௌக்கியமா?”

“ சாசாசார்ர்ர்ர்……”

“புரியுது…ஏன் இழுக்கரே…”

“ இல்லை சார், நானே உங்களைப் பார்க்கலாமுன்னு இருந்தேன்…….”

“ அதான் நானே கூப்பிட்டேனே….? என்ன விசயம் சொல்ல்லு!”

”ஓண்ணுமில்லை சார்………………………..” என்றபடி அத்தனையும் சொன்னான்.

“ நிச்சயம் நம்ம மேனேஜர் இதுக்கு ஆக்ஷன் எடுத்தே தீருவார்..”

“ என்ன சார், ..பயப்படுத்தறீங்க?”

“ஆமாப்பா…..இது நம்ம கம்பனியோட பாலிசி விவகாரம். கால தாமதமாக வருபவர்களை பணி நீக்கம் கூட செய்யலாம்…”

“ சார்..பயப்படுத்தாதீங்க….”

“ உன்னை பயப்படுத்த நான் இதை சொல்லலை. எனக்கு கம்பெனி எவ்ளோ முக்க்யமோ அப்படியே நீங்களும் முக்கியம்”

“ அதனால்தான் சார் நான் உங்க கிட்ட வந்தேன்…”

“ கர்க்ட் தான்……..ஆனா தப்பு செய்துகிட்டே இருந்தா காப்பாத்த முடியாததே?”

“ என்ன சார் செய்யலாம்..”

“ அதை சரி செய்ய என்ன பண்னலாமுன்னு யொசியேன்”

“என்ன செய்ய…….எனக்கு எட்டலையே சார்……………”

“ எனக்கு எட்டுது…ஏன்னா, நான் தப்பை தப்பா பார்க்கலை. உன் தப்பை முழுக்க முழுக்க உன் தப்பா பார்க்கலை…’

“ சொல்லுங்க சார்….”

“ உனக்கு கம்பெனில கடன் இருக்கா?”

“ ஏதும் இல்லை சார். எல்லாம் ரிட்டர்ன் பண்ணியாச்சி”

“வெரிகுட், ஒண்ணு பண்ணு உன் பேர்ல இருக்கும் ஒரே கம்ப்ளெய்ண்ட் தாமதமா வ்ரது மட்டும்தான்.  வேலைல ஏதும் பெரிசா பிரச்சினை இல்லை. இப்பவே அக்கவுண்ட் கிட்ட் போயி ஒரு டூவீலர் லோன் கேளு………டிபார்ட்மெண்ட் ஃபார்மாலிட்டீஸ் இருக்கும். கொண்டு வா, நான் கையெழுத்து போட்டுதர்றேன்…..”

“ஸரி சார்….”

“முதல்ல உனக்குன்னு சொந்தமா ஒரு வண்டிம்வாங்கு. 20 கிலோஅ மீட்டர்……..பெரிய காரியமில்லை.உன் வயசுக்கு ஓட்டலாம்……….அரசன்ங்கப் பஸ்ஸை நம்பாதே……..அதான் நீ தினமும் மாட்டிக்கிறே…”

“ உண்மைதான் சார்….”

“ இத்தனை வருசம் நீயே இதை யோசிச்சிருக்க வேனாமா? உனக்கு லோன் எலிஜிபிலிட்டி இருக்குது…பிறகென்ன….உனக்கு நிச்சயம் எங்கொயரியும் வரும். மன்னிப்பு கேள். முதல் தடவை அதுவும் கிடைக்கும். அடுத்த முறை இது நடக்காதுன்னு சொல். என் பேரையும் சொல்…..ஈசியா தாண்டிடலாம்.”

“ ரொம்ப பயந்துட்டிருந்தே……..ன்…….”

“ஓண்ணும் பயமில்லை……”

“ இல்லை சார்….நான் சில சமயம் ஆபிசில் உங்களையே எதிர்த்து பேசிருக்கேன்….”

“ இருக்கலாம்……..நீ மட்டுமா?   அனால் இப்போ நான் இங்கே உன்னமை மட்டும் பார்க்கலை…நம்ம கம்பெனியையும் பார்க்கிறீன்……உன் பிரச்சினையும் தீரனும். நம்ம மேனேஜர் பிரச்சினையும் தீரனும்…கம்பெனிக்கி பிரச்சினை வாராம போகனும்….என் டிபார்ட்மெண்டில் எனக்கும் கேள்வி வரக்கூடாது……”

“ரொம்ப நன்றி சார்…நான் வரேன்…..”


நாகப்பன்கள் எல்லா இடங்களிலும்தான் இருக்கிறார்கள். அவர்களின் சிறப்பம்சமே வெண்டியவர், வேண்டாதவர் என இரண்டாகப்பிரிக்காமல், தானிருக்கும் இடஹ்தில் எல்லோருக்குமே பணி செய்யும்தன்மைதான்.

கடவுள் வாழ்த்தின் நாங்காவது குறள்தான் நீங்கள் மேலே படித்தது. பொருந்துகிறதா?

Comments

Popular Posts