மூணார் அனுபவம்....


10 மே - 2014 மூணாரில் ஒரு ட்ரெயினிங் வச்சிருக்கோம். நீங்க வந்து பண்ணித்தர முடியுமா என்ற அன்பு வேண்டுகொளை சிறமேற்கொண்டு முந்தின நாள் மே 9, திருப்பூர் வழியாக உடுமலை சென்றேன். இரவு 11 மணி. ஜே.சி.ஐ. உடுமலைப்பேட்டை விண்ட்சிட்டி-யின் தலைவர் ஜோதிராமலிங்கம் (ஒரு ரொட்டேரியனும் கூட) தனது 11 வயது மகளுடன் எனக்காக காத்திருந்து அழைத்துக்கொண்டார். இரவு அவரது வீட்டில் தங்கினேன். ஒரு முதல் தர ஹோட்டல் மாதிரி எனக்காக அறை தயாராய் வைத்திருந்தார்கள். ( 'சார், இதான் ஹீட்டர் சுவிட்சு, இதை காலைல ஒரு அஞ்சு நிமிஷம் போட்டா சுடுதண்ணி ரெடி' - வரை சொல்லிகொடுத்துவிட்டுத்தான் அவர் படுக்கைக்கு போனார்) காலையில் வழக்கம் போல் நான் 5 மணிக்கே எழுத்துகொண்டேன். 6.30க்கு தயாராய் இருந்தால் போதும் என்பதால் அன்றைய பயிற்சிக்கு கொஞ்சம் தயாரானேன். அனைத்து ஜே.சி. நண்பர்களும் ஒவ்வொருவாராய் வர, பரஸ்பரம் அறிமுகம். ஜேசி.மாகாலிங்கம் அவர்களின் மாருதி ஆல்டோவில் நான். மூணார் போகும் வழியில் காலை உணவு. அது தனியாய் வந்து இணைந்து கொண்டது.
பின்னர் தங்கள் கையோடு கொண்டு வந்திருந்த விழிப்புணர்வு பிரசுரங்களை வினியோகித்தனர்.
ஒரு பயிற்சியாளராய் எனது வேலை. மத்ய உணவுக்கு முன்.
மதிய உணவு முடிந்து வரும்வழியில் ஒரு வித்தியாசமாய் ரோட்டில் சிறிய உரை..வருகிற மிட்கான் (இடை நிலை மானாடு)பற்றி.....
உடுமலையில் ஜேசி மகாலிங்கம் என்னை விடுவிக்கும் வரை ஒரு அன்பின் நெடிய பனி என்மீது போர்த்தியே இருந்தது. அது என் பணியை எளிதாக்கியது.
அட, வீடு வீடா போயிமா பிரசுரம் கொடுப்பீங்க? உங்க ஆர்வத்துக்கு அலவே இல்லையா?

Comments

Popular Posts