பிராண்டிங் – சில ‘அத்து’மீறல்கள்


ஆதவ் கீர்த்தனாம்பரத்திலே, கலியுகத்திலே……..என்றாரம்பித்தால் நீங்கள் அடுத்த பக்கம் இருக்கிர விளம்பரத்தை ஆராயும் வாய்ப்பிருப்பதால் நேரடியாய் விஷயத்துக்குப் போகலாம்.
எதற்கும் இன்னுமொரு முறை தலைப்பை படித்துவிடுங்கள்.
Image result for brand

ஆச்சா….?
 பிராண்டிங்  ( Brand )–என்றாலே அது பிராடிங் ( Fraud ) தான் எங்கிறீர்களா?
சரியாய்ப்போச்சு போங்கள்.
பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் ஆன கதைதான்.

நான் இங்கே சொல்ல வந்த அத்துமீறல்கள் சற்றே வேறு மாதிரியானவை.
சில அத்து(Border)களை மீறவேண்டும் என்பதே !

ஈரோட்டில் ஜவுளிக்கடைகளில் லுங்கிகளின் மீது ‘பிராண்ட் லேபிள்’ ஒட்டப்படுவது உண்டு.
என்ன பிராண்ட்?
ஏதோ ஒரு பெயர் அவ்வளவுதானே , பிராண்ட்?
கடையின் பெயரின் முதல் எழுத்தெல்லாம் சேர்ந்து ஒரு ‘எஸ்’ அவ்வளவுதான். அதாவ்து K.T.Textiles என்றால், KTT'’.
அல்லது  ‘kay Tee Tee பிராண்ட் லுங்கிகள்’ என உலகலாவிய பெயர் வைக்கப்பட்டிருக்கும்.
இன்னுமொரு ஆப்சன் இருக்கும். ‘காக்கினாடா, கனடா பக்கம் வாடா’ என்கிற ரைமிங்கில் ‘குட்டி நட்சத்திர லுங்கிகள்’ என்றோ, ‘குரங்கு மார்க் கைலிகள்’, ‘சங்கு சக்கர வேஷ்டிகள்’ என்றோ த்ரேதா யுகம் தொட்டு வழங்கி வரும் பெயராய்ப்பார்த்து வைத்திருப்பார்கள்.
அதாவது , தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைக்க 6 மாசம் யோசித்த தம்பதியர் இருக்கலாம். பிராண்ட் பெயரை யோசித்து வைக்கிற முதலாளிகள் மிகக்குறைவே !
‘Just Like that’ போகிற போக்கில் பெயர் வைத்துவிட்டு, அப்புறம் அதை கிஞ்சித்தும் நினைக்காத நாம்தான் வியாபரம் பட்டுப்போச்சே என பத்தாண்டுகளுக்குப்பின் வருத்தப்படுகிறோம்.
 Image result for brand
பத்து வருஷம் அந்த பிராண்ட் காப்பாறறப்பட்டதே பெரிய விசயம் தான்எங்கிறீர்களா….அதுவும் சரிதான்.
இங்கே சின்ன பிரேக் போடலாம்.
தென்னகத்துக்கே (தென்னை மரத்துக்கே என்று படிக்காதீர்கள்) லுங்கி சப்ளை செய்த ஊர் நம்ம ஊர்….மறந்துடிச்சா? அதாங்க ஈரோடு…….இப்போது ஒளிரும் ஈரோடாய் மாறிக்கொண்டிருப்பதாலும், ஸ்மார்ட் சிட்டிக்குள் மாட்டிக்கொண்டதாலும் பெயர் மறந்து போயிருக்க வாய்ப்பிருக்கலாம்.
இலங்கைக்கு லுங்கி அனுப்பி அவர்தம் மானம் காத்ததும் நம் மறவர்குல மாணிக்கங்கள்தான்.
மலேசியா, சிங்கைகளில் பூமி அதிர லுங்கி கிடைத்ததும் நம் ஈரோட்டு சாமிகளின் கைங்கர்யம்தான்.

Image result for lungi
ஆனலும் இன்று, ஈரோட்டு லுங்கிகளின் மதிப்பு இந்திய ரூபாய் போல…..அதல பாதாளத்தில் !
அமெரிக்க டாலர் போல அதை மேலே தூக்கி வர்த்தான் ‘பிராண்ட் மதிப்பு’ வேண்டும் என்கிறேன். அமெரிக்கா டாலருக்கே அதன் மதிப்பை உயர்த்த , ‘அமெர்க்கா என்பது  உலகின் போலீஸ்’ எங்கிற பிராண்ட் வேசம் தேவைப்பட்ட்தா இலையா? அப்புறம் நமக்கெதற்கு வெறும் வேசம்?
பிராண்ட் என்பது வெறும் பேரு வைப்பது மட்டுமில்லை…மாறாக அது வளர சோறு வைப்பதும்.
அதாவ்து பிராண்டை வளர்ப்பது.
பிராண்டை வளர்ப்பதாவது, என பாயை பிராண்டும் சில பழைய பல்லவி கன்பூசியஸ்கள் இன்னும் கூட நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பின்னே?
டி.வி.யிலும், சாலைகளிலும் வரும் விள்மபரங்கள் என்னவாம்?
ஸரி……….விளம்பரம் செய்தால் மட்டும்  பிராண்ட் வளர்ந்துவிடுமா?
வளராது.   
அப்புறம், என்னத்துக்கு விளம்பரம்?
இல்லைன்னா பிராண்ட் வளராது.
 ( இப்படியே இன்னும் பத்து வரி எழுதினால், இந்த இத்ழோடு சரி…..! எனும் ஆசிரியரின் மைண்ட் வாய்ஸ் சத்தமாக கேட்கிறது )
நன்றாக கவனியுங்கள்.
‘விளம்பரம் செய்தால் மட்டும் பிராண்ட் வளர்ந்துவிடுமா’ எங்கிற எதிர்மறைக்கேள்வியில் இருக்கிற ‘மட்டும்’ எனும் வார்த்தையை அடிக்கோடிடுங்கள்.
ஆஸ்காருக்கு அடிக்கடி போய்விட்டு, கை வீசம்மா கைவீசு என வெறும் கையை வீசிக்கொண்டு வந்த கமல் சொன்னது ஞாபகம் வரலாம்.
“லாபி பண்ணாம ஆஸ்கார் கிடைக்காது”
அதென்ன லாபி?
ஆஸ்காருக்கு சினிமாப்படத்தை அனுப்பினால் மட்டும் போதாது. படத்தை விருது வழங்கும் குழுவினருக்கு போட்டுக்காட்டனும். ஸ்பான்சருக்கு போட்டுக்காட்டனும். குழுவின் குழுவினர் என்றோரு ஜல்லியடிக்கோஷ்டி உண்டு.அவர்களுக்கு போட்டுக்காட்டனும். அங்குள்ள பத்திரிக்கையாளர் குழாம், முடிவெடுக்கும் குழாம், இன்னாள், முன்னாள்,, உடனடி முன்னாள்,அவர்தம் மனைவியர்………எல்லோருக்கும் படம் காட்டனும்.
தாலுகா ஆபிசில் போய் அப்ளிகேசன் கொடுத்துவிட்டுப் வீடு வந்தால், எப்படி வேலை நடக்காதோ அப்படி. பியூனை கவனித்தால் எப்படி சுற்சுறுப்பாய் வேலை நடக்குமோ அப்படி….!
நிறய்ய லாபி உண்டு……பிராண்டை வளர்க்க.
அப்புறம் பட்ஜெட் !
இந்தியாவுக்கே இழுத்தடிக்கும் விசயம்.
தமிழ்னாடே தவிக்கும் விசயம்….பட்ஜெட் !

மீண்டும் இங்கே நிற்க !
இதுவரை மூன்று விசயங்கள் பார்த்திருக்கிறோம்.
1)      நம் தயாரிப்புகளை பிராண்ட் செய்யனும்
2)      அவற்றிற்கு நல்ல்தொரு பெயர்வ் வைக்கனும்: அதை வளர்க்கனும்
3)      இவற்றிற்கு செலவு செய்யும் பட்ஜெட் போடனும்.

.................................part 2  சந்திக்கலாமா?

Comments

Popular Posts