என் இனிய சுஜாதா - பிரளாத பிம்பங்கள் !


இணையம் மற்றும் எழுதும் தளங்களில் திருமதி சுஜாதாரங்கராஜன் அவர்களின் ( தினகரன் இணைப்பில் ) பேட்டிதான்தான் ஹாட் டாக்.

‘சுஜாதா ஒழிக’ என்று சொல்லாத ஒன்றுதான் பாக்கி.

ஏன் சொல்லனும் ?

திருமதி சொல்லியிருப்பது எல்லா மனைவிமார்களும் வைக்கும் புகார்தான், ஒன்றுமே புதுசில்லை.

வீட்டின் வேலைகள் அத்தனையும் எடுத்துப் போட்டுக்கொண்டு ஜெயிக்கும் பெண்களின் உலகம் வேறு !

வீட்டைத்தவிரவும், உலகம் ஒன்றை எடுத்துக் கொண்டு உழைக்கும் ஆண்களின் உலகம் நிச்சயம் வேறுதான்.

கட்டுரை வருவதற்கு முன்னரே சிவராமன் சொல்லிவிட்டார் இது நிறைய புரிதல்களை ஏற்படுத்திக் கொண்டு பின்னரே எழுதப்பட்ட்து என்று !



ஆணின் உலகம், தனிதான் !

வேலை, அது சம்பந்தப்பட்டவர்கள், அலுவலக நண்பர்கள், அலுவலக அல்லாத நண்பர்கள், ......இப்படி ஒரு உலகம்.

வீடும், வீடு சார்ந்தவர்களுடனும் அவ்வளவாக பிடிப்பு இல்லாத நபர்களும் இருக்கிறார்கள்.

சினிமா போன்ற துறைகளில் தான், தன் தொழில் என்று இருக்கும் பலரை பர்க்க முடியும்.

நடிகர் திலகமே ஒரு பேட்டியில் ( அவரது சரிதையில் என்று ஞாபகம் ), என் தம்பி என் தொழில் சார்ந்த விஷயங்களிலும், என் மனைவி என் மகன்கள் – குடும்பம் சார்ந்த விஷய்ங்களையும் பார்த்துக் கொண்ட்தால் தான் என்னால் என் தொழிலில் கவனம் செலுத்த முடிந்தது என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆக கணவன் ஒரு பக்கமும், மனைவி இன்னொரு பக்கமுமாக, பார்வை கொண்டிருந்தால்தான் குடும்பம் கரை ஏறும்.

இது திருமதி அவர்களுக்கும் தெரியும்.

எப்பவுமே பிறந்த வீட்டில் கனவனை குறை சொல்லி குதூகலிப்பது மனைவியர் பாங்கு. நம்மையெல்லாம் அவர் கூடப் பிறந்த பிறப்புகளாய் எண்ணி, கணவனைபற்றி சொல்லியுள்ளார் .


அவ்வளவுதான்.

இதை யாரு தப்பாய் எடுத்துக்க வேண்டியதில்லை.


சுஜாதா, சுஜாதாதான் !

Comments

Popular Posts