8


எம்,
எல்லா நாட்களுமே பெண்களோடேயானது.
எல்லா நாட்களுமே பெண்களுக்கானது.
எல்லா நாட்களுமே பெண்களால் ஆனது.

தனியாய் சொல்லி
தரம் பிரிக்க
நான் பெண்களைக் களவாண்டவனா என்ன?

எம்,
ஒவ்வொரு எட்டிலும்
அவள் இருக்க
ஒரே எட்டுதானா அவளை குறிக்க?

******************************************************************

முதல் வகுப்பில் கைபிடித்து எழுதத் தொடங்கியது முதல்,
 நிரந்தரமாய் நம் கைபிடித்த மனைவி வரை,
எப்பொதும் பெண்கள் நம்மை ஆக்ரமித்திருக்கிறார்கள்.

அழகாய் தெரிவதாய் திரும்பி,திரும்பி பார்க்கவைத்த அந்த சின்னப்பெண்..
அம்மாவிடம் ரசம் வாங்க வரும் எதிர்வீட்டு அக்கா....
காப்பி பொடிக்காய் கடைக்குப்போகும் முன் வீட்டு பெண்...

காலிக்குடம் கொண்டு போகையில் மனதையும் காலி செய்து போன இள்வயது பெண்கள்...
தண்ணீர் பிடிக்கையில் தூக்கி விடச் சொல்லி காதல் ஏக்கம் தந்த கன்னிகைகள்...
குடம் தூக்கி பழக்கிவிட்ட பக்கத்து வீட்டு அக்காக்கள்...
சொந்த சைக்கிளில் நம்மை டபிள்ஸ் அடித்த வகுப்பு தோழிகள்...

"ஏன் கிளாசுக்க வரல்லை? உனக்கு பைன்" என ஆக்ரமித்த அழகுகள்...
வேலை முடிந்து சைக்கிளில் கடந்துபோன கைக்கிளைகள்.....
"சார்,  நீங்க கருப்புதான்...ஆனா அழகு" என 'உண்மை' பேசின அலுவல் அவஸ்தைகள்...

சொன்ன காதலுக்கு பதில் தராத நெஞ்சவஸ்தைகள்...
கவிதை எழுத கண்பார்வை தந்தவர்கள்.....
"'ஒரு கோப்பை தேனீர் -ஒரு கோப்பை காமம்' நல்லாருக்கு, ஆனா புரில" என அர்த்தம் கேட்ட  நட்பிகள்....

"இதெல்லாமா படிப்பே?" என ஆச்சரியப்பட்ட அண்மை உறவுகள்....
"சினிமாக்கு வரேன்....ஆனா...ம்ஹூம்.." என்ற  ஸ்ட்ரிக்ட் நட்புகள்....
அழ வைத்து அணைத்துக் கொண்டவர்கள்....அணைக்க வைத்து அழ வைத்தவர்கள்...
அழுத கண்ணீரை துடைத்து அணைத்துக் கொண்டவர்கள்..... 

"இன்னுமா இதெல்லாம் தெரியாது? சும்மா சொல்லாதே"  என சிக்க வைத்தவர்கள்...
"இப்பிடியெல்லாம் கூட இருப்பார்கள்...சிக்கிக்காதே" என சுத்தம் சொன்னவர்கள்...

"என்னங்க இது, ஆம்பிளை பையனை பெத்துட்டு, ஆபரேசனுக்காக அழறீங்க?" என அழுத்தமாய் திருத்திய மனைவியின் அக்காக்கள்...
"மாமா, நாம அப்படியா பழகியிருக்கோம்?" என அக்காவை வெறுப்பேற்றும் மச்சினிச்சிகள்....

"ஊருக்கே பாடம் சொல்ற எங்கண்ணனுக்கு நானே பாடம் சொல்லுவேன்" எனும் அன்புத்தங்கைகள்....
நோயுற்றே இருந்தாலும் 'கொஞ்ச டி.வி.யை நிறுத்திட்டு தூங்கு' என்று மகனுக்கு அறிவுருத்தும் அம்மா....

..........................இதை எல்லாம் தாண்டி........எப்போதும் ஒரு குரல் உள்ளே !

"எட்டு மணிக்கு வந்துருவீங்க இல்லே?" 

அவள் தான் எல்லாமே.
அவளால்தான் இல்லமே!





Comments

Popular Posts