சிரிப்பா சிரிக்குது !



அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில் ஒரு தடவை சுடச்சுட செய்திகளைப் பார்த்திடரது வழக்கம். காலைல மட்டும் தான் சுடச் சுட செய்தி கிடைக்குமா என்ன? அதான் இப்ப நெட் வந்த பிறகு எப்பவும் ஹோட்டல் டிபன் மாதிரி நினைக்கும்போதெல்லம் ‘சுடச்சுட’ தானே?

‘பொளிச்’ சுனு முகத்தில் அறைகிற மாதிரி ஒரு செய்தி.

‘வீட்டில் வேலை செய்யும் மனைவியருக்கும் இனிமேல் சம்பளம்’

அதான், உங்களுக்கும் இப்ப முகத்திலும் ‘பொளிச்’சுங்குதில்ல?

அப்பிடியே கணிணியை கணக்கு நேர் பண்ணிட்டு வீட்டுக்கு கவலையோட கிளம்பினேன்.




பாஸ் கேட்டார், ”என்னப்ப அதுக்குள்ள கிளம்பீட்ட?”
“ஆமாங்க......வீட்ட்ல வேலை இருக்கு”


 

அடுத்த ஸீன் வீட்லங்கறது உங்களுக்கு சொல்லாமலே தெரிஞ்சுருக்கும்?

என் மனைவி கூகுள் சர்ச் விட வேகமா சர்ச் பண்ணுவா ( எல்லாரோட மனைவியும் அப்பிடித்தாங்கறீங்களா? அதென்னவோ வாஸ்தவம்தான்) “என்ன்ங்க ஒரு மாதிரியா வரீங்க, எதாவது பிராப்ளம்?”

தெரிஞ்சுகிட்டே கேட்கற மாதிரி எனக்கு டவுட்.
என்ன பதில் சொல்றது? காலைல சாப்பிட்ட சாம்பார் பிடிக்கலைன்னு ஒரு உதார் விடாலாமான்னு யோசிக்க, “ என்ன்ங்க, அம்மா கூப்பிட்டாங்கன்னு கடை வீதி போயிட்டேன், காலைல வச்ச சாம்பார்தான் இருக்கு, தோசை ஊத்தட்டுமா?” ன்னு கேட்டாள் என் அருமை மனைவி.
 
நான் சொல்லலை? கூகுள் சர்ச்.....அதான் , அதேதான்.

“உனக்கு ஏதாவது புது நியூஸ் தெரியுமா?” எதுக்கும்கேட்டு வைப்போம்.
“எது ? கூடங்குளம் நியூசா?”

லேடெஸ்ட் ந்யூஸ தெரிஞ்சுருக்கு.நான் உஷாரானேன்,” அதில்லை....”

“அப்புறம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு நாங்களே அறிவிச்சுடுவோம்னு நீதிபதி சொல்லிருக்காறே அதுவா?”

‘இவ்வளவு சமாச்சாரம் தெரிஞ்சிருக்கே, இந்த மாசம் டிஷ் ரீ-சார்ஜ் பண்ணாம விட்டுறலாமா, பசங்களுக்கு பரிட்சை வருதுங்கிற சாக்கில்?’ என்கிற லெவலுக்கு நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

“என்ன்ங்க, டிஷ்ஷுக்கு ரீ-சார்ஜ் பன்ணிடிங்களா,இன்னும் ரெண்டு நாள்ல கட் ஆகிடும்” நான் சொல்ல்ல? கூகுள்...கூகிள்...அதன் எபக்ட் இதான்.

“ டிபனை வை, காலைல நிறைய வேலயிருக்கு”

இந்த சம்பாஷனைகளுக்குப் பின் இரவு டிபன் முடித்து அதே யோசனையில் உறங்கியும் விட்டேன்.


“என்னங்க, என்னங்க...இன்னிக்கி நான் லீவு?”
“லீவா?எதுக்கு ?”
“ஊருக்கு போறேன், 15 நாம் லீவு இருக்கில்ல ஒரு வருஷத்துக்கு? அதுல கழிச்சுக்குங்க...”
“என்னடி சொல்ற.....வருஷத்துக்கு 15 நால் லீவா? நீயா?”
“ஆமாம், ‘லேபர் லா’ (போச்சுடா) தெரியுமில்ல?”
“லேபர் லாவா? என்னப்பா இது, நமக்குள்ள?”
“ அந்த சமாளிப்பெல்லாம் வேணாம், அதான் சட்டமே போட்டாச்சே?”
பொசுக்கென்று உள்ளே போனாள் என் புது(!) மனைவி.

“ஹலோ, நாந்தங்க பேசறேன்,”
“என்னம்மா சொல்லு,ஆபிசிலிருந்து கிளம்பிட்டேன், ட்வென்டி மினிட்ஸ்ல வந்திடுவேன்”
“ நீங்க மெதுவாவே வாங்க, ஆனா வரும்போது பசங்களுக்கு டிபன் வாங்கிட்டு வந்திடுங்க”
“ஏன், என்னாச்சு,நீ டிபன் பண்னலியா, உடம்புக்கு எதும்.....”
“ அதெல்லாம் ஒன்னுமில்லை. சாயங்காலம் ஆறு மணியோட என்னொட இன்னிய டூட்டி முடிஞ்சிரிச்சி. காலைல கார்ப்பரேஷன் தன்ணி வந்திருச்சின்னு நேரத்திலயே வேலை ஆரம்பிச்சுட்டேன் இல்ல?”
“ அதுக்கு?”
“உங்களுக்கு ஒரு லேபர் எத்தனை மணி நேரம் வேலை செய்யனும்கிற ரூல்ஸ் தெரியுமா, தெரியாதா?”
“என்னடி இது புதுசு,புதுசா......”
“ சரி வச்சிட்டுமா?”
வெடுக்கென்று போனை வைத்தாள் என் இல்லாள்.
=================================================================================

“என்ன சாம்பார் இது? வாயில வைக்க முடியலை?
“ நல்லாத்தானே வச்சிருக்கேன்...?”
“ஆமா...நல்லா வச்சே..இதான் உங்கம்மா வச்சு பழக்கிவிட்ட சாம்பாரா? சாம்பார் வச்சி எக்ஸ்பீரியன்ஸ் சுத்தமா இல்லையா என்ன?”
“ இங்க பாருங்க.... நான் செஞ்ச வேலை உங்களுக்கு புடிக்கலைன்னா மெமோ கொடுங்க பதில் சொல்றேன், எங்கம்மாவையெல்லாம் இழுக்க வேண்டாம், ஆமா சொல்லிபுட்டேன்”
விசுக்கென்று உள்ளே போய்விட்டாள்

“இந்த தீபாவளிக்கு என்ன மாதிரி சேலை எடுக்கப் போறே. பிளான் பண்ணிட்டயா?”
“அதெல்லம் இன்னும் இல்லை?”
“ ஆடி மாசம் வந்த்துமே ரெடியாயிடுவையே, இப்ப என்னவாம்?”
“........ம்.......தீபாவளி ட்ரெஃஸ் எல்லாம் உங்க பசங்களுக்கு எடுத்துக் கொடுங்க, எனக்கு என் ஒரு வருஷ போனஸ் கொடுங்க, நான் பாத்துக்கறேன்”
“போனஸா, உனக்கா?”
“ஆமாம், ஆறு மாசத்துக்கு மேல வொர்க் பண்ணா , சம்மந்தப்பட்ட லேபருக்கு கம்பனி  போனஸ் தரனும், தெரியுமில்ல?”
அப்பிடி சொன்னபோது அவள்முகத்தை பார்க்கனுமே,கூடங்குளத்து மொத்த யுரேனியமும் அவள் முகத்தில்தான்.

“என்ன இது?என்ன இதுன்னேன்?” என் எதிரில் எள்ளும்,கொள்ளும் வெடிக்க என் ஆத்துக்காரி.

“ ம்ம்...இதுவா? டிஸ்மிஸ் லெட்டர், வேலை செய்யற ஆளுடைய போக்கு புடிக்கலன்னா, 30 நாளுக்கு முன்னமே கால்கடுதாசி கம்பெனி கொடுக்கும், அல்லது 30 நாள் சம்பளத்தொட பெர்மன்ட் விடுப்பு. போயிட்டே இருக்கலாம்”
“ஹலோ,அப்பா....அப்பாவா?... அப்பா இவர் என்னை விவாகரத்து பண்றாராம்..ஆமாப்பா..”

“என்னங்க..என்ன இது மணி ஏழு ஆகுது, காலைல ஏதோ வேலை இருக்குதுன்னு சொன்னீங்க.....எழுந்துக்கலை?”
“என்ன ஒரு மோசமான கனவு?” 
“என்னது? கனவா?”
“சே, சே, அதெலாம் ஒண்ணுமில்லை” என்ற படி பேஸ்டை எடுத்தேன்,என் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தபடி.
 

Comments

Popular Posts