நாம ஒண்ணு நினைச்சா....

சாயங்காலம்.

வெட்டவெளி பாரின் ஒரு இருட்டு மூலையில் தனியாய் அமர்ந்து தன் முன் வைக்கப்படிருந்த பீர் கோப்பையையே சோகமாக வெறித்துக்கொண்டிருந்தான் குமார்.

திடீரென நுழைந்த இரு பைக்கர்கள், வண்டியை சைட் ஸ்டேண்ட் இட்டு, நேராக குமார் டேபிள் அருகில் நுழைந்து, அவன் எதிரில் இருந்த பீரை எடுத்து 'கடக், கடக்'கென அருந்தி முடித்து எக்காளமாக சிரித்தனர்.

"எப்புடி?"
குமார் கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.

"யொவ்...இதுக்கெல்லாமா அழுவாங்க.....டேக் இட் ஈசி.....இதெல்லாம்  நாங்க செய்யற த்ரில் விளையாட்டு. திடீர்னு நுழைவோம். அங்கே எதாவ்து ரவுசு பண்ணுவோம். எதிர்வினையை பார்ப்போம். கவலையே படாம போயிக்கிட்டே இருப்போம்..."

குமார் அழுகையை நிறுத்தவில்லை..." சே...என் நாளே சரியில்லை...."

" ப்ச்.....இப்ப என்ன...? டேய்  மூணு பீர் ஆர்டர் பண்ணுடா.....இவரோட சேர்ந்து சாப்பிடுவோம்...என்ன பிரதர் வேறு எதும் பிரச்சினையா?"

கண்களை துடைத்துக்கொண்ட குமார், " அதுக்கில்லை....இன்ன்னிக்கு மொத்தமாவே செரியில்ல....காலைல வீட்லேர்ந்து கிளம்பும்போதே லேட்டு, அப்படியே பங்க் போயி பெட்ரோல் போட்டால் கிரெடிட் கார்டு பிளாக். கைலேர்ந்த எட்டாயிரம் ரூபா வாட்சை கழட்டி கொடுத்துட்டு வந்திருக்கேன்.
ஆபிஸ் மீட்டிங்க்கு தாமதம், எம்.டி. கன்னாபின்னான்னு திட்டிட்டார்...ஆன் த ஸ்பாட்டில் ரிசைனேசன் கொடுத்துட்டேன்."

" அடடா...."

" அப்படியே பேங்க்குக்கு போயி கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டிட்டு, வெளில வந்தால் காரைக் காணோம்......டாக்சி புடிச்சி வீட்டுக்கு போனால், வீட்ல என் பிரெண்ட் கார் நிக்குது.....ஐ யாம் டோட்டலி பெயிலியர்..."

" விடுங்க பாஸ்....உங்க பிரெண்ட் உங்களை கன்வின்ஸ் பண்ணக்கூட வீட்டுக்கு வந்திருக்கலாமே...?"

" அவநோட பழைய மனைவியத்தான் இப்ப நான் வச்சிருக்கேன்...அதை விடுங்க..இதையெல்லாம் பாத்துட்டு வெளில வர்ரேன்...என் வீட்டு நாயே என்ன கடிச்சிருச்சி......"

" அடப்பாவமே..."

" அதான், இனிமே வாழறதே தப்புன்னிட்டு, இங்கே வந்தேன்.ஒரு பீர் வாங்கி அதுல  ஃபுல் டோஸ்ல பாய்சனை போட்டுட்டு அது கரைஞ்சிகிட்டு இருப்பதை பார்த்துக்கிட்டு இருந்தேன்....நீங்க வந்தீங்க...  கடவுள் நான் சாவதை விரும்பலை போல.  அதை விடுங்க...நானே பேசிக்கிட்டு இருக்கேன், உங்க நாள் எப்படிப் போச்சி....?"

Comments

Popular Posts