சொர்க்கம், நரகம் மற்றும் சுப்பிரமணிய சுவாமி



சொர்க்கம் நரகம் இரண்டில் இதில்  எது பெரியது என்பது பற்றி ஒரு பிரச்சினை வந்தது.
 
கடவுளுக்கு சொர்க்கம் சார்பாக வாதாட ஆள் கிடைக்கவில்லை. அவரே வாதாட முன் வந்தார்.

சாத்தானுக்கோ வேறு மாதிரி பிரச்சினை.

எல்லா வக்கீல்களும் நரகத்தில்தான் இருந்தார்கள், ஆனால் கடவுளுக்கு எதிராக வாதாட ஒருவரும் முன் வரவில்லை.

“சுப்பிரமணிய சுவாமி ஒருத்தர். எப்பிடி இருந்தாலும் இங்கதான் வருவாரு, அவர் வரும்வரை வழக்கை ஒத்தி வைக்கனும்” சாத்தான் கேட்டுக்கொண்டது.

“அதற்கு ரொம்ப  நாள்கூட ஆகலாமே? தவிர அவரும் மறுத்தால்?” என்று கிடிக்கிபிடி போட்டார் கடவுள்.
சாத்தானுக்கு குழப்பம், “ என்ன செய்யலாம், நீங்களே சொல்லுங்கள்?”
கடவுள் சொன்னார், “ ஆள் அனுப்பி அவரிடம் தகவல் சொல்லி, ஏன் வழக்கை எடுத்துக் கொள்ளச் சொல்லக் கூடாது?”

சாத்தானும் ஒப்புக் கொண்டது. தனது ஆள் ஒருத்தரை சு.சாமியிடம் பேசி அழைத்துவர அனுப்பியது.

ஆனால் போன ஆள் திரும்பி வரவேஇல்லை.
வருஷக் கணக்கில் குழம்பிப்போனார்கள் கடவுளும், சாத்தானும்.

என்னாச்சு தங்களது வழக்கு நிலுவையில் இழுத்தடிக்கிறதே என்று  சுப்பிரமணிய சாமியை அழைத்து வரப்போன ஆளுடன் தொடர்பு கொண்ட போது, சாத்தானின் ஆள் சொன்ன பதில், “அய்யோ இந்த  ஆள் தொல்லை தாங்க முடியல, அதெப்பிடி அந்த உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு உன்னால் வர முடிஞ்சுது, உனக்கு வேற எங்கெல்லாம் தொடர்பு இருக்கு, என்னல்லாம் அக்கவுண்ட் இருக்குன்னு கேட்டு எம்மேல ஒரு கேசு போட்டுட்டாரு, அது ஹியரிங் முடியாம நான் எப்பிடி ரிடர்ன் ஆவறது?”
 
கடவுள் காண்டாயிட்டாரு, “ சரி வேற ஆள் பாப்போம் , இனி அவன் வர மாட்டான்”

“என்ன இப்பிடி சொல்டீங்க, அப்போ என் ஆளு?” சாத்தானுக்கு சந்தேகம்

“விஷயம் தெரியாம பேசாத. அந்தாளு போட்ட கேசு எதாச்சும் இதுவரைக்கும் முடிஞ்சுருக்கா?”

Comments

Popular Posts