கொல்றாங்களே....கொல்றாங்களே.....!

நினைவலைகள் – Speech Craft – பேச்சுக்கலைக்கான பயிற்சிப்பட்டறை ! இரண்டாவது வருடமாக இதில் நான் இணைப்பயிற்றுனராக ! ஆதலால் கொஞ்சம் பதற்றம் இல்லைதான் – பங்கேற்பாளர்களைக்காணும் வரை. ‘கொஞ்சம் மெச்சூர்டு குரூப்போ’ என சந்தேகம் கொள்ள வைக்கும் கும்பல்(?)தான் என் கண்ணில்பட்ட முதல் ஐவர். தொற்றிக்கொண்டது பயம் இங்கிருந்துதான்.
மண்டலம் 17, எப்பவுமே அசரவைக்கும் பங்கேற்பாளர்களைக் கொண்டது. அதில் ஐயமில்லை. ஜேசிஐ ஈரோடு மெட்ரோ....... உற்சாக உற்சவர்களை ஐக்கியம் கொண்ட கிளை. டீ பிரேக் 11 மணி என்றால் பத்தரை மணிக்கு அப்புறம் எப்போது அவர்கள் பக்கம் எதற்காக திரும்பினாலும், ‘சார், டீ ரெடி!’ குரல் கேட்கும். லன்ச் நேரமும் அப்படித்தான். வைரமுத்து, ராம் என்று இரு கொலைகாரர்கள். அன்பாலேயே, சந்தோஷக்குரலில் பேசியே சிரித்தபடியே கொலை செய்வார்களோ என்னமோ? (நம்பியார், ஆர்.எஸ் மனோஹர் குரூப்போ?) அவர்கள் எங்கள் அத்தனை பேரையுமே கையில் வைத்துத்தான் தாங்கினார்கள். சிரித்த முகமூடியை அவர்கள் கடைசி வரை கழற்றவே இல்லை. எனது ரூம்மேட் மற்றும் இணைப்பயிற்றுனர் என்னைவிட காபி பைத்தியம் போலும்.
ஆறு மணிக்கு அலாரம் வச்சு , “வேலு, போயி காபி சாப்பிட்டு வரலாமா?” என்பார். ‘இருங்க ரிசப்ஷன்ல ஆர்டர் பண்ணுவோம், வரும்’ என்றுவிட்டு வரவேற்புக்கு பொத்தான் அமுக்கினால், “ வணக்கம் ரிச்ப்ஷன், ஜேசி காபி உங்க ரூமுக்கே வரும். வேற எதும் வேணுமா சார்?” என நக்கல் பண்ணுவார்கள். கதவை திறந்தால் காபி கப்புடன் சேகர் நிற்பார். சிரித்தபடிதான். ஒரு ஸ்டேஜில் நானே வெறுத்துப்போய் விட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ட்ரெயினிங் ஹாலில் ஏ.சி.பத்தலை என்றால், ‘சார், உங்க தலையை சாச்சா மதிரி வச்சுக்கொங்க, உங்க மூஞ்சில அடிக்கறா மாதிரி ஸெட் பண்ணிட்டோம்’ என்பார்களோ என்கிற அளவிற்கு பயமாய் இருக்கிறது. “எங்கப்பா ஐ.டி.கார்டு?” என்று கேட்டு, கார்டு ஃபோல்டருக்குள் பொருந்தாமல் போனதால் கொஞ்சம் மடித்து அட்ஜஸ்ட் செய்து கழுத்தில் மட்டிய பத்தாவ்து நிமிஷத்தில், ‘சார், இந்தாங்க ஐ.டி. கரெக்ட் ஃபோல்டரில்...’. (ஏப்பா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?) பாராட்டி முடிக்கும் முன் தலைவர் வெங்கடேசன்,” நான் ஒப்படைச்சுட்டு ஒதுங்கிட்டேன், இது அவங்க கைங்கர்யம்” என்றார். தலைமைப்பண்பே அதுதானே? சிறப்பாக செய்யவேண்டும் என்றுதானே மெனகெடுகிறோம்; சிறப்பாக செய்துவிட்டால் கைகொடுக்கிறோம்.

Comments

Popular Posts