சாலமன் பாப்பையா......பாப்பியா,பாப்பியா ?

உங்க புரொஃபைல் படத்தை பார்த்தால் சாலமன்பாப்பையா மாதிரி இருக்கு என்றார்கள் சில FB நண்பர்கள்.

எனக்கு அவரைபிடிக்கும்.

கமல் படமோ, சிவாஜி படமோ அதி சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்தால் கூட, போட்டது போட்டபடி சானல் மாற்றி அவரின் பட்டிமன்றம் பார்க்கும் அளவுக்குப் பிடிக்கும்.

நேற்று  ஈரோடு பு.திருவிழாவில் அவரது பட்டிமன்றம்.

போயிருந்தேன்.

ஏற்கனவே பேசியிருந்தபடி Ramasamy Sivashanmugam அவர்களை சந்திப்பதாகப் பேச்சு! (முகனூழில் தான் அவரோடு அதிக அரட்டை, ஒரே முறை அவரது அலுவலகத்தில் சந்தித்தது)

"ம.சி.பேரவை வாசல்ல நிக்கிறேன், வாங்க" என்றார்.

பாப்பையா அவர்களின் அறிமுகம் தாண்டி, ரெண்டாவது பேச்சாளர் தங்கச்சியை...சே......தன் கட்சியை (சேர்தெழுதும்போது தமிழும் தப்பாகுதே?) வளுப்படுத்திக்கொண்டிருந்தார்.

அறிமுகம், கைகுலுக்கல்,"எப்படி இருக்கு வேலைல்லாம்?" , புத்தகத்திருவிழா, மக்கள் சிந்த்னைப்பேரவை , ஈரொடு, விளம்பரங்கள், சைக்கிள் ஸ்டாண்டு, ....'பட்டிமன்ற சூப்பர்ஸ்டார்' ராஜா பேசிக்கொண்டிருந்தார்...........பால்ய காலகவிதைகள், எழுத்துகள், பெண்கள், குடும்பம், வெளினாடுவாழ் தமிழர், இந்தியத்தனம்.............இறுதியாய் பாரதி பாஸ்கர்...... அப்துல்கலாம் சொன்ன 2020, ...........அவருக்கு பேரவையிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.

இருவரும் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பார்த்துவிட்டு பிரிந்தோம்.

இதுவும் சந்தோஷமாய்த்தான் இருக்கிறது !

Comments

Popular Posts