ஆடிவெள்ளி !



“எப்பவும் போல ‘டாண்’ணு கிளம்பிடாதீங்க, கோயில்ல ஆடிவெள்ளிங்கறதால கூழ் ஊத்த சொல்லிவச்சிருக்கேன். கொஞ்சம் இருந்து சப்போர்ட் பண்ணிட்டு ஆபிசுக்கு போங்க...”
புயலே அடிச்சாலும் 9.30 க்கு அலுவலகத்தில் இருக்கனும்.இது என் பாலிசி !
பசங்கள பேக் பண்ணி அனுப்பிச்சிட்டு கோயிலுக்கு போனா அங்க நம்ம கூழ் ரெடி. ஆனா கூடவே வேற யாரோ பொங்கல்,புளியோதரை தாராங்க. அவங்க இன்னும் வரல்ல !
இங்க தான் காண்டு ஆரம்பமாகும்.
10  நிமிஷம் !
அவங்களும் வந்து பூஜை முடிஞ்சு கூழ் கொடுத்து ஏரியா,சாமி-பக்தர்களை கூல் பண்ணி சாப்பிட்டு ஆபிசுக்கு வர வழியில வழக்கமான கடையில்
“பூ கொடுங்க, சீக்கிரம், லேட்டயிடுச்சு”
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க....ஆடி வெள்ளி பூ ஆயிடுச்சு....இப்ப வந்துரும்”
அப்பிடி இப்பிடி ஆபிசுக்கு வந்தா, இப்பத்தாம் கூட்டற அம்மாவே வருது.
“ஏம்மா, இவ்ளோ லேட்?”
“ஆடி வெள்ளிங்க.....அதான்”
30 நிமிஷம். பூஜை போட்டு சீட்டுல உட்கார்ந்து வேலை ஆரம்பிச்சா, கீழ் ஃப்ளோரில் ஷட்டர் தூக்கும் சத்தம்.
“என்னம்மா இது 10.30 மணிக்கு ஆபிஃஸ் திறக்கறீங்க?”
“ஆமாம்ங்க சார்......இன்னிக்கு ஆடி வெள்ளி”
அது முஸ்லிம் நண்பரின் அலுவலகம் !

Comments

Popular Posts