கற்றலின்...............

பேச்சு’ என்பதன் முதற்பகுதி ‘கேட்பது’ என்பதாம்.

சரி..சரி...சீரியசாக ஆரம்பிப்பதாக உத்தேசம் இல்லாத காரணத்தால், நம்ம ஃஸ்டைலிலேயே வருகிறேன்.

‘ஆக்டிவ் லிசனிங்’ என்றொரு பாகம் இருக்கிறது. இந்த வார்த்தையை சொன்னதுமே எனக்கு ரொம்ப வருடங்களுக்கு முன்னால் ஜவஹர் அவர்கள் எழுதிய விஷயந்தான் ஞாபகம் வருகிறது. அது அப்புறம்.



உங்களுக்கு நண்பர் யாருடனாவது பேசப்போகும்போதே ‘போட்டு அறுக்கும்’ சிலரின் ஞாபகம் வரலாம். சில பேர் ...

“சுஜாதா புத்தகம் ஒண்ணு லைப்ர்ரில எடுத்தேன்..”

“சிறுகதை தொகுதியா, கட்டுரை தொகுதியா?” என்பார்கள் பதிலாய்.
“எப்படி கரெக்டா சொல்றே”

“உங்க டேஸ்ட் எனக்கு தெரியாதா?....செம மேட்டர் ஒண்ணு அதுல மாட்டிருக்கு, அடுத்த உங்க ட்ரெயினிங்கில், அது இருக்குமே”

“ஆமா, அதுலயும், ஃபிக்சன் கதை ஒண்ணு...”

“பிச்சி எடுத்துருப்பாரே...உங்க வாயாலயே சொல்லுங்க கேப்போம்”

“ புக் தரேன் ..படிச்சி பார்...”

“நீங்க அதைவிட சுவாரசியமா, கொஞ்சம் சேர்த்து சொல்வீங்க......சொல்லுங்க”

சொல்ல ஆரம்பித்தால்......இடையே “இரு இரு கொஞ்சம் முன்னால என்னமோ சொன்னியே என்னது?” என கேட்டு வாங்கி போவார்கள்.

உங்களுக்கு யாருடனாவது கதை அடிக்க விருப்பம் எனறால், அவர் உங்களை பேச வைத்து கேட்பவர் என்று அர்த்தம்.

எனக்கு R.S..பிரபு, தனவேல்  இவர்களுடன் பேசப் பிடிக்கும்...மணிக்கணக்கில். அதிலும் ‘தனவேல்’ என்றால் நாட்கணக்கில்.
இன்னும் ஒருவர் இருக்கிறார். 

மஞ்சு ஆன்ந்த். 

நாம் பேசிக் கொண்டே இருக்கலாம். கேட்டுக்கொண்டே, சிரித்துக் கொண்டே, நடுவில் சின்னதாய் கமெண்ட் மட்டும் அடிப்பார். அவரின் கடேசி கமெண்ட் இப்படித்தான் இருக்கும், “ சார்......சான்சே இல்ல....பிச்சிட்டீங்க”

இன்னும் சிலர்.....வேறு கேஸ்.

இந்த  “மேட்டூர் ரோடு இருக்கில்ல..” என நாம் ஆரம்பித்த்துமே, “எது, அபிராமி தியேட்டர் ரோடுதானே....கிழின்சிது...செம ட்ராபிக்தான். நைட் பத்து மணிக்கு க்கூட K.P.N. வண்டியை குறுக்கே போட்டுகிட்டு ஒரே அலப்பரை. நைட்டுன்னா எப்படி வேணா வண்டி ஓட்டலாமா......அதும்...பிருந்தாவன் வாசல்ல..பழைய புத்தகம்...கொய்யாக்காய்.....கண்ட்தெல்லாம் விக்கிறான்...அப்ப்ப்ப்ப்பா......ஆமா நீ என்ன சொல்ல வந்தே?”

“அதில்லை...நான் என்ன சொல்ல வந்தேன்னா?”

“தெரியுது...அடையார் ஆன்ந்த பவன் கிட்ட நம்மாளுக சொதப்புற ட்ராபிக் விஷயந்தானே...? இவனுங்கலை திருத்தவே முடியாது......இவனுக எதுக்கு கோடு போட்டு அங்க போலீசையும் நிக்க வச்சிருக்காங்க.....லெப்ட் ப்ரீன்னு இன்னும் எவனுக்கும் புரியலை.....சொல்லு....என்ன உன் பிரச்சினை?”

“டேய்....”


கற்றலின் கேட்டலே நன்று. புரிஞ்சா சரி.....

Comments

Popular Posts