பெய்யெனப் பெய்யும்....?

“என்ன அமைச்சரே, நாட்டில் மும்மாரி பெய்கிறதா?” என்று அரசன் கேட்டால், நாட்டில் அடிக்கடி மழை பெய்யவேண்டும் என்கிற அவரது ஆசை புரிகிறது. சரி ! மழை பெய்வதைக் கூட கவனிக்காமல் அவர் என்னதான் பண்ணிக் கொண்டிருந்தாராம் ? நாட்டின் எல்லாப் பகுதியிலும் மும்மாரி பெய்த்தை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை இல்லையா. தவிர அப்போது நம்ம ரமணன் வேறு இல்லையா? அதனால் இருக்கலாம். சரி அரசனை மன்னிப்போம். மழை வேண்டி வருண பகவானுக்கு விண்ணப்பம், கழுதை கல்யாணம், மழை சோறு....இப்படி வராத மழையை வரவைக்க எத்தனை முயற்சிகள்? செயற்கை மழை பற்றி இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம். அது எப்படி நடக்கிறது? நாம் பிசிக்ஸ் பாட்த்தில் படித்த மாதிரி, முதலில் செயற்கையாய் காற்றழுத்தத்தை உருவாக்குகிறார்கள். இப்படி மழை மேகங்களை ஒன்றுகூட செய்வதே முதல் நிலை. கேல்சியம் கார்பைடு, கேல்சியம் ஆக்ஸைடு, உப்பும் யூரியாவும் கலந்த கலவை அல்லது யூரியாவும் அமோனியம் நைட்ரேடும் கலந்த கலைவையை மேகங்களில் தூவினால், அவை காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை மேகத்தை உருவாக்க உதவுகின்றன. அப்புறம் ,மழை மேகங்களை அதிகரிக்க செய்கிறார்கள். சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றை தூவி அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்றுகூட செய்யப்படுகிறது. இவ்வாறு செய்ய கால்சியம் குளோரைடும் சிலநேரங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. உலர் பனி என்பது கார்பன் டை ஆக்ஸைடை அமுக்கி சுருக்கப்பட்ட பனிக்கட்டி பொடியாகும். கடைசியாய் மேகங்களை குளிரச் செய்து அதிக அளவு மழை பெய்யச் செய்கின்ற வேதியல் பொருட்களை தூவுவது . இந்த நேரத்தில் வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுகின்றனர். அவற்றை மேகங்களின் மேல் தூவினால் அவை குளிர்ந்துவிடுகின்றன. மழை மேகங்கள் குளிர்ந்தவுடன் நீர் துளிகளாக மழை பெய்ய தொடங்குகிறது. அப்பாடா மழை வந்தாச்சு.....! சில மாலைநேரங்களில் மழை வருவது மாதிரி இருக்கும், நாம் கயிற்றுக் கட்டில், கொடியில் இருக்கும் துணி வகையறா, மொட்டை மாடி வடாம்....எல்லாம் எடுத்து வீட்டுக்குள் வைப்போம். வராது.. இதை மேகங்கள் அதிகளவு குளிரடைந்த நிலை என்று கூறுவர். இவ்வாறு தோன்றினால், மேகங்களிலுள்ள ஈரப்பதம் நீராக மாற இயலாமல் இருப்பதை குறிக்கும். இந்த வேளையில் சிறிய விமானம் மூலம் வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி தூவப்பட்டால் குளிரடைந்த நிலை கலைக்கப்பட்டு மழை பெய்ய தொடங்கிவிடும். இந்நேரங்களில் மூன்றாவது நிலை மட்டுமே பயன்படுகிறது. சிலவேளைகளில் வெள்ளி அயோடைடு குச்சிகளை ஏவுகணை குண்டுகள் மூலம் இந்த மேகங்களின் நடுவில் வீசுவதும் உண்டு. இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு நிலைகளிலும், உத்திகளை வடிவமைப்பது. செயல்படுத்துவது, கண்காணிப்பது மற்றும் திறனாய்வு செய்வது போன்றவை வழிமுறைகள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலநேரங்களில் இந்த முயற்சிகள் தோல்வியில் முடிவதும் உண்டு. அறிவியல் பார்வையில் செயற்கை மழை இப்படி இருந்தாலும், நாமெல்லாம் கேள்விப்பட்ட மாதிரி, ‘யாகம்’ மூலம் மழை வரவைப்பது சாத்தியமா? சாத்தியமே ! அப்படி மழை வந்ததற்கு ஆதாரங்களும் இருக்கே ! அவ்வளவு ஏன், ஒவ்வொரு மாரியம்மன் திருவிழாவின் போது எப்ப்டி மழை கரெக்டாகப் பெய்கிறது? அம்மனின் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி,ஊற்றி, அயோடின் உப்பை தூவி.....அந்த ஏரியாவைக் குளிரச் செய்துவிடுகிறொயம். வெப்பச் சலனம் ஏற்படுதுகிறோம். வேறு வழியே இல்லாமல், கம்பம் பிடுங்கும் நாளிலாவது மழையை அம்மன்(?) தந்துவிடுகிறாள். நமது முன்னோர்களின் ஐடியாவே ஐடியாதான் ! யாகத்தில் என்ன நடக்கிரது. ஏகப்பட்ட காய் கனிகள், மரப்பட்டைகள், காய்ந்த இலை, கொடிகள்...பால்,தேன் போன்ற திரவங்கள்..... யோசித்துப் பாருங்கள். மேற்சொன்ன எல்லாவற்றிலும் அமிலம், அயொடின், கால்சியம் என இப்போது செயற்கை மழையில் பயன்படுத்தும் அத்தனை அய்ட்டங்களும் இருக்குதா? அப்புரம் மழை வராம என்ன பண்ணும்? அமெரிக்க விஞ்சானிகள் 1957 க்கு அப்புறம்தான் செயற்கை மழையை யோசித்தார்கள். சீனவில் 1960-70ல்தான் சாத்தியமாயிற்று. ஆனா நம்ம இந்தியாவில்...? நாமெல்லாம் அப்பவே அப்பிடி !

Comments

Popular Posts