அசராத அர்ஜுனன்...

குருத்துரோகிகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிற நாட்டில், குருவுக்கு தன் திறமைகளை காணிக்கையாக்கிய மாவீரன் அர்ஜுனன் பற்றி பேசப்போகிறோம்.


அப்படி ஒருசமயம் அர்ஜுனனின் குரு துரோணாச்சாரியாவின்  மோதிரம் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. அப்போது அவருடன் பாண்டவர்களும், கௌரவர்களுமாய் மாணவ்ர் பலர் இருந்தனர். மோதிரத்தை எடுத்துத் தருமாறு அவர் மாணவர்களைக் கேட்டார். கௌரவர்களும், பாண்டவர்களும்பெருமுயற்சி செய்து முடியாத நிலையில் அந்தப்பொறுப்பை அர்ஜுன்ன் ஏற்றான்.
எடுத்தான் தன் அம்பராவை. தொடுத்தான் வில்லை. கொடுத்தான் அம்மோதிரத்தை ஆச்சாரியாரிடம்.
மற்றொரு நாள், குரு நிற்கும் மரமொன்றைக்காட்டி, அதன் அத்தனை இலைகளையும் துளையிடுமாறு கூறினார். அனைவரும் திகைக்கும்படி அம்புகள் எய்து அத்தனை இலைகளிலும் துளை ஏற்படுத்தினான்.


வில்லுக்கு விஜயன் எனப் பேரெடுத்தவனல்லவா?


Image result for அர்ஜுனன்

பின்பு ஒருநாள் துரோணர் ஆற்றில் குளிக்கும் போது அவரது காலை ஒரு முதலை கவ்வியது.. அதற்குத்தெரியுமா அவர் அர்ஜுன்னின் குரு என்று. வலி தாங்காமல் துரோணர் கதறினார். பார்த்தான் அர்ஜுன்ன். ஒரே அம்பில் முதலையின் தலையைத் தனியாக துண்டித்து துரோணரைக் காப்பாற்றினான். துரோணர் மார்போடு அருச்சுனனை அணைத்து பிரசிரஸ் என்ற வில்லையும் அம்பை விடும் மந்திரத்தையும்அர்ஜுனனுக்கு கற்றுக் கொடுத்தார்.


இப்படி பலவாறாக, பல்வேறு இடங்களில் தன் குருபக்தியை நிரூபித்தவன் அர்ஜுன்ன். குருபக்தியும் கோடி புண்ணியம்தான்.
துருபதன் பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தோம்.
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர்க்லையைக் கற்றுக் கொடுத்த குருவான துரோணாச்சாரியார் தனது குரு குல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை போரில் வெல்ல காலம் காத்திருந்தார். , அவனைத் தேர்ச்சக்கரத்தில் கட்டி தன்முன் கொண்டு வருவதே சீடர்கள் தனக்கு அளிக்கும் குரு தட்சணை என்று கூறினார்.
கௌரவர்களால் குருவின் தட்சணையை நிறைவேற்ற இயலாது போனது. , துருபதன் ஒரு சத்ரியன்....அவனிடம் தோற்று வந்தனர் பாண்டவ, கௌரவர்.
பாண்டவர்களில் அருச்சுனன் குருவின் வாக்கேற்று, பாஞ்சாலம் சென்று துருபதனுடன் போரிட்டு வென்று,தேர்ச்சக்கரத்தில் கட்டி, தன் குரு துரோணாச்சாரியார் முன்பு கிடத்தி, குரு தட்சணையைச் சமர்ப்பித்தான்.

விராட பருவத்தில் அர்ஜுன்ன் தன் பெருமைகளை தானே கூறுவது மாதிரி ஒரு காட்சி உண்டு. அதிலிருந்து அவன் பெருமைகளை நாம் அறியலாம்.
எதிர்களை வீழ்த்தாமல் போர்க்களத்தை விட்டு அவன் திரும்பியதில்லை என்பதால், அர்ஜுன்னுக்கு விஜயன் என்றே பெயர்.
எதிரி நாட்டை வென்று செல்வம் அத்தனையும் கொணர்ந்த குணத்தால் அர்ஜுன்ன் தனஞ்செயன் என்றும் அழைக்கப்பட்டான்.
யராலும் அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும்,  ஜிஷ்ணு என்ற பெயர்.
தேவர்களுக்கு ஆதர்வாக போரிட்டு, அசுர்ர்களை வென்று, இந்திரனிடம் கிரீடம் பரிசாகப்பெற்றதால் கிரீடி, எங்கிற பெயரும் உண்டு
எதிரிகளுடன் போரிடும்போது, தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே பூட்டுவதால்,சுவேதவாகனன் என்று அழைக்கிறார்கள்..


செய்யும் செயல்கள் எல்லாம் களங்கமற்றவை என்பதால் அர்ஜுன்ன்.


...இப்படி பல பெயர்கள்....அதாவது பல நன்பேருகள்.


பெற்ற பேருகளில் முதன்மையானது கீதோபதேசம். குருஷேத்திரத்தில் மனம் தளர்ந்த அர்ஜுன்ன் பிறப்பின் ரகசியத்தை அறியப்பெற்றது கடவுளின் வாயால்.
கீதையாய்...இன்றும் அத்துணை இந்துக்களுக்கும் உபதேசம் கொடுக்கும் அமுதூற்று.
ஆனால் அப்பேற்பட்ட கிருஷ்ணருடன் அர்ஜுன்ன் போரிட்ட சம்பவம் தெரியுமா? இதோ......அதுவும்.


ஒரு அதிகாலை நேரம்.
Image result for அர்ஜுனன்காலவமுனிவர் எனும் தவசி, நதிக்கரை ஒன்றில் சந்தியாவந்தனமும், நித்திய பூஜையும் செய்துகொண்டிருக்கும் வேளையில், நதிக்கரை நீரை கையிலெடுத்து அர்க்கியம் கொடுக்க முனைகையில், அதில் உமிழ்னீர் விழப்பார்த்து திடுக்கிட்டார். நிமிர்ந்து மேலே நோக்கினார். சித்திரசேன்ன் எனும் கந்தர்வன், உல்லாசமாக தாம்பூலம் தைத்து தன் நிலை மறந்து செல்கிறான். அவன் எச்சமே , தவசியின் கையில் எச்சமாய்.
கண நேரத்தில் இதை அறிந்தான் கந்தர்வனும். ஆயின் கவலை கொள்ளாமல், மன்னிப்பும் கோராமல் பயணம் தொடர்ந்தான். பொறுமையாய் நின்றவருக்கு எல்லை கடந்த கோப்ம் ஏற்பட்ட்து.
தண்டிக்கும் பலமிருந்தும் தவசி, நேராய் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் செல்கிறார். தன் பொறுமையையும், கந்தர்வன் செய்த தவறினையும் விவரித்து, அல்ட்சியத்துக்கு தக்க பதில் தர வேண்டினார்,
கடும் கோபம் கொண்ட கிருஷ்ணர் சித்திரசேனநின் தலையை தவசியின் பாதங்களில் சேர்ப்பதாய் சூளுரைத்து, போருக்கு வரும் செய்தியை அறிவித்தார் கந்தர்வனுக்கு.


கந்தர்வ்ன சித்திரசேனன் உடனே ஒரு உபாயம் செய்தான். நேராக அர்ஜுனனை அடைந்தான். 'அபயம்' என காலில் விழுந்து வணங்கினான்.
அபயம் என வந்தவ்ரகளுக்கு வாழ்வளிப்பது சத்திரிய த்ரமம் ஆயிற்றே. வேண்டுவது யாதென் வினவினான் அர்ஜுனனும்.
கந்தர்வனோ, நடந்தவற்றை திரித்து 'அறியாமல் செய்த பிழைக்கு, ஆபத்து வருகிறது என் தலைக்கு' என்றன்.
அர்ஜுனனும் 'வருவ்து  நினைத்து வருந்துவது மடமை, ஆயினும் காப்பது என் கடமை' என்றான்.

'ஆபத்து என போர் தொடுத்து வருவது யார்' என விஜயனும் விளம்ப, 'அநத கிருஷ்ணனே அது' என்றான் கந்தர்வன்.

மொத்த பூமியும் நடு நடுங்க, செத்த பிணமென நின்றான் அர்ஜுனனும்.
'அபயம் என வந்தவரை காப்பதன்றோ சத்ரியம்?' என்றான் க்ந்த்ரவனும்.

போரென எதிர் வருவது யார்?
ஆத்ம நண்பன்
வ்ழிகாட்டி
அதையெல்லாம் தாண்டி மேலான குரு....அப்பேர்ப்பட்ட கிருஷ்ணன்?

"ஏன்ன அர்ஜுனரே, த்யக்கமா, பயமா.....போகட்டும். என் ஆயுள் அவ்வளவுதான் என முடிவு கொள்கிறேன். அபயம் கேட்டவரை ஆதரிக்கும் உன் தர்மம் கொல்கிறேன்" என்றான் சூது கொண்ட கந்தர்வனும்.

வெகுண்டெழுந்த அர்ஜுனனும், எதி நிற்பது யாரென பார்க்கக் கூடாதன்றோ? அது கிருஷ்ணனே ஆனாலும்.....என முடிவெடுத்து போர்களம் பூண தயாரானான்.

வில்லும் வாளும் மின்னி உய்ரந்தது.. வானம் சென்னி கலந்த்து.
அஸ்திரங்கள் மழையானது. கடவுளை எதிர்த்த அத்தனை அம்புகளும் பிழையானது.

துரோணரிடம் கற்ற வித்தைகள் அத்தனையும் தீர்ந்து விட்டதா, அல்லது மறந்து விட்டதா என சந்தேகம் வந்தது விஜயனுக்கு.

பாண்டவர் மற்றனைவரும் கலங்கி,   போரை நிறுத்த வழி தெரியாது யுத்த களம் வந்தடைந்தனர்.  
பீமன் அந்த கந்தர்வனே காரணம் என்றுணர்ந்து சிறுபூச்சி பிடித்து வருவது போல கொண்ரந்து சேர்த்தான்.
நாரதரும், தேவரும் சித்திரசேனனுக்கு அறிவு புகட்டினர். அவனும் தவறுணர்ந்து கண்ணபிரான் கால் விழுந்தான். மடமைகளை மன்னிக்கும் கடவுள் அவனை மன்னித்து முனிவ்ரின் காலில் விழுந்து எழ சொல்ல க்னதர்வனும் அப்படியே விழுந்தான்.
Image result for அர்ஜுனன்

தவறுணர்ந்த அர்ஜினன், பாண்டவர் அனைவரும் கண்ணன் கால் தேட, பகவானோ, தர்மம், நியாயம், காத்து பாரத தேசத்தை காக்க இன்னும் பல தர்ம யுத்தம் நடத்த வேண்டியுள்ளது. அர்ஜுனன் அத்ற்கெல்லாம் ஏற்றவனா என பரீட்சிக்கவே இந்த சம்பவம். பயம் வேண்டாம் என ஆதரித்தருளினார்.

தர்மருக்கு அடுத்து, தர்ம யுத்த நாயகன் அரஜுனனே என இங்கே நாம் அறியலாம்.

அதே சமயம் தன் மகன் 'அபிமன்யு'வை இழந்து தவித்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தக்க அறிவுரையுடன் கூடிய வழிவகை கொடுத்ததால் சுதர்சன சக்கரத்தால் சூரியனை மறைத்து ஜயத்ரதனை ( இவனே அபிமன்யுவை கதாயுதத்தால் யுத்த தர்மம மறந்து பின்னிருந்து தலையில் அடித்து கொன்றவன்) வெளிவர வைத்து பழிக்குப்பழி கொள்ள கிருஷ்ணரே உதவுகிறார்.

பலவாறாக தன் குருபக்தியையும், கிருஷ்ண பக்தியியயும் அர்ஜுனன் நிரூபித்திருந்தாலும், பாண்டவர்கள் மனதுக்குள் லேசாக ஒரு பொறாமை எண்ணம் உண்டு.
கிருஷ்ணன் அதிகப் பிரியம் வைத்திருப்பது தம்  அத்துணைபேரையும் விட அரஜுனன் மீதுதான் என்பதே.
ஆனால், அரஜுனன் மனமெங்கும் கிருஷ்ணபரமாத்மா வியாபித்திருந்தது அவர்களுக்கு தெரியாது. 

வனவாசத்தில் பாண்டவர்களைச் சந்திக்க கிருஷ்ண பரமாத்மா ஒருநாள் வந்திருந்தார். பகவானோஒரு பாறியயின் மீது அமர்ந்து குந்தியிடம்  பேசிக் கொண்டிருந்தார். அப்போது அர்ஜுனன் மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தான்.  பாண்டவர்கள் மற்ற நால்வரும் கிருஷ்ணர் அவர்தம் காலடியில் அமர்ந்திருந்தார்கள்.
அந்த சமயம் பருந்து ஒன்று, பெரிய கருநாகத்தைத் தன் கால் நகங்களில் கவ்விப் பிடித்தபடி அவர்கள் தலைக்கு மேல் பறந்தது.
குந்தி தலைக்கு நேரே பறந்தபோது நாகம், பருந்தின் காலில் இருந்து நழுவி விடுபட்டு அவள் தலைக்கு மேல் விழுந்து கொண்டிருந்தது.
பாண்டவ சகோதரர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
பரமாத்மா உடனே, “ அர்ஜுனா...!” என்றார். வானத்தைப் பார்த்தார்.
டக்கென்று கண் விழித்த அர்ஜுனன் கண்ணனின் கண் நோக்கிய திசையில் தன் தலைமாட்டில் இருந்த வில்லைப் படுத்தப்டியே நாண் ஏற்றி நொடிக்குள் பாணத்தைத் தொடுத்தான்.
நாகம் அம்பில் செருகி அப்பால் விழுந்தது. குந்தி நாகத்திடம் இருந்து தப்பினாள்.
தூங்கும்போதும் கண்ணன் நினைவாகவே இருந்த அர்ஜுனனின் மகிமையை மற்ற சகோதரர்கள் உணர்ந்து அவனை ஆரத் தழுவினர்.


பரந்தாமன் தன் வாயைத் திறவாமல் அர்ஜுனனின் மகிமையை மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டு  பேச்சைத் தொடர்ந்தார்   .

Comments

Popular Posts