மூன்று முடிச்சு - டை கட்டும் போதும்.

சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்வுக்கு, குடும்பநண்பர் என்பதால் முன்னதாகவே சென்றிருந்தேன்.

மாப்பிள்ளை தயாராகிக்கொண்டிருந்தார்.
திடீரென்று அங்கே அறையில் பரபரப்பு.

மணப்பெண் ஓடிவந்து, "அண்ணா, உங்களுக்கு டை கட்ட தெரியும்ல, அவருக்கு டை கட்டனும்" என்றார்.

நான் ஒரு மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் என்பதை அறிவார். நான் டை கட்டி பழகியதே ஒரு சரித்திரம்.

Personality Development course ஒன்று ஈரோட்டில் நடந்த போது கலந்து கொண்டேன்.
வெறும் ஐம்பது ரூபாய் கட்டி, டெமோ வகுப்பில் கலந்து கொண்டால் ( கிட்டத்தட்ட் நூறுபேர் கலந்தோம் ), அந்த நிகழ்வின் முடிவில் 20 பேரை மட்டும் அவர்கள் தேர்வு செய்து 10 நாட்கள் பயிற்சியளிக்கிறார்கள்.

தேர்வு செய்யப்பட்ட எனக்கு ஒரு சங்கடம்.
அதில் ஓவர்கோட்டுடன் தான் கலந்து கொள்ள வேண்டும் என்று கண்டிசன். என்னிடம் அப்போது (வருடம் 2005) கோட் இல்லை. மேலும் ஓரிருவர் இதே கேஸ்.

நேராக பயிற்சியாளரிடன் சென்றேன். கல்யாண ரிசப்சனுக்கே கோட் போடாமல் நின்ற என் தமிழின பெருமையை(?) சொன்னேன். தமிழை...சாரி... நிலைமையை புரிந்து கொண்ட அவர் வெறும் டையாவது கட்டிக்கொள்ள அறிவுறுத்தினார்.

சென்னை சில்க்ஸ் போய் ஒரு டை வாங்கி அங்கேயே கட்டி பழகி வந்து, இரண்டு நாள் அப்படியே கழுத்து வழி கழட்டி, மாட்டியபின் கொஞ்சம் தைரியமாய் அதன் முடிச்சை அவிழ்த்து, முயன்றால் சிக்கல்.

கழுத்து இறுகுகிறது.....முடிச்சு வரவில்லை.
இம்முறை நேராக ஐசிஐசியை வங்கி.
'நான் உங்களுக்கு உதவலாமா' என்றவரிடம் என் நிலைமையை சொல்லி மீண்டும் கழுத்தேறியது டை.

வகுப்பு முடியும் வரை ..ம்ஹூம்...சோதனை முயற்சிகளில் இறங்காமல், அசங்காமல் கசங்காமல் டையை அப்படியே பயன்படுத்தினேன்.

2009 இல் ஜேசிஐ வந்த் பின்தான் முழுமையாய் டை கட்டி பழகினேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் நிறைய ஸ்டைல் இருப்பதும்.

உங்களுக்கு உதவ...இதொ டெமோ.......
https://www.youtube.com/watch?v=xAg7z6u4NE8

Comments

Popular Posts