அண்ணா வளைவும், அம்மா நினைவும் !




‘இரவு பாகல் பாராமல் முதல்வர் அரசுப்பணி செய்கிறார். அவர் மீது கொடைக்கானலில் ரெஸ்ட் எடுக்கிறார் என அவதூறு செய்தி போடாதீர்’ என தலைமைசெயலர் சொன்னதோடு நிற்காமல், சொன்னவர்கள் மீது மானாவாரியாக கேஸ் போட்டார் .

முரசொலி செல்வம் மீது ரெண்டு கேஸ், நக்கீரன் மீது ஒரு கேஸ், கலைஞர் மீது, ஆனந்த விகடன் மீது…………..கணக்கில்லாமல் கேஸ்.

அந்த தலைமை செயலாளரை மானத்தை வாங்கி விட்டார் முதல்வர்.




எப்படி ?

சென்னையின் அண்ணா வளைவு , மேம்பால வேலைக்காக இடிக்கப்பட்டு, ஓரிரவு முழுதும் , கிட்டத்தட்ட ‘மெஹந்தி அலர்ஜி’ லெவலுக்கு தகவல் பரவிய பின் ரொம்ப பாவமாக ‘எனக்கு ஒன்னுமே தெரியாது.
இது டி.எம்.கே.ஆட்சியில் போடப்பட்ட திட்டம், தகவல் தெரிஞ்சதும் நிறுத்த சொல்லி உத்தரவு போட்டுட்டேன்’ என முதல்வர் ஸ்டேட்மெண்ட் விட்டார்.

 சென்னையின் முக்கிய பகுதி அண்ணா வளைவு!

அது இடிக்கப்படுவது தெரியதாம்! போதுமா, முதல்வர் இரவு பகலாக கோப்புகள் பார்ப்பதும், தமிழகத்தின் மீது அக்கறையாக இருப்பதும்?

அம்மா, தாயே...போதும், ஆளை விடுங்க ! 

Comments

அம்மா பற்றி சொல்லித்தான் யாருக்கும் தெரியவேண்டியதில்லை காலைவாரிவிடுவதில் அவருக்கு இணையாருமில்லலை

Popular Posts